செவிலியர்கள் உண்ணாநிலை போராட்டம்
24 Dec 2025, 4:16 pm
<p><strong>செவிலியர்கள் உண்ணாநிலை போராட்டம் </strong></p>
<p>திருவண்ணாமலை, டிச.24- தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.18 முதல் சென்னையில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு ஆதரவாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதனன்று (டிச.24) 7ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள், கண்ணில் கறுப்பு துணி கட்டி முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து பெரியார் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பரிதிமால் கலைஞன், மாவட்ட செயலாளர் பிரபு, வருவாய் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரகுபதி, மாநில நிர்வாகி பார்த்திபன், கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர் புனிதா, எம்ஆர்பி செவிலியர் சங்க மாநில பொருளாளர் ஹேமச்சந்திரன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம். சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.</p>
