முந்தய பக்கம்

காட்டுமன்னார் தொகுதியில்  போட்டியிடவில்லை!

4 Apr 2026, 4:02 pm
காட்டுமன்னார் தொகுதியில்  போட்டியிடவில்லை!
<p><strong>காட்டுமன்னார் தொகுதியில் &nbsp;போட்டியிடவில்லை!</strong></p> <p>தொல். திருமாவளவன் அறிவிப்பு சென்னை: காட்டுமன்னார் தொகுதியில் தான் போட்டியிட வில்லை என்றும், தமக்குப் பதிலாக ஜோதிமணி இளையபெருமாள் போட்டியிடுவார் என்றும் விடுதலை &nbsp;சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்து உள்ளார். &nbsp;இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், &ldquo;காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தான் போட்டியிடுவதை விரும்பாதவர்கள் கட்டுக்கதைகளைச் சொல்லி கூட்டணியின் நலனை பாதிக்கும் வகையில் அவதூறு பரப்புவதைக் கருத்தில் கொண்டு, உத்தியை மாற்றி, &nbsp;நிலைபாட்டை தள்ளி வைக்கிறேன். அந்த தொகுதியில் தமக்கு பதிலாக சாதி ஒழிப்பு போராளி எல். இளையபெரு மாளின் இளைய மகன் ஜோதிமணி தொகுதியில் போட்டியிடு வார்&rdquo; என்றார். &ldquo;சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200 இடங்களை வெல்லும்; தொங்கு சட்டமன்றம் அமையும் என்ற கருத்துக்கு இடமே இல்லை&rdquo; என்றும் தொல். திருமாவளவன் குறிப்பிட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram