செவிலியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்
8 Jun 2026, 1:03 am
<p><strong>செவிலியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்</strong></p><p>கோவை, ஜூன் 7– அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் காலிப்பணி யிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் சனியன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச் சர் அருண்ராஜ். பல்வேறு கேள்விக ளுக்குப் பதிலளித்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தில் பல்வேறு கட்சிகளிலி ருந்து முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பல ரும் தொடர்ந்து இணைந்து வருவ தாக குறிப்பிட்ட அவர், 108 தொகு திகளில் டெபாசிட் இழந்த அதிமுக வின் பொதுச்செயலாளர் எடுத்த தவறான முடிவுகளே அக்கட்சியி னர் அதிருப்தியடையக் காரணம். 2026 தேர்தலில் பாஜகவுடன் இணைந்ததும், அதன் பின்பு திமுக வுடன் கூட்டணி வைக்க நினைத்த தும் தவறான அரசியல் நகர்வுகள். மேலும், அண்ணாமலை தொடங்கி யுள்ள புதிய இயக்கம் குறித்துப் பேசிய அவர், பாஜக என்ற கறை படிந்த எந்த இயக்கத்தையும் மக்கள் ஏற்க மாட்டார்கள். இது பல முறை தோல்வியடைந்த ஒரு படத் தின் ரீ-ரிலீஸ் போன்றது. தமிழக அரசு மருத்துவமனை களில் 99 சதவீதம் மருத்துவர் பற் றாக்குறை இல்லை. பயிற்சி மற்றும் முதுநிலை மருத்துவர்கள் போது மான அளவில் உள்ளனர். செவிலி யர் பற்றாக்குறையை விரைவில் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப் படும், என்றார். தொடர்ந்த செய்தி யாளர்கள் சமீபத்திய அமைச் சரவைக் கூட்டத்தில் 90 நிமிடங்க ளில் 436 திட்டங்கள் குறித்து ஆலோ சிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டுக்கான நீண்டகால தொலைநோக்கு திட்டங்கள் அடங்கிய விரிவான கையேடுகள் வழங்கப்பட்டுள்ளது. அதை முழுமையாக ஆராய்ந்த பின்னரே அதனை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதாக விளக்கமளித் தார். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களில் தேசிய மருத் துவக் கழகம் நிர்ணயித்த அதிக கட்-ஆப் மதிப்பெண் காரணமாக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங் களை நிரப்ப முடியவில்லை என் றும், மாநில அரசே கட்-ஆப் மதிப் பெண்ணை குறைத்து இடங் களை நிரப்பும் அதிகாரத்தைப் பெற உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பேருதவியாக உள்ள 7.5 சதவீத உள் ஒதுக் கீட்டை உயர்த்துவது குறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோ சித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார். மேலும், வரவிருக்கும் மழைக் காலங்களில் தொற்றுநோய்கள் பர வாமல் தடுப்பதற்கான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மருத்துவத் துறையின் அடிப் படைத் தேவைகள் குறித்து, அனைத்து மருத்துவக் கல்லூரி டீன் கள் மற்றும் இணை இயக்குநர்களு டன் அடுத்த வாரம் சிறப்பு ஆலோ சனைக் கூட்டம் நடைபெற உள்ள தாகவும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.</p>
