முப்படைத் தலைமைத் தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு
31 May 2026, 8:49 pm

முப்படைத் தலைமைத் தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு

புதுதில்லி, மே 31- நாட்டின் 3-ஆவது முப்படைத் தலைமைத் தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ்.ராஜா சுப்பிரமணி ஞாயிறன்று பொறுப்பேற்றார்.

கடந்த 2022 செப்டம்பர் முதல் முப்படைத் தலைமைத் தளபதியாக பணியாற்றிய ஜெனரல் அனில் சவுஹான் மே 30 அன்று ஓய்வு பெற்றார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி முப்ப டைத் தலைமைத் தளபதி பதவி யேற்றுள்ளார். முப்படைத் தலைமைத் தளபதி என்ற நாட்டின் மிக உயரிய ராணுவப் பதவிக்குத் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகளில் எம்.பில். பட்டமும், லண்டன் கிங்ஸ் கல்லூரி யில் கலைத்துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ள என்.எஸ்.ராஜா சுப்பிரமணி தேசிய பாதுகாப்பு அகா டமி மற்றும் இந்திய ராணுவ அகாட மியின் முன்னாள் மாணவர் ஆவார். பிரிட்டனின் கூட்டுப் படைகளின் கமாண்ட் ஸ்டாப் கல்லூரி, தில்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றிலும் பயின்றுள்ளார்.

ராணுவப்பணி 1985ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று ‘கர்வால் ரைபிள்ஸ்’ காலாட் படைப் பிரிவில் தனது ராணுவப் பணியைத் தொடங்கினார்.

கடந்த 40 ஆண்டு களுக்கும் மேலான அவரது புகழ்பெற்ற ராணுவ வாழ்க்கையில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 2024 ஜூலை 1 முதல் 2025 ஜூலை 31 வரை இந்திய ராணுவத்தின் துணைத் தளபதியாகச் செயல்பட்டார்.

முப்படைத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.