தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நவ. 26 - கருப்புப் பட்டையணிந்து போராட்டம்

19 Nov 2025, 3:33 pm
நவ. 26 - கருப்புப் பட்டையணிந்து போராட்டம்

நவ. 26 - கருப்புப் பட்டையணிந்து போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறைகூவல்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறைகூவல் விழுப்புரம், நவ. 19 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் திங்களன்று (நவ.17) விழுப்புரத்தில் மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன், பொருளாளர் கே.பி.பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் முக்கியமான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேகதாது அணைக்கு எதிர்ப்பு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு எடுக்கும் முயற்சிக்கு எதிராக இக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அணைக்கான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது ஏற்புடையதல்ல என்றும், இந்த அணையால் டெல்டா பாசனம் மற்றும் 30 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனவே, தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கைகளை எடுத்து இந்த அணை கட்டும் முயற்சியைத் தடுத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நவ. 26 கருப்புப் பட்டைப் போராட்டம் விவசாய விளைபொருட் களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்காத ஒன்றிய அரசைக் கண்டித்தும், மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் வரியில்லா உணவுப் பொருள் இறக்குமதி ஒப்பந்தம் போட்டுள்ளதைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தில்லியில் ஓராண்டு போராடிய விவசாயிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றாததைக் கண்டித்து, தில்லி விவசாயிகள் போராட்டம் தொடங்கிய தினமான நவம்பர் 26 அன்று தமிழ்நாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள் சங்கம் (எஸ்கேஎம்) மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறவுள்ள “கருப்புப் பட்டை” அணிந்த தர்ணா போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் பங்கேற்கும் என முடிவெடுக்கப்பட்டது. கோரிக்கைகள் கரும்பு சாகுபடியாளர்களுக்கு 2025-26 பருவத்திற்கு ஒரு டன்னுக்கு ரூ. 4000 பரிந்துரை விலையாக அறிவித்து வழங்க மாநில அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், 2013-14 முதல் 2016-17 வரை தனியார் ஆலைகள் தர வேண்டிய ரூ. 1217 கோடி பாக்கியைப் பெற்றுத் தரவும் வலியுறுத்தப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை, 100 ஆண்டுகளுக்கும் மேலாக குத்தகைச் சாகுபடி செய்து வரும் விவசாயிகளை வெளியேற்றி நிலங்களை ஏலம் விடும் நடவடிக்கையையும், கோவில் அடிமனைகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வாடகையை உயர்த்தி வெளியேற்றும் நடவடிக்கையையும் உடனே நிறுத்த வேண்டும் என்றும், இப்பிரச்சனைகளுக்குத் தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.