வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி உபி ரிகந்த் அனல் மின் நிலையத்தில் வெடித்த ‘டூல்ஸ் டவுன்’ போராட்டம்
13 May 2026, 12:02 am

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி உபி ரிகந்த் அனல் மின் நிலையத்தில் வெடித்த ‘டூல்ஸ் டவுன்’ போராட்டம்

முறையான ஊதியம் கோரி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கிளர்ச்சி!

வேலைநிறுத்தம் 11

சோன்பத்ரா, மே 12 - இந்தியாவின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா தொழில் மண்டலத்தில், உழைக்கும் வர்க்கத்தின் உரிமைப் போர் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. தேசிய அனல் மின் கழகத்தின் (NTPC) ரிகந்த் சூப்பர் அனல் மின் நிலையத்தில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களின் வியர்வையை யும் உழைப்பையும் சுரண்டும் நிர்வா கத்திற்கும், பாரபட்சமான ஊதியக் கொள்கை களுக்கும் எதிராகக் களமிறங்கியுள்ளனர். “நாட்டின் இருளைப் போக்க நாங்கள் வியர்வை சிந்தி உழைக்கிறோம்; ஆனால் அதற்குப் பதிலாக எங்களுக்குக் கிடைப்பது என்ன? சமூகப் பாதுகாப்பு இல்லை, முறையான ஊதியமும் இல்லை. ஹரியானா மாநிலத் தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கும் வரை ரிகந்த் நிலையத்திலிருந்து மின்சாரம் தடையின்றிச் செல்ல அனுமதிக்க மாட்டோம்!” - இது ஏப்ரல் 11 அன்று ரிகந்த் மின் நிலைய வாயிலில் ‘டூல்ஸ் டவுன்’ (Tools Down) போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவரின் ஆவேசக் குரல்.

ரிகந்த் அனல் மின்நிலையம் : ஒரு பார்வை

உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் ரிகந்த்நகரில் அமைந்துள்ள இந்த மின் நிலையம், 3,000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்டது. என்.டி.பி.சி- யின் மிக முக்கியமான இந்த ஆலையில் சுமார் 900 நிரந்தரப் பணியாளர்களும், 3,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழி லாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்பிலேயே ஆலை இயங்கி வந்தா லும், அவர்களின் உரிமைகள் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகின்றன.

பிப்ரவரி 12 முதல் ஏப்ரல் 1 வரை: தொடரும் முழக்கங்கள்

ஒன்றிய அரசின் மின்சாரத் திருத்தச் சட்டம் 2025 மற்றும் தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகளுக்கு எதிராக பிப்ரவரி 12 அன்று நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ரிகந்த் தொழி லாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர். அன்று தொடங்கிய நெருப்பு, ஏப்ரல் 1 “கருப்பு தினமாக” உருவெடுத்தது.

• சமூகப் பாதுகாப்பு அச்சம்: புதிய தொழிலாளர் சட்டங்களால் தங்களின் வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் காப்பீட்டுப் பலன்கள் பறிக்கப்படும் எனத் தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.

• ஊதியப் பாரபட்சம்: ஏப்ரல் 1 அன்று ஹரி யானா அரசு அறிவித்த ஊதிய உயர்வு, ரிகந்த் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. “அண்டை மாநிலமான ஹரியானாவில் ஊதியம் உய ரும்போது, உத்தரப் பிரதேசத் தொழிலா ளர்களுக்கு மட்டும் 11,000 ரூபாயிலேயே ஊதியம் தேங்கி நிற்பது ஏன்?” என்ற கேள்வி முழக்கமாக வெடித்தது.

ஏப்ரல் 11 : முடங்கியது கட்டுமானப் பணிகள்

தொடர் வாயிற்கூட்டங்களைத் தொட ர்ந்து, ஏப்ரல் 11 அன்று தொழிலாளர்கள் ‘டூல்ஸ் டவுன்’ போராட்டத்தை அறிவித்து, ஆலையின் பிரதான வாயிலில் தர்ணா நடத்தினர்.

• முறையற்ற ஊதியக் கணக்கீடு : ஒரே மாதத்தில் சில நாட்களுக்கு 12 மணி நேர வேலைக்கும், சில நாட்களுக்கு 8 மணி நேர வேலைக்கும் எனத் தன்னிச்சை யாக ஊதியம் கணக்கிடப்படுவதாகத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.

•கமிஷன் முறைகேடுகள்: அரசு நிர்ண யித்த ஒரு நாள் ஊதியம் ₹541 ஆக இருக்கும் நிலையில், ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர்களுக்கு ₹500 மட்டுமே வழங்கி, அதிலும் 12 சதவீத பி.எப் தொகை யைப் பிடிப்பதாகப் புகார் எழுந்தது.

•அடக்குமுறை: உரிமைக் குரல் எழுப்பும் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்ப டுவதாகக் கூறி, நூற்றுக் கணக்கான தொழி லாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட னர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த என்.டி.பி.சி மனிதவள மேம்பாட்டு அதி காரிகள் மற்றும் சி.ஐ.எஸ்.எப் படையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பி.எம். எஸ் சங்கத் தலைவர்களின் முன்னிலை யில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், நிலுவை ஊதியம் உடனடியாக வழங்கப் படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

இடைக்கால வெற்றி: 21 சதவீத ஊதிய உயர்வு

ரிகந்த் உள்ளிட்ட உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் வெடித்த போராட்டங்களின் விளைவாக, ஏப்ரல் 15 அன்று உத்தரப்பிரதேச அரசு தொழி லாளர்களுக்கு 21 சதவீத இடைக்கால ஊதிய உயர்வை அறிவித்தது. இது தொழி லாளர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த ஒரு பகுதி வெற்றியாகக் கருதப்படுகிறது.

மே தின எழுச்சியும் தற்போதைய நிலையும்

மே 1 சர்வதேச தொழிலாளர் தினத்தில், ரிகந்த் ஆலை அருகே நடைபெற்ற பிரம்மா ண்ட பேரணியில் ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் பங்கேற்றனர். 8 மணி நேர வேலை, இரட்டிப்பு கூடுதல் நேர ஊதியம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகிய கோரிக்கைகள் மீண்டும் வலுவாக முன் வைக்கப்பட்டன. தற்போது ஆலை இயங்கி வந்தாலும், ஒப்பந்ததாரர்கள் 21 சதவீத ஊதிய உயர்வை முழுமையாக வழங்கு கிறார்களா என்பதைத் தொழிலாளர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். சோன் பத்ரா தொழில் மண்டலத்தில் நிலவும் இந்தப் பதற்றம், தொழிலாளர் உரிமைகள் மீட்கப்ப டும் வரை ஓயாது என்பதையே காட்டுகிறது. லெப்ட் வியூஸ்