தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிலாளர்களை பழிவாங்கும் ‘என்.எஸ்.கே. பேரிங் இந்தியா’ நிறுவனம்

12 Mar 2026, 4:20 pm
தொழிலாளர்களை பழிவாங்கும் ‘என்.எஸ்.கே. பேரிங் இந்தியா’ நிறுவனம்
<p><strong>தொழிலாளர்களை பழிவாங்கும் &lsquo;என்.எஸ்.கே. பேரிங் இந்தியா&rsquo; நிறுவனம்</strong></p> <p>சிஐடியு உண்ணா நிலை; தலைவர்கள் கைது! காஞ்சிபுரம், மார்ச் 12 - காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் &nbsp;பகுதியில் செயல்பட்டு வரும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, &lsquo;என்.எஸ்.கே. பேரிங் இந்தியா லிமிடெட்&rsquo; நிறுவனம் ஆட்டோமொ பைல் உள்ளிட்ட பல்வேறு கனரக தொழில்களுக்கு தேவையான பேரிங்ஸ் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் சிஐடியு &nbsp;தொழிற்சங்கம் கடந்த 6 ஆண்டு களாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அந்த சங்கத்தை புறக்க ணித்து நிர்வாகம் தொழிலாளர் களை தொடர்ந்து பழிவாங்கி வருவ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், எந்த தொழிற்சங்கம் பெரும்பான்மை சங்கம் என்பதை ஆவணங்கள் மூலம் சரிபார்த்து நடவடிக்கை எடுக்க தொழிலாளர் துறை துணை ஆணையர் கமலக்கண்ணனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. &nbsp;அதன் அடிப்படையில் ஆய்வு நடத்திய துணை ஆணையர் தனது அறிக்கையை தொழிற்சாலை நிர்வாகத்திற்கு வழங்கி 8 மாதங்கள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தொழி லாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், வடமாநிலங்களில் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் செய்யும் பேக்கிங் பணிக்கு என்.எஸ். கே. தொழிற்சாலை தொழிலாளர் களை அனுப்பி நிர்வாகம் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தடுத்து நிறுத்த வும், தொழிலாளர் துறை ஆணை யர் வழங்கிய உத்தரவை அமல் படுத்தவும் தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது. &nbsp;எனவே, தொழிலாளர் துறை யில் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும் சூழலில் பழிவாங்கும் நடவடிக்கையாக நான்கு தொழிலாளர்கள் பணி நீக்கம் &nbsp;செய்யப்பட்டதை திரும்பப் பெற வேண்டும்; வெளிமாநிலங்களுக்கு மாற்றப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், சங்க நிர்வாகிகள் உட்பட &nbsp;7 பேரின் பணி நீக்கத்தை ரத்து செய்ய &nbsp;வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை (மார்ச் 12) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காவலன் கேட் அருகே சிஐடியு தலைமையில் உண்ணா நிலைப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். கண்ணன் துவக்கிவைத்து பேசினார். காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ. முத்துகுமார், தலை வர் டி. ஸ்ரீதர், அ. ஜெனிட்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் எஸ். கண்ணன், இ. முத்துகுமார் உள்ளிட்ட பலரையும் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.