பகல்பூர் என்டிபிசி அனல் மின் நிலையத் தொழிலாளர்களின் அதிரடி 12 மணி நேரக் கட்டாய உழைப்பிற்கு எதிராகவும், ‘நடத்தை சான்றிதழ்’ அராஜகத்திற்கு எதிராகவும் கொதித்தெழுந்த
16 May 2026, 10:01 pm

பகல்பூர் என்டிபிசி அனல் மின் நிலையத் தொழிலாளர்களின் அதிரடி

12 மணி நேரக் கட்டாய உழைப்பிற்கு எதிராகவும், ‘நடத்தை சான்றிதழ்’ அராஜகத்திற்கு எதிராகவும் கொதித்தெழுந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள்!

வேலைநிறுத்தம் 20

பகல்பூர், மே 16- ஆந்திரா, ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களைத் தொ டர்ந்து, பீகாரின் புகழ்பெற்ற தொழில் நகரான பகல்பூரிலும் கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குரல் பல மாக ஒலித்துள்ளது. பகல்பூர் மாவட்டம் கஹல்கானில் (Kahal gaon) அமைந்துள்ள என்டிபிசி (NTPC) சூப்பர் அனல் மின் நிலை யத்தில், தங்களின் அடிப்படை உரி மைகளுக்காகவும், நிர்வாகத்தின் தொடர் அலைக்கழிப்புகளுக்கு எதி ராகவும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நடத்திய அதிரடி வேலைநிறுத்தப் போராட்டம், அம்மாநிலத்தின் தொழி லாளர் இயக்கத்தில் ஒரு புதிய திருப் பத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தொ டரின் 20-ஆவது பகுதியில், இந்தத் தீரம்மிக்க போராட்டத்தின் பின்ன ணியை விரிவாகக் காண்போம்.

பீகார் மாநிலம் பகல்பூர் மாவட் டத்தின் கஹல்கானில் அமைந்துள்ள என்டிபிசி (NTPC) சூப்பர் அனல் மின் நிலையம், கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் 2,340 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு மாபெரும் பொதுத்துறை நிறுவன மாகும். பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் இந்த ஆலையின் பின்னணியில், கடு மையான உழைப்புச் சுரண்டலும் நிர் வாக அராஜகமும் நீண்டகாலமாகத் தொடர்ந்து வருகின்றன.

ஆலையின் உழைப்பு அமைப்பும் - தொடரும் கொந்தளிப்பும்

இந்த அனல் மின் நிலையத்தில் கோர் ஆபரேஷன் மற்றும் மேலாண் மைப் பிரிவுகளில் சுமார் 400 முதல் 500 வரையிலான நிரந்தரப் பொறியா ளர்கள் மற்றும் அதிகாரிகள் பணி யாற்றி வரும் வேளையில், நிலக்கரி மற்றும் சாம்பல் கையாளுதல், ஆலை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற கடினமான மற்றும் அபாய கரமான பணிகளில் 2,500 முதல் 3,500 வரையிலான ஒப்பந்தத் தொழிலா ளர்கள் தங்களின் ரத்தத்தை வியர் வையாகச் சிந்தி உழைத்து வரு கின்றனர்.

கஹல்கான் ஆலைக்கு மிக நீண்ட, வன்முறை நிறைந்த தொழிலாளர் போராட்ட வரலாறு உண்டு. கடந்த 2006-2007-இல் விரிவாக்கப் பணி களின் போது வெடித்த வேலை நிறுத்தம், 2008-இல் மின் பற்றாக் குறைக்கு எதிராகப் போராடிய உள்ளூர் மக்கள் மீது நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியானது, 2019-இல் நிலம் இழந்த குடும்பங்களுக்கு நிரந்தர வேலை கோரி ரயில் மறியல் எனப் பல போராட்டங்களை இந்த ஆலை சந்தித்துள்ளது. ஆனால், முந்தைய போராட்டங்கள் நிலம் இழந்த மக்களின் உரிமை களுக்காக இருந்த நிலையில், தற்போதைய 2026-ஆம் ஆண்டின் போ ராட்டம் முழுக்க முழுக்கத் தொழி லாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் கண்ணியம் சார்ந்த வர்க்கப் போ ராட்டமாக உருவெடுத்துள்ளது.

12 மணி நேரச் சுரண்டலும் - சமூக ஊடக எழுச்சியும்

“என்டிபிசி ஆலையின் பரா மரிப்புப் பிரிவு தொழிலாளர்கள் அனைவரும் தற்போது அதிரடி வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். இனி இங்கு எந்த வேலையும் நடக் காது!” - சமூக ஊடகங்களில் பரவிய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஒன்றின் குரல் வடிவம் இதுவாகும். 8 மணி நேரமாக இருந்த தங்களின் வேலை ஷிஃப்ட்டை, எவ்வித கூடுதல் ஊதிய முமின்றி சட்டவிரோதமாக 12 மணி நேரமாகக் கட்டாயப்படுத்தி உயர்த் ்திய நிர்வாகத்தின் தன்னிச்சையான போக்கிற்கு எதிராகவே பராமரிப்புத் துறை தொழிலாளர்கள் இந்த அதி ரடி வேலைநிறுத்தத்தை முன்னெ டுத்தனர். ‘யெல்லோ ஹெல்மெட்’ (#YellowHelmet) என்ற ஹேஷ்டேக் குடன் தொழிலாளர்கள் ஆலைக் குள்ளே நிலவும் போதிய குடிநீர் வசதி யின்மை, மோசமான காற்றோட்டம் மற்றும் முறையற்ற ஓய்வறை வசதிகளை ‘டிஜிட்டல் தணிக்கை’ (Digital Safety Audit) செய்து சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்தியது நிர்வாகத்திற்குப் பெரும் நெருக்க டியை ஏற்படுத்தியது.

‘நடத்தை சான்றிதழ்’ அராஜகமும் - மருத்துவப் பாகுபாடும்

என்டிபிசி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் (NTPC Contract Workers Union) சார்பில் பிப்ரவரி 6 அன்று ஆலை வாயிலில் (Bhader Gate) மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் தொழிலா ளர்கள் தங்களின் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தனர்:

l நடத்தை சான்றிதழ் கட்டாயம்: ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒருமுறை காவல் துறை அல்லது பழைய முதலாளிகளிடம் இருந்து ‘நடத்தை சான்றிதழ்’ (Charac ter Certificate) பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிர்வாகத்தின் அரா ஜக விதியைத் தொழிலாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். தொழி லாளர்கள் மத்தியில் தொழிற்சங்க உணர்வு ஏற்படுவதைத் தடுக்க வும், அவர்களைத் தன்னிச்சை யாக வேலைநீக்கம் செய்து அச்சு றுத்தவுமே இந்த விதி பயன்படுத் தப்படுவதாகத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர். இது நாடாளு மன்றக் குழுவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

l மருத்துவப் பாகுபாடு: நிரந்தரத் தொ ழிலாளர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகளுக்கு இணை யான மருத்துவப் பாதுகாப்பை தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களின் உரிமைக் குரலை உயர்த்தினர்.

காவல் துறையின் புதிய கட்டுப்பாட்டு உத்தி

பிப்ரவரி 21-இல் ஜார்க்கண்டின் பத்ராது அல்ட்ராடெக் தளத்தில் நிகழ்ந்த கொடூர விபத்தைத் தொ டர்ந்து, கஹல்கான் தொழிலா ளர்களின் பாதுகாப்பு குறித்த அச்ச மும் போராட்ட உணர்வும் மேலும் தீவி ரமடைந்தது. முந்தைய காலத்தைப் போலல்லாமல், தற்போதைய டிஜிட்டல் திரட்டலைக் கட்டுப்படுத்த பீகார் காவல் துறை, ஆலை வாயில்க ளில் 144 தடை உத்தரவை அமல் படுத்தியதோடு மட்டுமின்றி, ‘சைபர் ரோந்து’ மூலமாகத் தொழிலாளர்க ளின் சமூக ஊடகப் பதிவுகளையும் தீவிரமாகக் கண்காணித்து ஒடுக்க முயன்றது.

இருப்பினும், அதிகார வர்க்கத் தின் இத்தகைய புதிய அடக்கு முறை உத்திகளையும், கைது அச்சுறுத்தல்களையும் முறியடித்து, தங்களின் உரிமைகளுக்காகவும், மனிதக் கண்ணியத்திற்காகவும் என்டிபிசி ஒப்பந்தத் தொழிலாளர்கள் நடத்தி வரும் இந்தப் போராட்டம், ஆலை நிர்வாகத்தின் கார்ப்பரேட் அராஜகத்திற்கு எதிராக இன்னும் தணியாமல் தொடர்ந்து கொண்டி ருக்கிறது. (லெப்ட் வியூஸ்)