திருப்பூர் காட்டன் மார்க்கெட் அஞ்சலகத்தில் சர்வதேச சரக்கு முன்பதிவு மையம்
10 Dec 2025, 4:08 pm
<p><strong>திருப்பூர் காட்டன் மார்க்கெட் அஞ்சலகத்தில் சர்வதேச சரக்கு முன்பதிவு மையம்</strong></p>
<p>திருப்பூர், டிச.10 - திருப்பூரில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பார்சல் அனுப்ப வசதியாக திருப்பூரில் புதிய சர்வதேச முன்பதிவு மையம் துவங்கப் பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறையின் சர்வ தேச விரைவு அஞ்சல் மற்றும் பார்சல் சேவைகளை எளிதாக்கும் வகையில் திருப்பூர் கோட்டம், திருப்பூர் காட்டன் மார்க்கெட் துணை அஞ்சலகத்தில் புதிய சர்வதேச முன்பதிவு மையம் துவங்கப்பட்டுள்ளது. பின்னலாடை துறையின் தலைநகராக இருக்கும் திருப்பூரில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிற் கும் பார்சல் மற்றும் ஆவணங்கள் அனுப்பும் ஏற்றுமதியாளர்களுக்கு இந்த மையம் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் கோட்ட கண் காணிப்பாளர் பட்டாபிராமன் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியி ருப்பதாவது, சர்வதேச அஞ்சல் சேவை களை பெறுவதற்காக பொதுமக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சிர மத்தை குறைக்க சர்வதேச முன்பதிவு மையம் திருப்பூரில் துவங்கப்பட்டுள் ளது. இங்கு சுங்க அறிவிப்பு படிவங் களை பூர்த்தி செய்து பார்சல் அனுப் பலாம். இந்த நடைமுறைகளை தெரிந்து கொள்ள வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு அஞ்சல் உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் திருப்பூர் மற்றும் சுற்றி யுள்ள பல்லடம், மங்கலம், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏற்றும தியாளர்கள் எளிதாகவும், விரைவாக வும் தங்கள் சர்வதேச தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். மேலும் விரைவு அஞ்சல் சேவை, பதிவு செய்யப்பட்ட விமான அஞ்சல், விமான பார்சல், சிறு பொட்டலங்கள் மற்றும் ஆவணங்களுக்கான சேவைகள் உட் பட அனைத்து வகையான சர்வதேச அஞ்சல் சேவைகளும் அஞ்சல் துறை நிர்ணயத்துள்ள மலிவான கட்டணங்க ளில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பார்சல்களை அனுப்ப தேவையான தரமான பேக்கிங் பொருட்கள் இந்த மையத்திலேயே நியாயமான விலை யில் கிடைப்பதால் பொதுமக்கள் அதை பெறுவதற்கு தனியே வெளியே சென்று சிரமப்பட வேண்டியதில்லை. எனவே ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக் கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் சரக் குகளை அனுப்ப திருப்பூர் காட்டன் மார்க்கெட் துணை அஞ்சலகத்தில் துவக்கப்பட்டுள்ள சர்வதேச முன்பதிவு மையத்தை அனைத்து வேலை நாட்க ளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது.</p>
