தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி புதுச்சேரியை விற்றுவிடும்”: கே.பாலகிருஷ்ணன்

2 Apr 2026, 3:50 pm
“என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி   புதுச்சேரியை விற்றுவிடும்”: கே.பாலகிருஷ்ணன்
<p><strong>&ldquo;என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி &nbsp; புதுச்சேரியை விற்றுவிடும்&rdquo;: கே.பாலகிருஷ்ணன்</strong></p> <p>புதுச்சேரி, ஏப்.2- &ldquo;தொழில் வளமற்ற புதுச்சேரி மாநிலத்தைப் பழைய ஈயம் பித்த ளைக்கு என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் விற்றுவிடுவார்கள்&rdquo; என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் கே. பாலகிருஷ்ணன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி வேட்பாளர் களுக்கு ஆதரவு கேட்டு, லாஸ் பேட்டை உழவர் சந்தை எதிரில் புதன்கிழமை அன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. லாஸ்பேட்டை தொகுதியில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர். ராஜாங்கத்தை ஆத ரித்து நடைபெற்ற இந்தப் பிரச்சா ரத்திற்கு, உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் ராம்ஜி தலைமை தாங்கினார். இப்பிரச்சாரத்தில் சிறப்பு அழைப் பாளராகப் பங்கேற்று கே.பால கிருஷ்ணன் பேசியதாவது: &ldquo;புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி செய்த என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு, &lsquo;இரட்டை எஞ்சின் ஆட்சி&rsquo; என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பெருமையாகப் பேசி வந்தனர். ஆனால், நடைமுறையில் எந்தவித வளர்ச்சித் திட்டங்களையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. சிறிய மாநிலமான புதுச்சேரியில் அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகள் கூட மேம்படுத்தப்படவில்லை. மூடப்பட்ட ரேசன் கடைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மூடப் பட்ட ரேசன் கடைகளைக்கூட இந்த அரசால் இன்னும் முழுமையாகத் திறக்க முடியவில்லை. தொழில் வளர்ச்சி அற்ற மாநிலமாகவே புதுச் சேரி தொடர்ந்து நீடிக்கிறது. &lsquo;இரட்டை எஞ்சின் ஆட்சி&rsquo; என்று சொல்லிப் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போலி மருந்து தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கி ஊழல் செய்தது தான் இந்த அரசின் மிகப்பெரிய சாதனையாக உள்ளது. மக்களுக்கு எச்சரிக்கை மீண்டும் இதே கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தால், புதுச்சேரியின் ஒட்டு மொத்தச் சொத்துக்களையும் பழைய ஈயம் பித்தளைக்கு விற்பது போல விற்றுவிடுவார்கள். எனவே, புதுச் சேரியில் ஊழலற்ற மற்றும் நியாய மான ஆட்சி அமைய மக்கள் முன்வர வேண்டும். லாஸ்பேட்டை, திருபு வனை, உழவர்கரை மற்றும் மாஹே ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் சிபிஎம் மற்றும் சிபிஐ &nbsp;வேட்பாளர் களுக்கு முறையே &lsquo;அரிவாள் சுத்தி யல் நட்சத்திரம்&rsquo; மற்றும் &lsquo;கதிர் அரி வாள்&rsquo; சின்னங்களில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.&rdquo; இவ்வாறு அவர் பேசினார். இதனைத் தொடர்ந்து, உழவர் கரையில் போட்டியிடும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் நாரா கலை நாதனுக்கும், திருபுவனை தொகுதி யில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் &nbsp;தட்சிணாமூர்த்திக்கும் ஆதரவாகத் திறந்த வாகனத்தில் சென்று கே.பால கிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.