நீதிமன்ற உத்தரவை மதிக்காத என்எஸ்கே நிர்வாகம்! சிஐடியு போராட்டத்தில் தலைவர்கள் கைது
29 Jan 2026, 5:39 pm
<p><strong>நீதிமன்ற உத்தரவை மதிக்காத என்எஸ்கே நிர்வாகம்! சிஐடியு போராட்டத்தில் தலைவர்கள் கைது</strong></p>
<p>காஞ்சிபுரம், ஜன. 29- ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் என்எஸ்கே பேரிங்க்ஸ் இந்தியா நிறு வனம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தொழிலாளர் துறை துணை ஆணையரின் உத்தரவுகளை அமல்படுத்த மறுத்து வருகிறது. கடந்த ஜன.27 அன்று தொழிலாளர் துறையில் எட்டப்பட்ட உடன்படிக்கையின் படியும் செயல்படவில்லை.இதுகுறித்து சிஐடியு தொழிற்சங்கம் தரப்பில் கூறுகை யில், "நிர்வாகம் தொழிற்சங்கத்தை மட்டு மல்லாமல், நீதிமன்றம் மற்றும் தமிழக அரசையும் ஏமாற்றி வருகிறது" எனத் தெரிவித்தனர். இந்த அடக்குமுறையைக் கண்டித்து வியாழக்கிழமை (ஜன.29) நடைபெற்ற நீதி கேட்கும் நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததோடு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தது. இந்த போராட்டத்திற்குத் தொழி லாளர் சங்கச் செயலாளர் அ. ஜெனிட்டன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் எஸ். கண்ணன், துணைப்பொதுச்செயலாளர் இ. முத்துக்குமார், மாநில செயலாளர் கே.சி. கோபிக்குமார், சிபிஎம் நிர்வாகிகள் வடிவேலன், முகம்மது கனி, செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
