தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நவம்பர் 11 மாற்றுத்திறனாளிகளின் தமிழகம் தழுவிய முற்றுகை போர் - ஏன்? - தோ.வில்சன்

9 Nov 2025, 2:37 pm
நவம்பர் 11 மாற்றுத்திறனாளிகளின் தமிழகம் தழுவிய முற்றுகை போர் - ஏன்?  - தோ.வில்சன்

நவம்பர் 11 மாற்றுத்திறனாளிகளின் தமிழகம் தழுவிய முற்றுகை போர் - ஏன்?

ஐக்கிய நாடுகள் சபையின் 2006 சிறப்பு மாநாட்டு பிரகடனம் மற்றும் இந்திய நாட்டின் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் – 2016 ஆகியவை மாற்றுத்திறனாளிகளின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்து, கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்து உரிமைகளிலும் சம வாய்ப்பு வழங்க வலியுறுத்துகின்றன. அத்துடன், நிதி ஆதரவு தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி செய்யவும், அவர்களின் கண்ணியமான வாழ்வுக்குத் தேவையான திட்டங்களுக்காக ஓர் நிதியத்தை ஒன்றிய, மாநில அரசுகள் ஏற்படுத்திட வேண்டும் எனவும் இந்த சட்டம் அறிவுறுத்துகிறது.

ஒன்றிய அரசின் அலட்சியம்:  நிதியம் மற்றும் ஜி.எஸ்.டி.

புதிய சட்டம் இயற்றப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும், ஒன்றிய மோடி அரசு இதுநாள் வரை இந்த நிதியத்தை ஏற்படுத்தவில்லை. மேலும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் செயற்கை உபகரணங்களுக்குக்கூட ஜி.எஸ்.டி. வரி விதித்து பெரும் நிதிக்குவியலை உருவாக்கியுள்ள ஒன்றிய  அரசு, சட்டப்படி இந்த நிதியில் இருந்து ஒரு  சிறு பங்கைக்கூட மாற்றுத்திறனாளிகள் நிதி யத்திற்காக ஒதுக்காதது, அவர்களின் மீதான வன்மத்தைக் காட்டுகிறது. ஜி.எஸ்.டி. குறைப்பில் மாற்றுத்திறனாளி களின் உடலின் பாகங்களாகச் செயல்படக்கூடிய செயற்கை உபகரணங்களுக்கு வரி விலக்கு அளிக்காதது மோடி அரசின் மாற்றுத்திற னாளி விரோத மனநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதனால், சட்டம் வழங்கியுள்ள பல உரிமைகள் கூட மாற்றுத்திறனாளிகளுக்கு எட்டாக் கனியாகவே உள்ளன.

மாற்றுத்திறனாளிகளின் வறுமையும் ஒன்றிய அரசின் சொற்ப உதவித்தொகையும்

பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதனால் வேலை எதுவுமின்றி வறுமை யின் கோரப்பிடியில் வாடி பலர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  2009-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான அரசு நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுள் 3.8 விழுக்காடு பேருக்கு மட்டும் மாத உதவித்தொகையாக ரூ.300 வழங்கியது. 16 ஆண்டுகள் கடந்த பின்பும் கூட, அதே ரூ.300 உதவித்தொகையையே அதே 3.8 விழுக்காடு மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய மோடி அரசு வழங்கி வருவது துரதிஷ்டமானதாகும்.

மாநிலங்களின் உதவித்தொகை ஒப்பீடு

மாற்றுத்திறனாளிகளுக்கு பல மாநில அரசுகள் தான் மாதாந்திர உதவித்தொகை வழங்கி வருகின்றன.  மாநிலம்         உதவித்தொகை (மாதாந்திரம்) ஆந்திரப் பிரதேசம்

சாதாரண மாற்றுத்திறனாளிகளுக்கு - ரூ.6,000,

கடும் ஊனமுற்றோருக்கு - ரூ.10,000, பாதுகாவலர்

தேவைப்படுவோருக்கு - ரூ.15,000 புதுச்சேரி

ரூ.3,000 முதல் ரூ.4,800 வரை (5 வகையாக)  ஹரியானா

அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ.3,500  தமிழ்நாடு

75% கீழ் ஊனமுற்றோருக்கு ரூ.1,500, அதற்கு மேகடும் ஊனமுற்றோருக்கு - ரூ.2,000 மட்டுமே பொருளாதார வளர்ச்சியில் மஹாராஷ்டிராவுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் உள்ள தமிழ்நாடு அரசு, பொருளாதார வளர்ச்சியில் 9-வது இடத்தில் உள்ள ஆந்திர அரசு வழங்குவது போன்று உதவித்தொகையை உயர்த்தி வழங்க மறுப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டில் வழங்கப்படும் இந்த உதவித்தொகையானது பலருக்கு அன்றாட மருந்து மாத்திரைகள் வாங்கக்கூட போதுமானதாக இல்லை.  தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் மீது அக்கறை கொண்டுள்ளதைக் காட்டும் தாயுமான வர் திட்டம் மற்றும் உள்ளாட்சிகளில் பிரதிநிதித்து வம் வழங்குவதை வரவேற்கும் அதே வேளையில்,  வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான உதவித்தொகை யை கடந்த 3 ஆண்டுகளாக உயர்த்தி வழங்காமல் இருப்பதும், ஓராண்டிற்கும் மேலாகக் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கானோருக்கு இதுநாள் வரை உதவித்தொகை வழங்கப்படாததும் ஏற்புடையதல்ல.

தொடர் போராட்டங்கள் -  முற்றுகைப் போருக்கான காரணம்

எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திராவில் வழங்குவதைப் போன்று தமிழ்நாட்டிலும் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தொடர்ந்து பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

*     2024 ஜூலை 16 : வாழ்வாதாரமின்றி தவிப்பவர்களை மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்கும் போராட்டம் (12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்).  * 2025 ஜனவரி 21 : மாவட்டங்களில் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டம் (20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்).

* 2025 ஏப்ரல் 22 : சென்னை கோட்டை முற்றுகைப் போராட்டம் (9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்).  15 மாதங்களில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட 4 முக்கியப் போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு உதவித்தொகையை உயர்த்தி வழங்க முன்வரவில்லை. இந்தச் சூழலில்,  தமிழக அரசு வழங்குகிற இந்தச் சொற்ப உதவித் தொகையானது தற்போதைய வாழ்வாதாரச் சூழலில் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக்கூட போதுமானதாக இல்லை. இத னால் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகி மிகுந்த வேதனையில் வாழ்ந்து வருகின்றனர்.  ஆகவே, மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தித்தான் 11.11.2025 அன்று அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்கள் முன் பல்லாயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் இந்த மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.