தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நொய்யல் ஆற்றில் சாய திடக்கழிவு கலப்பு: விவசாயிகள் குற்றச்சாட்டு!

28 Oct 2026, 12:33 am
நொய்யல் ஆற்றில் சாய திடக்கழிவு கலப்பு: விவசாயிகள் குற்றச்சாட்டு!

நொய்யல் ஆற்றில் சாய திடக்கழிவு கலப்பு: விவசாயிகள் குற்றச்சாட்டு!

திருப்பூர், அக்.27–வடகிழக்கு பருவமழை பெய்து நொய்யல் ஆற்றில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி சில சாய ஆலை நிர்வாகத்தினர்சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுநீரையும், ‘ஸ்லட்ஜ்’ எனப்படும் நச்சுத்தன்மை கொண்ட சாய திடக்கழிவுகளையும்ஆற்றுநீரில் கொட்டி நாசம் செய்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பூர் பின்னலாடை தொழிலில் சாயத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்தகாலங்களில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரைஅப்படியே நொய்யல் ஆற்றில் வெளியேற்றியதால் நிலத்தடி நீரும் சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டன. விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் தொடர் சட்டப் போராட்டத்தை தொடர்ந்து, ரூ.200 கோடி கடனுதவியுடன் பூஜ்ஜியக் கழிவு நீர் சுத்திகரிப்பு (ZDL) மறுசுழற்சி தொழில்நுட்பத்தை சாய ஆலைகள் நிறுவின. இதனால் கழிவுநீர் வெளியேற்றம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டாலும், சிலர் இன்னமும் சட்டவிரோதமாக கழிவுகளை வெளியேற்றி வருகின்றனர்.

தற்போது கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெய்த மழையால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. திருப்பூருக்கு முன்பாக நொய்யல் ஆறு தொடங்கும்இடத்தில் இருந்து நகரை கடந்து செல்லும்காசிபாளையம் பகுதி வரை, நீரில் மொத்த கரைந்துள்ள உப்பின் அளவை (டிடிஎஸ்) ஆய்வு செய்தாலே சாய ஆலைகள் கழிவை கலந்திருப்பதை உறுதி செய்ய முடியும் என நொய்யல் பாசன விவசாயிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.செவ்வாய்கிழமை நிலவரப்படி ஆற்றில் வெள்ளப் பெருக்கு வடிந்துஇயல்பான அளவில் தண்ணீர் ஓடும் நிலையில், மங்கலத்திற்கு முன்புள்ள அக்ராஹரப் புத்தூர் பகுதியில் ஆற்றின் தெற்குப் பகுதியில் நீர் கருமை நிறமாக மாறியுள்ளது. இது தற்செயலானது அல்ல என்றும், ஆலைகளில்எஞ்சி நிற்கும் சாய திடக்கழிவை ஆற்றில் கொட்டியதே இதற்குக் காரணம். 2 லட்சம்டன் கழிவுகள் தேக்கம்: திருப்பூர் வட்டாரத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் சுமார் 2 லட்சம் டன் சாய திடக்கழிவுகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளதாக தொழில்நுட்ப ஆலோசகர்கள் கூறுகின்றனர். இவற்றை அகற்றுவதற்கு மாற்றுத்தொழில்நுட்பங்கள் இருந்தும், செலவை குறைப்பதற்காக மழைக்கால வெள்ளத்தில் அடித்து செல்ல வைக்கும்நோக்கில் சிலர் ஆற்றில் கொட்டுகின்றனர்.

வெள்ளிங்கிரி மலையில் தோன்றும் நொய்யல் ஆற்றில் நகர்ப்புற வீட்டுக் கழிவுகளுடன் தொழிற்சாலை கழிவுகளும் கலப்பதால் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுகின்றன. எனவே, அக்ரஹாரப்புத்தூர் பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, கழிவுகளை கொட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மழைக்காலம் முழுவதும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அமைச்சர் எச்சரிக்கைஇதனிடையே, திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத் துறை அமைச்சர் ராஜீவ் தலைமையில் செவ்வாயன்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதன்பின், திருப்பூரில் செயல்பட்டு வரும்சாயப்பட்டறைகளில் ஆய்வு செய்த அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நூற்பாலைகள் சாய ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இத்தகைய தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் திடக்கழிவுகள் மற்றும் உப்புக் கழிவுகள் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா என்பது குறித்து தீவிரமாககண்காணிக்கப்பட்டு வருகிறது. பொது மக்களிடமிருந்து வரும் புகார்களின் அடிப்படையில், நொய்யல் ஆறு, காவேரி மற்றும் பாலாறு போன்ற நீர்நிலைபகுதிகளிலும், கழிவுநீர் வெளியேறும் இடங்களிலும் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், முறையான அனுமதியின்றி அல்லது விதிகளை மீறி செயல்படும் எந்தவொரு பெரிய அல்லது சிறிய தொழிற்சாலையாக இருந்தாலும், பாரபட்சமின்றி உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆற்றுப்படுகைகளில் ஏற்படும் நுரை பொங்கும் பிரச்சினைக்கு கழிவுநீர் மற்றும் சில நேரங்களில் சாக்கடை நீர் கலப்பதும் முக்கிய காரணமாக அமைகிறது. இதை தடுக்க துறைசார்ந்தஅலுவலர்கள் துரிதமாக செயல்பட்டு வருவதோடு, புகார்கள் மீதுஉடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலைகள் தங்களதுபணிகளை சட்டப்பூர்வமானஅனுமதியுடனும், உரிய முறைகளையும் பின்பற்றியே மேற்கொள்ள வேண்டும். விதிகளை மீறுவோருக்கு எதிராகத் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜீவ்தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.