நுள்ளிவிளை ரயில்வே பாலப்பணி துவக்கம் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
22 Jan 2026, 2:57 pm
<p><strong>நுள்ளிவிளை ரயில்வே பாலப்பணி துவக்கம் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு </strong></p>
<p>நாகர்கோவில். ஜன. 22- குமரி மாவட்டம் நுள்ளிவிளை ரயில்வே பாலப்பணி துவக்கப்பட்டதால் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் இடையே இரட்டை இருப்புப் பாதை அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாலம் எண் 262 நுள்ளிவிளை பகுதியில் புதிய பாலம் கட்டும் பணி வரும் ஜனவரி 26ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக பழைய பாலம் உடைக்கப்பட உள்ளது. இதன் காரணமாக, தோட்டியோடு – இரணியல் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்ற விவரங்கள்: தோட்டியோட்டில் இருந்து திங்கள் நகருக்கு செல்லும் குறிப்பிட்ட அரசு பேருந்துகள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் பரசேரி வழியாக கொன்னக்குழிவிளை நான்கு வழிச் சாலையில் சென்று, பேயன்குழி ஆற்றுப் பாலம் வழியாக பேயன்குழி பாலம் சந்திப்பை அடைந்து செல்ல வேண்டும். அனைத்து கனரக வாகனங்களும் தோட்டியோடு, தக்கலை வழியாக இரணியல் சென்று திங்கள் நகருக்கு செல்ல வேண்டும். திங்கள் நகரிலிருந்து நாகர்கோவிலுக்கு வரும் குறிப்பிட்ட அரசு பேருந்துகள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் பேயன்குழி ஆற்றுப் பாலம் வழியாக நான்கு வழிச் சாலைக்கு வந்து, கொன்னக்குழிவிளையில் இடது பக்கமாக செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. </p>
