விவசாயிகளின் ஒப்பற்ற தலைவர் என்.ஆர். ராமசாமி
29 Oct 2026, 11:38 pm

விவசாயிகளின் ஒப்பற்ற தலைவர் என்.ஆர். ராமசாமி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டம் ரெட்டியூ ரில், சிறு விவசாயி ரங்கப்பன்–துரையம்மாள் தம்பதியின் மகனாக 1929இல் பிறந்தவர் என்.ஆர். ராமசாமி (என்.ஆர்.ஆர்.). தனது 20ஆவது வயதில், 1949இல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1964இல் மார்க்சிஸ்ட் கட்சி உதயமான போது அதில் சேர்ந்து, இறுதி மூச்சுவரை முழுநேர ஊழியராகப் பணியாற்றி னார். 2010 அக்டோபர் 30 அன்று, தமது 81ஆவது வயதில் மறைந்தார்.

உழவர் போராட்டங்களின் முன்னணியில்

1953இல் பல்லாயிரம் விவசாயிகள் பங்கேற்ற குத்தகை விவசாயிகள் பாது காப்பு மாநாட்டைக் குமராட்சியில் நடத்தியதில்முன்நின்றார். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் செங்கொடி இயக்கம் பெற்ற பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தைச்சிதம்பரம், காட்டுமன்னார்குடி விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் அமல்படுத்தக் கோரியும், குத்தகை, வாரச்சாகுபடிதாரர் பாதுகாப்புச் சட்டம், கூலி உயர்வு ஆகியவற்றுக்காகவும் தென்னாற்காடு மாவட்டத்தில் பலபோராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். 12 ஆண்டுகள் தென்னாற்காடு மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவராகவும்,மாநில நிர்வாகி யாகவும், பல பத்தாண்டுகள் மாநிலக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.

கட்சியைக்கட்டிய தலைவர்

கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி னார். 1976 முதல் 1989 வரை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் ஆகியவற்றை உள்ள டக்கிய ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டச் செயலாளராக இருந்தார்; நெருக்கடி நிலைக் காலத்திலும் அவரே மாவட்டச்செயலாளர். செஞ்சி, கள்ளக்குறிச்சி, திண்டிவனம், உளுந்தூர் பேட்டை, காட்டுமன்னார்குடி, சிதம்பரம், விருத்தாசலம் பகுதிகளில் சங்கத்தையும் கட்சியையும் வளர்த்தார். விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி பகுதிகளில் கட்சி கட்டுவதற்காக விருத்தா சலத்தில் குடியேறி, இறுதி

வரை அங்கேயே வாழ்ந்தார்.

கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்து இயக்கத்தைக் காத்தார்; இரண்டு ஆண்டுகள் சிறைவாசமும் அனு பவித்தார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறக்கவில்லையெனினும், அம்மக்களின் துயரைத் தனது துயராகக் கருதித் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களில் முன்நின்றார்.

உறுதி, நகைச்சுவை, இளைஞர்களிடம் அன்பு

எடுத்த காரியத்தில் விடாப்பிடியாக நிற்கும் உறுதியும், நகைச்சுவையுடன் அணுகும் பாங்கும், இளையோரிடம் அன்பும், அவர்களைத் தலைமைக்குக் கொண்டுவரும் ஆர்வமும் கொண்டவர். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் ஜான்சிராணி, வாலண்டினா, மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் ஆகியோர் கடலூர் மாவட்டத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியவர்கள். அவரது மூன்று மகன்களும், கூட்டுறவு, வழக்கறிஞர், விவசாய, தொழிற்சங்க இயக்கங்களில் இன்றும் செயல்படுகின்றனர்.

அவரது நினைவுநாளான அக்டோபர் 30இல், அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்வோம், முன்னேறுவோம்.

கோ. மாதவன்

சிபிஎம் கடலூர் மாவட்டச்செயலாளர்