முந்தய பக்கம்

துணைநிலை ஆளுநர் மாளிகையை நோக்கி செவிலியர்கள் ஊர்வலம்

16 Feb 2026, 2:37 pm
துணைநிலை ஆளுநர் மாளிகையை நோக்கி செவிலியர்கள் ஊர்வலம்
<p><strong>துணைநிலை ஆளுநர் மாளிகையை நோக்கி செவிலியர்கள் ஊர்வலம்</strong></p> <p>புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் தேசிய சுகாதார இயக்க செவிலியர்கள், ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சிஐடியு தொழிற்சங்கம் தலைமையில் &nbsp;தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி காமராஜர் சிலையில் இருந்து &nbsp;திங்கள்கிழமை ஆளுநர் மாளிகையை நோக்கி நடைபெற்ற ஊர்வலத்தை காவல்துறையினர், நேரு வீதியில் தடுப்பு வேலிகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். பின்னர் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் திரளான செவிலியர்கள் ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram