நீட் தேர்வு மோசடி, போலி செய்திகளைத் தடுக்க புதிய இணையதளம்
16 Jun 2026, 8:43 pm

நீட் தேர்வு மோசடி, போலி செய்திகளைத் தடுக்க புதிய இணையதளம்

வினாத்தாள் கசிவால் ரத்து செய்யப்பட்ட நடப்பாண்டுக் ்கான நீட் இளநிலை மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், தேர்வு மோசடிகள், வினாத்தாள் கசிவு குறித்த வதந்திகள், போலி செய்திகளைத் தடுப்பதற்காகத் தேசிய தேர்வு முகமை புதிய அதிகா ரப்பூர்வ இணையத்தளத்தை அறி முகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில்,“ஒன்றிய அரசின் ‘மை கவ் (MyGov)’ தளத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய இணையப்பக்கத்தில், மாணவர்கள், பெற்றோர்கள் தேர்வு தொடர்பான ஏமாற்று வேலைகள் குறித்து நேரடி யாகப் புகார் அளிக்கலாம். குறிப்பாக டெலிகிராம், வாட்ஸ் அப் அல்லது இணையதளங்கள் வழியாக நீட் தேர்வு வினாத்தாள், விடைத்தாள்கள் உள்ளன எனக் கூறி வதந்தி பரப்புவோர் மீது புகார் அளிக்கலாம். தேர்வு உள்ளடக்கங்க ளை முன்கூட்டியே தருவதாகக் கூறி மாண வர்களிடமும், பெற்றோர்களிடமும் பணப் பறிப்பில் ஈடுபடும் இடைத்தரகர்கள் பற்றித் தெரிவிக்கலாம். தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் அல்லது அரசுத் தேர்வு மைய ஊழியர்கள் போல நடித்து ஏமாற்ற முயல்பவர்கள் மீது புகார் கொடுக்கலாம்” என தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.

ஜூன் 21 அன்று மதியம் 2:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை நடை பெறவுள்ள இந்த மறுதேர்விற்கான ஹால் டிக்கெட்டுகள் (Admit Card) தற்போது அதிகாரப்பூர்வ இணையத் தளத்தில் (`neet.nta.nic.in`) வெளி யிடப்பட்டுள்ளது.