தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளம்பரத்திற்கு ஒதுக்கியதில் 3-இல் ஒரு பங்கு கூட இல்லை எரிசக்தி சேமிப்புக்கான நிதி ஒதுக்கீட்டில் நாட்டு மக்களுக்கு மோடி அரசு துரோகம்!

13 Mar 2026, 4:52 pm
விளம்பரத்திற்கு ஒதுக்கியதில் 3-இல் ஒரு பங்கு கூட இல்லை எரிசக்தி சேமிப்புக்கான நிதி ஒதுக்கீட்டில் நாட்டு மக்களுக்கு மோடி அரசு துரோகம்!
<p><strong>விளம்பரத்திற்கு ஒதுக்கியதில் 3-இல் ஒரு பங்கு கூட இல்லை எரிசக்தி சேமிப்புக்கான நிதி ஒதுக்கீட்டில் நாட்டு மக்களுக்கு மோடி அரசு துரோகம்!</strong></p> <p>புதுதில்லி, மார்ச் 13 - விளம்ப ரங்களுக்கு செலவு செய்த நிதியில் மூன் றில் ஒரு பங்கு நிதியைக் கூட &nbsp;நாட்டின் எரிசக்தி சேமிப்புக்காக மோடி அரசு ஒதுக்கவில்லை; இது நாட்டு மக்களுக்கு இழைக் கப்பட்ட அநீதி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. &nbsp;வெங்கடேசன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ரூ. 5,876 கோடி ஒதுக்கீடு வெறும் ரூ. 870 கோடியானது இந்தியாவின் ஒரு மாத எல்பிஜி தேவை 30 லட்சம் டன். இந்நிலையில், நெருக்கடி காலத்திற் காக வெறும் 1.4 லட்சம் டன் மட்டுமே சேமித்து &nbsp;வைத்துள்ளது. அதாவது, விநியோகம் முற்றிலு மாகத் தடைபட்டால், நம்மிடம் உள்ள &nbsp;இருப்பு வெறும் 1.5 முதல் 2 நாட்களுக்கு மட்டுமே வரும். இதற்கு காரணம் எதிர்காலப் பாதுகாப்பிற் காகச் சேமிப்புக் கிடங்குகளை உருவாக்க அரசாங் கம் காட்டிய அலட்சியம். 2025-26 பட்ஜெட்டில் சேமித்து வைக்கும் இருப்பு வசதிகளுக்காக முதலில் ரூ. 5,876 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், பின்னர் அந்த நிதி அதிரடியாகக் குறைக்கப்பட்டு, வெறும் ரூ. 870 கோடியாக (80% &nbsp;குறைவு) வெட்டிச் சுருக்கப்பட்டது. நடப்பாண்டில் ஒதுக்கியது &nbsp;ரூ. 1 லட்சம் மட்டுமே! இந்த ஆண்டு 2026-27 பட்ஜெட்டில், புதிய கொள்முதலுக்காக வெறும் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே பெயரளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது ஜப்பான் நாடு இந்தியாவை விடவும் அதிக &nbsp;இறக்குமதி சார்பு (95%) கொண்டது. ஆனால் அதன் முன்னேற்பாடு வியக்க வைக்கிறது. ஜப்பான் &nbsp;தன்னிடம் 254 நாட்களுக்குத் தேவையான அவசர கால இருப்பைப் பராமரிக்கிறது. &nbsp;தற்போதைய உலகளாவிய நெருக்கடியின் போது, ஜப்பான் எந்த &nbsp;பதற்றமும், நெருக்கடியும் இல்லாமல் பிரச்ச னையை எதிர் கொள்கிறது. ஆனால் ஒன்றரை நாட்களுக்கு மட்டுமே இருப்பு வைத்துள்ள இந்தியா பிரச்சனையை எதிர்கொள்ள முடியா மல் தத்தளிக்கிறது. 33 கோடி குடும்பங்கள் எல்பிஜி இணைப்பைச் &nbsp;சார்ந்திருக்கிற இந்தியாவில் ஆளும் பாஜக அரசு &nbsp;தனது விளம்பரத்துக்கு ஒதுக்கிய தொகையில் மூன்றில் ஒரு பங்குதான் புதிய சேமிப்பு வசதிக்கு &nbsp;ஒதுக்கியது என்பது நாட்டிற்கு இழைத்துள்ள மாபெரும் அநீதி. உலகத்திடம் மோடி அரசு பாடம் கற்பதாக இல்லை உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் உலகமே இந்த விசயத்தில் விழித்துக்கொண்டது. ஐரோப்பிய நாடுகள் தனது எரிசக்தி தேவையில் &nbsp;30 சதவிகிதம் சேமிப்பு வசதியை உருவாக்க கட்டாயமாக்கியது. ஆனால் அதில் இருந்து பாஜக அரசு எந்த பாடமும் கற்றுக் கொள்ளவில்லை. சர்வ தேச எரிசக்தி முகமை (IEA) பலமுறை எச்சரித்த &nbsp;பிறகும் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை. அதனால் தான் இந்த பட்ஜெட்டில் பெயர ளவுக்கு வெறும் ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தியாவின் அடுப்பை அணைத்த பாஜக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றிய அரசு ஊடக விளம்பரங்களுக்கு செலவு செய்த தொகை ரூ. &nbsp;3,723 கோடி. ஆனால் எரிசக்திக்கான புதிய சேமிப்பு &nbsp;கிடங்குகளை உருவாக்க ஒதுக்கிய தொகை ரூ. 1670 கோடி மட்டுமே. இந்திய மக்களின் தேவை மற்றும் நலன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு பாஜகவின் விளம்பர மோகமே முன்னுரிமை பெற்றன. அதனால் தான் உஜ்வாலா விளம்பரம் மோடி படத்தோடு குக்கிராமத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் இப்பொழுது இந்தியா வின் அடுப்புகள் எரியமுடியாமல் தத்தளிக்கின்றன. இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டு உள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.