முந்தய பக்கம்

“தண்டனை மட்டும் அல்ல… மாற்றம் தரும் சிறைச்சாலை”

24 Mar 2026, 3:23 pm
“தண்டனை மட்டும் அல்ல…  மாற்றம் தரும் சிறைச்சாலை”
<p><strong>&ldquo;தண்டனை மட்டும் அல்ல&hellip; &nbsp;மாற்றம் தரும் சிறைச்சாலை&rdquo;</strong></p> <p>சிவகங்கை, மார்ச் 24- சிவகங்கை மாவட்டத் தில் ஒரு திறந்தவெளி சிறைச் சாலை, சிறைவாசிகளின் வாழ்க்கையை மாற்றும் முன்னுதாரணமாக திகழ்ந்து &nbsp;வருகிறது. &nbsp;காளையார்கோவில் அருகே அமைந்துள்ள இந்த சிறை வளாகம், தற்போது இயற்கை விவசாயத்தின் மூலம் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 97 ஏக்கர் பரப்பள வில் அமைந்துள்ள இந்த திறந்தவெளி சிறைச் சாலையில், 50க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். &nbsp;இங்கு தினசரி 30 முதல் 50 கிலோ வரை பசுமை யான காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு, பொது மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படு கிறது. தற்போது கொத்த வரங்காய், வெண்டைக் காய், புடலங்காய், சுண்டைக் காய் உள்ளிட்ட பல வகை யான காய்கறிகள் அதி களவில் விளைவிக்கப் பட்டுள்ளன. இந்த காய்கறி கள் காளையார்கோவில் &ndash; இளையான்குடி சாலை பகுதியில் விற்பனை செய்யப்படுகின்றன. &ldquo;சந்தை விலையை விட மலிவாகவும், ரசாயன மில்லாமலும் இந்த காய்கறி கள் கிடைக்கிறது. &nbsp;அதனால் இங்கு வாங்கு கிறோம்&rdquo; என்று பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த முயற்சியின் முக்கிய நோக்கமே சிறை வாசிகளுக்கு தொழில் பயிற்சி வழங்கி, அவர்களை சுயநிறைவு வாழ்க்கைக்கு வழிநடத்துவதே ஆகும். &nbsp;மேலும், சமூகத்தில் நல்ல பாதையில் மீண்டும் இணைவதற்கான ஒரு &nbsp;வாய்ப்பையும் உருவாக்கு கிறது. &ldquo;தண்டனை மட்டும் அல்ல&hellip; மாற்றம் தரும் சிறைச் சாலை&rdquo; என்ற புதிய அடை யாளத்தை சிவகங்கை உருவாக்கியுள்ளது. &nbsp;(ந.நி.)</p>
Share
FacebookXWhatsAppTelegram