தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ராணுவத்தின் உச்ச பதவியில் தமிழகத்தைச் சேர்ந்தவர் முப்படைத் தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணி நியமனம்!

9 May 2026, 10:43 pm
ராணுவத்தின் உச்ச பதவியில் தமிழகத்தைச் சேர்ந்தவர் முப்படைத் தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணி நியமனம்!

ராணுவத்தின் உச்ச பதவியில் தமிழகத்தைச் சேர்ந்தவர் முப்படைத் தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணி நியமனம்!

புதுதில்லி, மே 9 - இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக தமிழ்நாட் டைச் சேர்ந்த லெப்டினண்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணியை நிய மித்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், முப்படைத் தலைமை தளபதியாக நிய மிக்கப்படுவது இதுவே முதல்முறை யாகும்.

தற்போதைய தலைமைத் தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் விரை வில் நிறைவடையவிருப்பதால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராஜா சுப்ரமணி இந்திய ராணு வத்தில் 37 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றியவர்.

தேசிய பாது காப்பு கல்விக்கழகம் மற்றும் இந்திய ராணுவ கல்விக்கழகத்தில் இள நிலைப் பட்டம் பெற்ற இவர், 1985 டிசம்ப ரில் கார்வால் ரைபிள்ஸ் படைப்பிரி வில் அதிகாரியாகத் தனது ராணுவ வாழ்வைத் தொடங்கினார்.

முன்னதாக, சென்னைப் பல்க லைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றதோடு, தில்லி மற்றும் லண்டனிலும் உயர்கல்வி கற்றவர்.

மத்திய கட்டளைப் பிரிவின் தலைமைத் தளபதியாகவும், ராணு வத் தலைமைத் துணைத் தளபதி யாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், தற்போது தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.