தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூரில் பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் கருப்புத்துணி கட்டி போராட்டம்

24 Dec 2025, 4:16 pm
திருப்பூரில் பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் கருப்புத்துணி கட்டி போராட்டம்
<p><strong>திருப்பூரில் பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் கருப்புத்துணி கட்டி போராட்டம்</strong></p> <p>திருப்பூர், டிச.24- தொகுப்பூதிய செவிலி யர் அனைவரையும் பணி நிரந் தரம் செய்யக் கோரி தொடர் காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டு வரும் செவி லியர்கள் புதனன்று கண் ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். &nbsp;திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சனியன்று முதல் எம்.ஆர்.பி &nbsp;செவிலியர் சங்கத் தலைவர் மீனா தலைமை யில் செவிலியர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், தேர்தல் வாக்குறுதிப்படி எம்.ஆர்.பி., &nbsp;தொகுப்பூதிய செவிலியர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புதிதாக &nbsp;துவங்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லுாரி மருத் துவமனை உட்பட அரசு மருத்துவமனைக ளில் காலியாக உள்ள செவிலியர் பணியி டங்களை எம்.ஆர்.பி., தொகுப்பூதிய செவிலி யர்களை கொண்டு நிரப்ப வேண்டும். சம &nbsp;வேலைக்கு சம ஊதியம் என்ற சென்னை &nbsp;நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு &nbsp;செய்துள்ளதை திரும்பப் பெற வேண்டும் &nbsp;உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இப்போராட்டத்தின் ஐந்தாவது நாளான புதனன்று தமிழ்நாடு &nbsp;செவிலியர்கள் மேம் பாட்டு &nbsp;சங்கத்தினர் கருப்புப்பட்டை அணிந் தும், கண்களில் கருப்புத் துணி கட்டி மனித சங்கிலி அமைத்து கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதில் துணைத்தலைவர் திலகவதி, செயலாளர் எபி உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். செவிலியர்களின் போரட்டத்திற்கு ஆத ரவாக அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டு போராட்டத்தை வாழ்த்திப் பேசி னார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.