தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திமுக ஆட்சியில் ஒரு விவசாயிகூட தற்கொலை செய்யவில்லை!

20 Feb 2026, 2:39 pm
திமுக ஆட்சியில் ஒரு விவசாயிகூட  தற்கொலை செய்யவில்லை!
<p><strong>திமுக ஆட்சியில் ஒரு விவசாயிகூட &nbsp;தற்கொலை செய்யவில்லை!&nbsp;வேளாண் அமைச்சர்&nbsp; பதிலுரை</strong></p> <p>சென்னை, பிப்.20 - கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் ஒரு விவசாயிகூட தற்கொலை &nbsp;செய்து கொள்ளவில்லை என்று வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் உறுதியாக தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரையாற்றிய அவர், கடந்த அதிமுக ஆட்சியின் தோல்விகளையும் தற்போதைய திமுக ஆட்சியின் சாதனைகளையும் ஒப்பிட்டு &nbsp;எடுத்துரைத்தார். அதிமுகவின் பத்து ஆண்டுகால ஆட்சியில் போராட்டத்திற்கு இடையே &nbsp;வாழ்ந்த உழவர்கள், திமுக ஆட்சியில் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்று அவர் தெரிவித்தார். அதிமுக ஆட்சி யில் வேளாண் நிதிநிலை அறிக்கையே &nbsp;கிடையாது என்று சுட்டிக்காட்டிய அவர், அவர்களின் தோல்வி நிர்வாகத் தால் 102 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அரசு பதிவேடு களே சாட்சி பகருவதாக கூறினார். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் ஒரே மாநிலம் தமிழ் நாடுதான் என்று கூறிய அமைச்சர், கடந்த ஐந்து ஆண்டுகளில் வேளாண்மைத் துறைக்கு ரூ.1.94 &nbsp;லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். விவசாயி களின் கருத்தை நேரில் கேட்டு, பட் ஜெட்டில் திட்டங்களை அறிவிப்பதால் உழவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும் அவர் கூறினார். கடந்த ஐந்து ஆண்டுகளாக மேட்டூர் &nbsp;அணையிலிருந்து உரிய நேரத்தில் இரண்டாம் பாசனத்திற்கு நீர் திறக்கப் பட்டதாக குறிப்பிட்ட அமைச்சர், வேளாண் துறையில் 682 அறிவிப்பு கள் வெளியிடப்பட்டு 676 திட்டங் களுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். &nbsp;உழவர்களுக்கு மதிப்பளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இயற்கை பேரிடர் காலங்களில் நேரில் &nbsp;சென்று பார்வையிட்டு உரிய நிவா ரணம் வழங்கி வருவதாகவும் அவர் பாராட்டினார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.