தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தற்காலிக நியமனத்தை கைவிடக் கோரி செவிலியர்கள் உண்ணாநிலைப் போராட்டம்

30 Sept 2026, 10:55 pm
தற்காலிக நியமனத்தை கைவிடக் கோரி செவிலியர்கள் உண்ணாநிலைப் போராட்டம்

தற்காலிக நியமனத்தை கைவிடக் கோரி செவிலியர்கள் உண்ணாநிலைப் போராட்டம்

சென்னை, செப். 30 -அரசு மருத்துவமனைகளில் தற்காலிக செவிலியர் நியமனத்தை கைவிடக்கோரி புதனன்று (செப்.30)சென்னையில் செவிலியர்கள் உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்தினர்.

அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் (எம்ஆர்பி) மூலம் இடஒதுக்கீட்டு முறையில் செவிலியர்கள் நிரப்பப்படுகின்றனர். தற்போது இடஒதுக்கீட்டை மறுத்து மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக 4 ஆயிரத்து 724 செவிலியர்களை 11 மாத ஒப்பந்த முறையில் தற்காலிகமாக நிரப்ப வெளியிட்டுள்ள அரசாணையை கைவிட வேண்டும். செவிலியர் பயிற்றுநர்களையும் ஒப்பந்த முறையில் பணியமர்த்த கூடாது, பணியிட நிரவலைக் கைவிட வேண்டும், ஒப்பந்த செவிலியர்கள், மற்றும் 2,500 செவிலியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி செவிலியர்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர்.

செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் நே. சுபீன், “கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சரிடம் முறையிட்டால் செயலாளரிடம் முறையிட சொல்கிறார்; செயலாளர் எங்களை சமாதானப்படுத்தும் நோக்கில் இருக்கிறாரே தவிர, பிரச்சனைக்கு தீர்வு காண முன்வரவில்லை. அரசு பிரச்சனைக்கு தீர்வுகாணாவிடில் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்துவோம்” என்றார்.

சங்கத்தின் மாநிலத் தலைவர் கு. சசிகலா தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் டி. லதா எம்எல்ஏ, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. பாஸ்கரன்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ம. சித்ரகலா, செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் பொருளாளர் ச. ஹேமச்சந்திரன் உள்ளிட்ட தோழமைச் சங்கத் தலைவர்கள் பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.