மாற்றுத் திறனாளி அல்ல... சந்தனகுமார் சாதனையாளர்!
7 Dec 2025, 3:52 pm
<p><strong>மாற்றுத் திறனாளி அல்ல... சந்தனகுமார் சாதனையாளர்!</strong></p>
<p>கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தைச் சேர்ந்த சந்தனகுமார் (28), தனது வாழ்க்கை யின் வசந்த காலத்தை நம்பிக்கை யுடன் தொடங்கி இருந்தார். கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த அந்த தருணத்தில், 2016-ஆம் ஆண்டில் ஒரு நொடியில் சிதைந்து போனது. நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த ஒரு தனியார் பேருந்து மோதியது. அந்தக் கொடூர விபத்தில், உடன் வந்த நண்பர் துரதிர்ஷ்டவசமாக உயி ரிழந்தார். சந்தனகுமாருக்கு ஏற்பட்ட பலத்த காயம், அவரது வலது கையை 90 சதவீதம் செயலிழக்கச் செய்தது. ரூ. 10 லட்சத்துக்கும் மேல் செலவு செய்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், கை முழுமையாகக் குணமாகவில்லை. கல்வியின் இறுதி விளிம்பில், எதிர்காலம் குறித்த ஆயிரக் கணக்கான கனவுகளுடன் இருந்த ஒரு இளைஞன், ஒரே விபத்தில் உடல்ரீதி யாகவும், மனரீதியாகவும் கடும் காய மடைந்து வீட்டுக்குள் முடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டான். விபத்துக்குப் பின், ஐ.டி. நிறு வனத்தில் இரண்டு ஆண்டுகள் பணி செய்தார் சந்தனகுமார். ஆனால், ‘வீட்டுக்குள் முடங்கியிருப்பதைவிட வெளியுலகில் ஏதாவது சாதிக்க வேண்டும்’ என்ற ஒரு தீராத உத்வேகம் அவரைத் தூண்டியது. அந்தச் செயலிழந்த கை தந்த வலியை அவர் தனது மனதின் வலிமையாக மாற்றிக்கொண்டார். மாற்றுத்திறனாளி களுக்கான விளையாட்டுத் துறையை அவர் தேர்ந்தெடுத்தார். அது வெறும் துறையல்ல, அவரது வாழ்வின் புதிய பாதை! தனக்கு விருப்பமான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தன் ஒற்றை உடலையும், அசைக்க முடியாத மன உறுதியையும் நம்பி கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டார். அவரது பயிற்சியின் வேகம் வீண் போக வில்லை. முதலில் மாவட்ட, மாநில அள வில் தொடங்கி, பின்னர் தேசிய அளவில் தொடர்ந்து பதக்கங்களை வென்று, உலக அரங்கில் இந்தியா வுக்காகப் பங்கேற்க வேண்டும் என்ற இலக்கை மனதிற்குள் விதைத்தார். தாய்லாந்தில் முத்திரை குத்திய தமிழர்! சந்தனகுமாரின் கனவுக்குத் தமிழக அரசின் ‘சாம்பியன்ஸ் நிதி உதவி’ திட்டம் சிறகுகளை அளித்தது. இந்தத் திட்டத்தின் மூலம் அவருக்குக் கிடைத்த ரூ.1.65 லட்சம் நிதி, தாய் லாந்தில் நடைபெற்ற மாற்றுத்திற னாளிகளுக்கான உலகத் திறன் விளை யாட்டுப் போட்டியில் (World Ability sport Games) பங்கேற்க உதவியது. அங்கு, 20 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், மின்னல் வேகத்தில் ஓடி, 54 வினாடிகளில் இலக்கை எட்டி, வெள்ளிப் பதக்கம் வென்று வர லாற்றுச் சாதனை படைத்தார்! கை செயலிழந்த இளைஞர், உலக அரங்கில் இந்தியாவிற்கும், தமிழகத்திற் கும் பெருமை சேர்த்த தருணம், உண்மையிலேயே நெகிழ்ச்சியானது. இன்று, அவர் தான் படித்த மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்திலேயே தினமும் பயிற்சி மேற்கொண்டு வரு கிறார். நமது செய்தியாளர் அவரைச் சந்தித்தபோது, செயலிழந்த வலது கையால் அல்ல, ஆரோக்கியமான இடது கையால் தனது ஷூவைக் கட்டிக்கொண்டு ஓடத் தயாரானார். அவர் உதிர்த்த வார்த்தைகள் லட்சக்கணக்கான இளைஞர்களுக் கான மந்திரச் சொல்: “மனதில் உறுதி இருந்தால் எந்த நிலையிலும் சாதிக்கலாம். என்னு டைய அடுத்த இலக்கு, 2028-இல் நடக்கவிருக்கும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாகக் கலந்து தங்கம் வெல்வதுதான்!” மேலும், அவர் இளைஞர்களுக்கு ஒரு உத்வேக அழைப்பையும் விடுத்தார்: “தமிழக அரசு மாற்றுத்திற னாளிகளுக்கு ஏராளமான சலுகை களும் ஊக்கத்தொகையும் வழங்கு கிறது. இளைஞர்கள் வீட்டில் முடங்கா மல் வெளியே வந்து சாதிக்க வேண்டும்.” வாழ்க்கையின் கடுமையான சோதனையில் துவண்டு போகாமல், தன் உடல் ஊனத்தை உந்துசக்தியாக மாற்றி, உலக அரங்கில் இந்தியா வுக்குப் பெருமை சேர்த்த சந்தன குமாரின் இந்த நெகிழ்ச்சியான பயணம், ஒவ்வொரு இளைஞரின் மனதிலும் சாதிக்க முடியும் என்ற விதையை ஆழமாக விதைத்துள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாண வர்கள், உறவினர்கள் மற்றும் விளை யாட்டு அமைப்புகள் எனப் பலரும் அவ ருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நிதி உதவி அளித்த தமிழக அரசுக்கும் அவர் நெகிழ்ச்சி யுடன் நன்றி தெரிவித்தார். -கார்த்திக் மதிவாணன்</p>
