தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாதியத்துக்கு எதிரான மனிதத்தைக் கற்பிக்க அல்ல... கற்க ஒரு கையேடு - சு.பொ.அகத்தியலிங்கம்

23 Nov 2025, 3:44 pm
சாதியத்துக்கு எதிரான மனிதத்தைக்      கற்பிக்க அல்ல... கற்க ஒரு கையேடு - சு.பொ.அகத்தியலிங்கம்
<p><strong>சாதியத்துக்கு எதிரான மனிதத்தைக் &nbsp; &nbsp; &nbsp;கற்பிக்க அல்ல... கற்க ஒரு கையேடு</strong></p> <p>நான் கல்வியாளனும் அல்ல, &nbsp;ஆசிரியனும் அல்ல; &nbsp;ஆயினும் &lsquo;சமூக ஜனநாயக் கையேடு &lsquo; எனும் நூல் கிளர்த்திய ஆர்வத்தில் நாலு நல்ல வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். காரணம் இந்நூல் செய்தி ருக்கிற பிரகடனமும்; அதற்கொப்பச் செயல்வடிவம் கொடுத்திருப்பதும்தான். &nbsp; &nbsp; &nbsp;ஆம். &rdquo; சாதிய வன்கொடுமைகளின் தோற்றுவாய் எது? சாதிய வன்கொடுமை கள் நிகழாமல் எவ்வாறு தடுப்பது? சாதிய வன்கொடுமை &nbsp; நிகழ்ந்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பன குறித்து ஒரு புரிதலைப் பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து நிலை அதிகாரிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஏற்படுத்துவதே இக்கையேட்டின் நோக்கம். &rdquo; என்கிற பிரகடனப் படுத்திய தம் நோக்கத்தை நிறை வேற்ற கடும் உழைப்பை நல்கி இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள். &nbsp;21 அத்தியாயங்கள். ஒவ்வொன்றும் எந்தெந்த வயதினருக்கு என்கிற நுட்பத்து டன்; ஆசிரியர்களின் பாடத்திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. காலிஃப்ளவர், முட்டைக் கோஸ், நூக்கல் என காய்களின் பரிணாம அறிவியலோடு சாதியை நன்கு உருவகப்படுத்தி &ldquo; நாம் ஒரு தாயின் பிள்ளைகள்&rsquo; என அறிவுறுத்தும் அழகிய கதை வடிவம் முதல் அத்தியாயத்திலேயே முத்திரை பதித்துவிட்டது. &nbsp; &nbsp;பொதுவாய் இந்நூல் உரையாடல் வழி கற்பிக்கவே அல்ல கற்கவே [முன்னுரையில் விளக்கம் உள்ளது] மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது. இரத்தம், அணுக்கள், மரபணு, நடசத்திரத் துகள்கள் என பல்வேறு அறிவியல் செய்திகளோடு சாதி மறுப்பையும் நன்கு பிசைந்து வலியுறுத்தி உள்ளது மிக முக்கியமானது. கூர்மையானது &nbsp; &nbsp; &nbsp;அதுபோல் அரசியல் சட்டம் சார்ந்து பல செய்திகளை மாணவர்களின் &nbsp;நெஞ்சில் பதிய வைக்க முயலுவது நன்று. &ldquo;சகோதரத்துவம் இல்லை எனில் சுதந்திரமும் சமத்துவமும் அர்த்தமற்ற சொற்கள்.&rdquo; எனும் பாபா சாகேப் அம்பேத்கரின் கருத்துக்கு இந்நூல் வடிவம் கொடுக்க முயன்றிருக்கிறது. &nbsp;வென்றிருக்கிறதா என்பதை கல்வியா ளர்கள்தாம் சொல்ல வேண்டும். &nbsp; &nbsp;அண்மையில் &rsquo;bison காளமாடன்&rsquo; என்றொரு திரைப்படம் பார்த்தேன். அதில் &nbsp;ஒரு இடத்தில் பள்ளியில் மாணவர் களிடையே கபடிப் போட்டி நடக்கையில் ஆசிரியர் ஒவ்வொரு மாணவன் கையிலும் கட்டி இருந்த சாதிக் கயிற்றை கத்திரியால் வெட்டி எறிகிற காட்சி அமைக்கப்பட்டிருந்தது. நாம் செல்ல வேண்டிய தூரத்தை அது எனக்குச் சொன்னது? இந்நூலில்&rsquo; வீதியில் விளையாட சாதி எதற்கு? &rsquo;, &rsquo;நாம் பார்வையாளர் களாக அல்ல பகுத்தறிவாளர்களாக&rsquo; [இருப்பதிலேயே பெரிய அத்தியாயம் இதுதான் ] என்கிற அத்தியாயங்களைப் படிக்கிற போது அப்படக்காட்சி என்னுள் வந்து போனது. &nbsp; என் நெஞ்சைக் கவர்ந்த எங்க ஊர் கவிஞர் கவிமணி தேசிய விநாயகத்தின் எளிய ஆயினும் ஆழ மான கவிதை வரிகள் தொடங்கி கவிஞர் தமிழ் ஒளி வரை பல கவிஞர்களின் வீரியமிக்க வரிகள் ஆங்காங்கே அர்த்தச் செறிவுடன் பொருந்தி மிளிர்கின்றன. நன்று. &nbsp;ஆழ்ந்த படிப்பறிவுமிக்க பலரின் பொறுப்பான பங்களிப்பாய் இந்நூல் மலர்ந்துள்ளது. ஒவ்வொருவருக்கும் பாராட்டுகள். பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபுவின் சீரிய முயற்சியை எவ்வளவு பாராட்டினும் தகும். &nbsp;அதேநேரத்தில், சாதிய மறுப்பு போலவே பள்ளியிலேயே வேரூன்ற வேண்டிய இன்னொரு சிந்தனை &lsquo; பாலின சமத்துவம்&rsquo;. இந்நூல் அதிலும் கவனம் செலுத்தி இருக்க வேண்டுமல்லவா? &nbsp; &nbsp; நடைமுறையில் இந்நூலில் பயன்பாடு, எதிர்கொள்ளும் சவால்கள், விமர்சனங்கள் இவை பற்றி எல்லாம் &nbsp;பேசுவது, இத்துறையில் பணியாற்றும் சமூக ஆர்வம்மிக்க செயல்பாட்டாளர் களின் கடமையும் பொறுப்புமாகும். நான் இப்போது தூரத்துப் பார்வையாளனே ! சமூக ஜனநாயக் கையேடு (Manual for Social Democracy), வெளியீடு:பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை &nbsp;தொடர்புக்கு: spcsstn2025@gmail.com, 9445683660, பக்கங்கள் : 136 விலை : ரூ.300 / &nbsp; &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.