பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய நார்வே பத்திரிகையாளரின் இந்திய பயண விசா ரத்து!
5 hours before

ஹைதராபாத்தில் நடைபெறும் பாரத் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரவிருந்த நார்வே பத்திரிகையாளர் ஹெல்லே லிங் ஸ்வெண்ட்சனின் விசா, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 12 முதல் 14 வரை தெலங்கானா அரசு சார்பில் ஹைதராபாத்தில் நடைபெறும் 'பாரத் உச்சி மாநாட்டில்' பங்கேற்பதற்காக ஹெல்லே லிங் இந்தியா வரத் திட்டமிட்டிருந்தார். மாநாட்டில் 'ஊடகங்களின் எதிர்காலம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரம்' என்ற தலைப்பிலான விவாதத்தில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அரசியல் அனுமதியும் விசாவும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நவம்பர் 11 அன்று விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு வெறும் 10 நிமிடங்களுக்கு முன்பு, நோர்வேயில் உள்ள இந்தியத் தூதரகம் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசா ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹெல்லே லிங் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி நார்வே சென்றிருந்தபோது, "உலகின் மிக சுதந்திரமான பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு ஏன் பதிலளிக்க மறுக்கிறீர்கள்?" என அவர் கேள்வி எழுப்பியிருந்தார் ஆனால், மோடி பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மோடி அரசின் செயல்பாடுகள், தொழிலதிபர்கள் அதானி, அம்பானி குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதன் காரணமாகவே தனது விசா ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.