தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டண வசூல் பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நோட்டீஸ்

18 Jun 2026, 11:14 pm
அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டண வசூல் பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நோட்டீஸ்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டண வசூல் பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நோட்டீஸ்

மதுரை, ஜூன் 17- அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசின் விதிமுறைகள் மற்றும் அரசாணைகளுக்கு முரணாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க உரிய வழி காட்டுதல்களை உருவாக்கக் கோரி தொட ரப்பட்ட வழக்கில், தமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் பதில் மனு தாக் கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளை யத்தைச் சேர்ந்த மைக்கேல் தங்கராஜ் தாக் கல் செய்த மனுவில், 2008-ஆம் ஆண்டு தமி ழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் மாணவர்களிடமிருந்து சிறப்புக் கட்ட ணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டுள்ள தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், பல அரசு உதவி பெறும் பள்ளி களில் மாணவர்களிடம் பல்வேறு கட்ட ணங்கள் வசூலிக்கப்படுவதாகவும், குறிப் பாக இராமநாதபுரம் மற்றும் திருவண்ணா மலை மாவட்டங்களில் இந்த நடைமுறை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

மேலும், ராயப்பன்பட்டி புனித அலோசி யஸ் மேல்நிலைப்பள்ளி, இராமநாதபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆத்திப்பட்டு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் அரசாணைக்கு முர ணாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டதாகக் கூறி, அதுகுறித்து விசாரணை நடத்தவும், எதிர்காலத்தில் இதுபோன்ற வசூல்கள் நடைபெறாத வகையில் தெளிவான வழி காட்டுதல்களை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசார ணைக்கு வந்தது.

அப்போது பள்ளி நிர்வா கங்கள் தரப்பில், பாதிக்கப்பட்ட பெற்றோர் களே நேரடியாக நீதிமன்றத்தை அணுக முடியும் என்றும், இதுதொடர்பாக ஏற்க னவே நீதிமன்ற உத்தரவு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு அரசாணை அம லில் உள்ள நிலையில் எவ்வாறு சிறப்புக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்கு நர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தர விட்டு, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.