தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவர் போராட்டத்தை ஒடுக்க தேசிய பாதுகாப்புச் சட்டமா?

23 Jul 2026, 9:39 pm
மாணவர் போராட்டத்தை ஒடுக்க தேசிய பாதுகாப்புச் சட்டமா?

மாணவர் போராட்டத்தை ஒடுக்க தேசிய பாதுகாப்புச் சட்டமா?

சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் புதுதில்லி, ஜூலை 23 - தில்லி காவல்துறை ஆணையருக்கு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் தடுப்புக் காவல் அதிகாரத்தை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ள விவகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வி அமைச் சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த கொடிய அதிகாரம் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் நேரடி முயற்சி என்று சி.பி.ஐ.(எம்) மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ள சு. வெங்கடேசன், போராடும் மாணவர்களின் குரலையும் ஜனநா யக அறப்போராட்டங்களையும் முடக்குவதற்காகவே காவல்து றைக்கு இத்தகைய கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்யும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகச் சாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் இந்த அடக்கு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வியா ழன் மாலை நாடாளுமன்றத்திலிருந்து அண்ணல் காந்தி நினை விடம் (காந்தி ஸ்மிருதி) நோக்கி ஊர்வலமாகச் சென்றுள்ளனர்.

காவல்துறையின் விளக்கம்

இதனிடையே மத்திய அரசின் இந்த உத்தரவு குறித்து விளக்கமளித்துள்ள தில்லி காவல்துறை, இது ஜூலை 19 முதல் அக்டோபர் 18 வரையிலான காலத்திற்கானது என்றும், ஜூலை 7-ல் வெளியிடப்பட்ட வழக்கமான காலாண்டு புதுப்பிப்பு (routine quarterly renewal) மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது. ஜந்தர் மந்தரில் மாணவர் அமைப்புகள் நீட் முறைகேட்டைக் கண்டித்துத் தீவிரப் போராட்டத்தில் ஈடு படுவதற்கு முன்பே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப் பட்டுள்ளது. எப்படியிருப்பினும், மாணவர் போராட்டங்கள் உச்சக் கட்டத்தில் உள்ள இந்தச் சூழலில் காவல் துறைக்குத் தடுப்புக் காவல் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.