என்டிபிசி கோர்பா ஆலை ஒப்பந்தத் தொழிலாளர்களின் அதிரடி முற்றுகை ‘ஆற்றல் தலைநகரை’ உலுக்கிய 12 மணி நேரக் கட்டாய உழைப்புச் சுரண்டல் ராய்ப்பூர், மே 22- ஆந்திரா, ஒடிசா, குஜ
22 May 2026, 9:09 pm

என்டிபிசி கோர்பா ஆலை ஒப்பந்தத் தொழிலாளர்களின் அதிரடி முற்றுகை ‘ஆற்றல் தலைநகரை’ உலுக்கிய 12 மணி நேரக் கட்டாய உழைப்புச் சுரண்டல்

ராய்ப்பூர், மே 22- ஆந்திரா, ஒடிசா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைத் தொ டர்ந்து, சத்தீஸ்கர் மாநிலத்தின் புகழ் பெற்ற ‘ஆற்றல் தலைநகரம்’ (Urjadhani) என்று அழைக்கப்படும் கோர்பா (Korba) மாவட்டமும் கார்ப்ப ரேட் சுரண்டலுக்கு எதிரான தொழிலா ளர் வர்க்கத்தின் வர்க்கப் போராட்டக் களமாக மாறியுள்ளது. நாட்டின் மிக முக்கியப் பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல்மின் கழகத்தின் (NTPC) கோர்பா ஆலையில், பல்வேறு ஒப்பந்த நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழி லாளர்கள் தங்களின் அடிப்படை உழைப்பு உரிமைகளுக்காகவும், மனிதக் கண்ணியத்தை நசுக்கும் ஒப்பந்த முறைக்கு எதிராகவும் நடத்திய அதிரடி வேலைநிறுத்தப் போரா ட்டம், தொழிற்துறையின் உழைப்புச் சுரண்டல் கட்டமைப்பை அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது.

ஒன்றிய அரசு நிறுவனமான என்டிபிசி-யின் கோர்பா அனல்மின் நிலையத்தில், ஆலையின் பிர தான இயக்கங்கள் மற்றும் உள்கட்ட மைப்புப் பணிகளில் இரவு பகலாக உழைக்கும் ஒப்பந்தத் தொழிலாளர் கள் தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஏப்ரல் 8, 2026 அன்று அதிரடி வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.

‘நவீன கால அடிமைமுறை’க்கு எதிரான வாயில் முடக்கப் போராட்டம்

ஒப்பந்த நிறுவனங்களால் ஒன்றிய அரசின் தொழிலாளர் நலச் சட்டங்கள் மற்றும் விதிகள் திட்டமிட்டு மீறப்படுவதைக் கண்டித்து, தொழி லாளர்கள் ஆலையின் 2-ஆவது நுழை வாயில் அருகே திரண்டு மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை நடத்தி னர். ஆலைக்குள் எவ்விதப் போக்கு வரத்தும் நடைபெறாதவாறு நுழை வாயிலைத் தொழிலாளர்கள் முற்றி லும் முடக்கியதைத் தொடர்ந்து, அங்கு சிஐஎஸ்எப் மற்றும் உள்ளூர் காவல் படையினர் பெருமளவில் குவிக்கப் பட்டனர்.

ஆலையின் நிரந்தரத் தொழிலாளர் களுக்கு இணையான அதே ஆபத்தான மற்றும் கடினமான பணிகளைத் தங்க ளைச் செய்யக் கட்டாயப்படுத்தும் நிர்வாகமும் ஒப்பந்ததாரர்களும், ஊதியத்தில் மட்டும் கடுமையான பார பட்சம் காட்டுவதாகத் தொழிலா ளர்கள் குற்றம்சாட்டினர். ஒன்றிய அரசு அறிவித்துள்ள விதிகளின்படி, தங்களை 8 மணி நேரத்திற்கு மேல் சட்டவி ரோதமாக வேலை வாங்கிக் கொண்டு, அதற்கான கூடுதல் நேர இரட்டிப்பு ஊதியத்தை வழங்காமல் ஏமாற்றி வரு வதாகப் போராட்டக் களத்தில் தொழி லாளர்கள் முழக்கமிட்டனர். முறை யான ஊதியக் கணக்கீடுகள் இல்லாமை, தன்னிச்சையான சம்பளப் பிடித்தங்கள் மற்றும் மாதக் கணக்கில் தாமதமாகும் ஊதியம் ஆகியவற்றுக்கு எதிராகப் பெண் தொழிலாளர்களும் பெருமளவில் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஒப்பந்த உழைப்பு முறையும் கூட்டுச் சூழ்ச்சியும்

தொழிலாளர்கள் தங்களின் பாது காப்புத் தொப்பிகளை (Helmets) ஏந்தி யவாறு ஆலை வாயிலில் திரண்ட வீடி யோக்கள் சமூக ஊடகங்களில் வெளி யாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பி யுள்ளன. இந்த ஒப்பந்த உழைப்பு முறை யானது தங்களைச் சுரண்டும் ஒரு “நவீன கால அடிமைமுறை” என்று தொழிலாளர்கள் தங்களின் வர்க்கக் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒப்பந்த நிறுவனங்களின் இத்த கைய சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்து ஆலையின் உயர் மேலாண் ண்மையிடம் பலமுறை எழுத்துப்பூர்வ மாகப் புகார் அளித்தும், ஒப்பந்த தாரர்களுக்கும் ஆலை நிர்வாகத்தின் சில பிரிவினருக்கும் இடையே உள்ள நெருக்கமான கூட்டு காரணமாக அக் கோரிக்கைகள் பல ஆண்டுகளாகப் புற க்கணிக்கப்பட்டு வந்ததாகத் தொழி லாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கோர்பா தொழில் மண்டலத்தின் பின்னணி

மின் உற்பத்தி, நிலக்கரிச் சுரங்கம் மற்றும் அலுமினிய உற்பத்தி ஆகிய வற்றில் இந்தியாவின் மிக முக்கியத் தொழில் மண்டலமாகத் திகழும் கோர்பா மாவட்டத்தில், அண்மைக் காலமாக ஒப்பந்தத் தொழிலாளர்களின் அதிருப்தி பெருமளவு அதிகரித்து வரு கிறது. என்டிபிசி கோர்பா ஆலையின் இந்த அதிரடி கிளர்ச்சிக்கு முன்னதாக கோர்பாவில் உள்ள ‘அதானி பவர்’ ஆலை ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூடு தல் நேர ஊதியப் பிரச்சனைக்காக மா பெரும் போராட்டங்களை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, ‘பாரத் அலுமினி யம் கம்பெனி லிமிடெட்’ (BALCO) நிறு வனத்திலும் தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து மூன்று நாட்கள் உற்பத்தியை முடக்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரே தொழில் மண்டலத்தில், ஒரே மாதிரியான கோரிக்கைகளுக்காக அடுத் தடுத்து வெடித்துள்ள இப்போராட்டங் ங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக ஒப்பந்த முறையைப் பயன்படுத்தி, உழைப்பாளர்களின் கூட்டுப் பேரம் பேசும் உரிமைகளை எவ்வாறு நசுக்குகின்றன என்பதைத் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளன.

தற்போதைய கள நிலவரம்

போராட்டத்தைத் தொடர்ந்து ஆலை நிர்வாகப் பிரதிநிதிகள், ஒப்பந்த முகமைகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலை யில் தொழிலாளர்களுடன் சிலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எனினும், ஒன்றிய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை முழுமையாக அமல்படுத்துவது மற்றும் 8 மணி நேர வேலை நாளை உறுதி செய்வது போன்ற பிரதான கோரிக்கை களில் ஒப்பந்த நிறுவனங்கள் இன்னும் உறுதியான எழுத்துப்பூர்வமான வாக்குறுதிகளை அளிக்கவில்லை. நிர்வாகத் தரப்பிலிருந்து தற்காலிக சமரச முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு, வெளியில் இருந்து பார்க்கும் போது உற்பத்திப் பணிகள் தற்போதை க்கு இயல்பாக நடப்பது போலத் தோன்றினாலும், தொழிலாளர்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனை கள் இன்னும் முழுமையாகத் தீர்க்கப் படாததால், ஆலை வளாகத்திற்குள் தொ ழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியும் பதற்றமும் தொடர்ந்து நீடித்து வருகிறது. லெப்ட் வியூஸ்