தேசிய தேர்வு முகமையின் ‘அரிய கண்டுபிடிப்பு’ வினாத்தாள் வேறு... கேள்விகள் வேறா?
26 May 2026, 9:33 pm
<p><strong>தேசிய தேர்வு முகமையின் ‘அரிய கண்டுபிடிப்பு’ வினாத்தாள் வேறு... கேள்விகள் வேறா?</strong></p><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் 22 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் இருண்டு, சிலர் தற்கொலை செய்துகொண்ட அவலம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், நாடாளுமன்ற நிலைக்குழு முன் சாட்சியமளித்த தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரிகள், “வினாத்தாள் வெளியாகவில்லை, சில கேள்விகள் மட்டும்தான் வெளியாகின” என்று ஒரு அரிய தத்துவத்தைக் கண்டுபிடித்துள்ளனர்! வினாத்தாள் கசிந்தால் என்ன, கேள்விகள் கசிந்தால் என்ன? இரண்டுமே முறைகேடுதானே! இத்தகைய அதிகாரிகளின் அசிங்கமான மழுப்பல்கள்தான் கல்வித்துறையைச் சீரழித்துள்ளன. இந்த லட்சணத்தில் தன்னாட்சி அமைப்பு என்று இவர்களுக்குப் பெருமை வேறு!</p>
