தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி திருப்பூரில் காத்திருப்புப் போராட்டம்

20 Dec 2025, 3:38 pm
தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி  திருப்பூரில் காத்திருப்புப் போராட்டம்
<p>திருப்பூர், டிச.20- தொகுப்பூதிய செவிலியர்களைப் பணி &nbsp;நிரந்தரம் செய்யக் கோரி சனியன்று எம்ஆர்பி &nbsp;செவிலியர்கள் காத்திருப்புப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். &nbsp;திருப்பூரில் எம்.ஆர்.பி செவிலியர் சங்க &nbsp;தலைவர் மீனா தலைமையில் திருப்பூர் தாரா புரம் சாலையில் உள்ள பெரிச்சிப்பாளையம் &nbsp;அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சனிக்கிழமை முதல் எம்.ஆர்.பி.செவிலி யர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தைத் &nbsp;துவங்கினர். இதில், தேர்தல் வாக்குறுதிப்படி &nbsp;எம்.ஆர்.பி., தொகுப்பூதிய செவிலியர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண் டும். புதிதாக துவங்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உட்பட அரசு மருத் துவமனைகளில் காலியாக உள்ள செவி லியர் பணியிடங்களை எம்.ஆர்.பி., தொகுப் பூதிய செவிலியர்களைக் கொண்டு நிரப்ப &nbsp;வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் என்ற &nbsp;சென்னை நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதை திரும் பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும், &nbsp;தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை &nbsp;தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட &nbsp;போவதாக தெரிவித்துள்ளனர். இதில் துணைத் தலைவர் திலகவதி, செயலாளர் எபி &nbsp;உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தை ஆதரித்து மாதர் &nbsp;சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பவித்ராதேவி &nbsp;பேசினார். உடன் மாதர் சங்க நிர்வாகிகள் ஷகிலா, நிஷா, மினி ஆகியோர் உடனிருந்த னர். உடுமலை: சென்னையில் போராட்டம் நடத்திய செவி லியர்களை கைது செய்ததைக் கண்டித்து உடு மலையில் வெள்ளியன்று செவிலியர்கள் மற் றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் உடு மலை அரசு மருத்துவமனை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு &nbsp;அரசு ஊழியர் சங்க உடுமலை வட்டக்கிளை செயலாளர் வெங்கிடுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் &nbsp;செயலாளர் அம்சராஜ், மாவட்டச் செயலளர் &nbsp;பாலசுப்பிரமணியன், எம்ஆர்பி செவிலியர் சங்க நிர்வாகி சரண்யா ஆகியோர் கண்டன &nbsp;உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.