திருவாரூரில் 3 ஆவது நாளாக செவிலியர்கள் போராட்டம்
21 Dec 2025, 3:21 pm
<p><strong>திருவாரூரில் 3 ஆவது நாளாக செவிலியர்கள் போராட்டம்</strong></p>
<p>திருவாரூர், டிசம்பர்.21- திருவாரூர் மருத்துவக் கல்லூரி வளாகம் முன்பு தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட பொருளாளர் மகேஸ்வரி தலைமையில் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்கள் பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டம் 3 ஆம் நாளாக ஞாயிறன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, போராட்ட களத்திற்கு சென்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுதாகர், மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன், மாவட்டப் பொருளாளர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட நிர்வாகி தெட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர், செவிலியரின் கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி உரையாற்றினர். மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம் நிறைவு உரையாற்றினார். போராட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தொகுப்பூதிய செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
<p> </p>
