தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

6 May 2026, 9:31 pm
விளையாட்டு

8 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியா செல்கிறதா வடகொரிய கால்பந்து அணி?

இந்தியா - பாகிஸ்தான் நாடு கள் எல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் எதிரும் புதிருமாக இருப்பது போல, வட கொரியா - தென் கொரியா நாடுகளும் அப்படி தான் உள்ளன. எல்லை முதல் விளையாட்டு வரை இரு நாடு களும் முட்டலும், மோதலுமாகத் தான் இருக்கும். அதனால் வடகொரியாவில் விளையாட்டுப் போட்டி நடந்தால் தென்கொரியா அங்கு செல்லாது. அதே போல வடகொரியா, தென் கொரியாவிற்கு செல்லாது. இதுதான் பல ஆண்டுகளாக உள்ளது. இந்நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவிற்கு கால்பந்து விளையாட வடகொரியா மகளிர் அணி செல்கிறது. மே 20 அன்று நடை பெறும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மகளிர் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி ஆட்டத்தில் வடகொரியாவின் ‘நைகோஹியாங்’ மகளிர் கால்பந்து அணி, தென் கொரியாவின் சுவோன் எப்சி அணியை எதிர்கொள்ள உள்ளது. தென்கொரிய அமைச்சகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், வடகொரியாவின் அரசு ஊடகங்கள் இந்த பயணம் குறித்து இன்னும் எந்தச் செய்தியும் அதிகாரப் பூர்வமாக வெளியிடவில்லை. கடைசியாக டிசம்பர் 2018இல் டேபிள் டென்னிஸ் போட்டிக்காக வட கொரியா தனது வீரர்களை தென் கொரியாவிற்கு அனுப்பியது. அதற்கு முன் வடகொரிய மகளிர் கால்பந்து அணி கடைசியாக 2014 இல் இன்சியானில் நடை பெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி யில் தென்கொரிய மண்ணில் விளை யாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

மிரட்டும் வானிலை : பதற்றத்துடன் நடைபெறும் விளையாட்டு போட்டிகள்

காலநிலை மாற்றம் விளை யாட்டு உலகை விழி பிதுங்க வைத்து வருகிறது. எப்போது வெயில், எப்போது மழை என உறுதி யாக கணிக்க முடியாத சூழல் உள்ளது. உள்ளரங்க விளையாட்டு களுக்கு எவ்வித சிக்கலும் இல்லை. ஆனால் கிரிக்கெட், டென்னிஸ் உள்ளிட்ட வெளியரங்க விளையாட்டு கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. காரணம் காலையில் சுள்ளென்று வெயில் சுட்டெரிக்கும். இதனால் வெளியரங்க விளையாட்டுப் போட்டி களை நடத்தும் நிர்வாகங்கள் மழைக்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் இருக்கும். ஆனால் மாலையில் மழைக்கே அறிகுறி இல்லாமல் ஆலங்கட்டி மழை வெளுத்து வாங்கிவிடும். இதனால் விளையாட்டுப் போட்டிகளை நடத்து வது பெரும் சிக்கலாகி வருகிறது. இந்தியாவில் இதுபோன்ற பாதிப்புகள் லேசான அளவிலேயே உள்ளன. ஆனால் ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பா கண்ட நாடுகள் காலநிலை மாற்றத்தால் விளை யாட்டுப் போட்டிகளை நடத்தவே ஆர்வம் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் : இன்றைய ஆட்டம்

லக்னோ - பெங்களூரு இடம் : லக்னோ, உ.பி., / நேரம் : இரவு 7:30 மணி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.