நீட் மறுதேர்விலும் குளறுபடி- ஒப்புக்கொண்ட தேசிய தேர்வு முகமை!
3 Jul 2026, 10:17 am

நீட் மறுதேர்வில் ஒரு கேள்வி தவறாக கேட்கப்பட்டதை ஒப்புக் கொண்டு மதிப்பெண் வழங்குவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

கடந்த மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால் தேர்வு வினாத்தாள் முன்னதாகவே கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்து கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அதன்பின் நடந்துமுடிந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் மறுதேர்வு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூன் 21ஆம் தேதி நடந்த மறுதேர்விலும் குளறுபடிகள் இருந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இதனையடுத்து ஒரு கேள்வி தவறாக கேட்கப்பட்டதை ஒப்புக் கொண்டு மதிப்பெண் வழங்குவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மேலும் மற்றொரு கேள்விக்கு 2 விடைகள் சரியானது எனவும் அந்த கேள்விக்கு 2 விடைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்த மாணவர்களுக்கு மொத்தமாக 4 மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தேசிய தேர்வு முகமையின் விடைக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.