தீக்கதிர் உலக செய்திகள்
21 Aug 2026, 9:11 pm

டிரம்ப் பேசியது கருத்து தெரிவிக்கக் கூட தகுதியற்றது கடுமையாக விமர்சித்த வடகொரியா

பியோங்யாங்,ஆக.21-அமெரிக்கா மற்றும் தென்கொரி யாவுக்கு இடையே வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்றுள்ளது. இந்தபயிற்சி துவங்குவதற்கு முன்ன தாக தென்கொரியாவுடனான பயிற்சி யில் எனக்கு உடன்பாடு இல்லை. எனினும்அதனை முழுமையாக ரத்து செய்ய முடியாது எனவே பயிற்சியை குறைக்குமாறு பென்டகனுக்கு உத்தரவிட்டுள்ளேன் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.மேலும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன் உடன் தனக்கு சிறந்த உறவு இருக்கிறது எனவும் கூறி இருந்தார். போர் பயிற்சியின் கால அளவை குறைத்ததுடன், கூட்டுப் பயிற்சியின் இரண்டாம் பாதியில் திட்டமிடப்பட்டிருந்தஎதிர்-தாக்குதல் பயிற்சிகளும், பல களப் பயிற்சிகளும் அமெரிக்க ராணுவத்தின் தரப்பில் முற்றிலுமாகநீக்கப்பட்டது.

இந்நிலையில் டிரம்ப்பின் இக்கருத்துக்களை வடகொரியா முற்றிலுமாக நிராகரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் ராணுவப் பயிற்சி குறைப்புஅறிவிப்பு கருத்து தெரிவிக்கக்கூட தகுதியற்றது, இதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை என கொரியதொழிலாளர் கட்சியின் மத்தியக் குழு துணை இயக்குநர் கிம் யோ ஜோங் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும் ராணுவப் பயிற்சிகள் குறைக்கப்படுவதை விட அமெரிக்க-தென்கொரிய கூட்டுப் பயிற்சிகள் தொடர்ந்துநடத்தப்பட்டு வருகின்றன என்ற உண்மை, அதற்கே தாங்கள் முக்கியத்துவம் அளிப்பதாகவும், இது வடகொரியாமீதான அமெரிக்காவின் பகைமைப் போக்கைத் தான் காட்டுகிறது என்றும் அவர் டிரம்ப்பின் நயவஞ்சக பேச்சைஅம்பலப்படுத்தியுள்ளார்.

வடகொரியா மற்றும் தென்கொரியா வுக்கு இடையே ஒற்றுமை உருவாகிவிடக் கூடாது எனவும் தொடர்ந்து இருநாடு களுக்கு இடையே போர் பதற்றங்களை அதிகரிப்பதற்காகவும் அமெரிக்கா தென்கொரியாவுடன் 1955 முதல்ராணுவப் பயிற்சிகள் நடத்துகின்றது. 1993 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் இத்தகைய பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டபிறகுதான் இரு கொரிய நாடுகளுக்கும் இடையே தூதரகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.இந்த போர்ப் பயிற்சியைக் குறைத்தா லும், தென்கொரியாவில் உள்ள 28,000 அமெரிக்க வீரர்கள் மூலமாகஒவ்வொரு ஆண்டும் 270 நாட்களுக்கும் மேலாக வெவ்வேறு பெயர்களில் அமெரிக்கா போர்ப் பயிற்சிகள்நடத்துகிறது என வடகொரியா சுட்டிக்காட்டியுள்ளது.

உண்மையில் இந்த ராணுவப்பயிற்சி குறைக்கப்பட்டதற்கு பின்னணியில் வடகொரியாவை அமைதிப்படுத்தவேண்டும் என்பதை தாண்டி தென்கொ ரியாவிற்கு அழுத்தம் தரும் யுக்தியாகவே டிரம்ப் கையாண்டுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வருகின்ற போருக்கு தென்கொரியா ராணுவ ரீதியாக உதவ வேண்டும் என டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால்அதற்கு தென்கொரியா ஒத்துழைக்க வில்லை. மேலும் தென்கொரியாவில் உள்ள அமெரிக்கப் படைகளைபராமரிக்க அந்நாடு உதவுவதில்லை. இதற்காக ஆண்டுதோறும் 10 பில்லியன் டாலர்கள் தென்கொரியா கொடுக்கவேண்டும் எனவும் டிரம்ப் கூறி வருகிறார்.ஆனால் அமெரிக்க ராணுவம் பாதுகாப்பு தருவதை விட செலவுகளை தான் அதிகரிக்கின்றது என தென்கொரியஅதிகாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அமெரிக்காவின் இந்த திடீர் முடிவிற்கு காரணம் ஈரான் உடனான போரில் அமெரிக்க பாதுகாப்புப் படைகளுக்குஏவுகணை மற்றும் ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்ட போது அமெரிக்கா எதிர்பார்த்த ராணுவ சேவைகளைதென்கொரியா செய்யவில்லை என்பதை முக்கிய பிரச்சனையாக பகுப்பாய்வாளர்கள் கருதுகின்ற னர். ஏனெனில் உண்மையாகவே வடகொரியாவுடன் சமரச முயற்சியைடிரம்ப் ஏற்றுக்கொள்ள விரும்பி இருந்தால் அவரால் சில வாரங்களுக்கு முன்பே போர்ப் பயிற்சிகள் முழுமையாகரத்து செய்திருக்க முடியும்.

வடகொரியாவுடன் சமரச முயற்சி களை செய்வது போல காட்டிக்கொண்டு அவர்களை இணக்கமற்ற நாடாகச்சித்தரிக்கவே அமெரிக்கா முயல்கிறது. மறுபுறம் தென்கொரியாவைத் தனது பொருளாதார மற்றும் ராணுவத்தேவை களுக்குப் பயன்படுத்திக் கொள்ளவே திட்டமிடுகிறது என துறை சார் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

ஐ.நா பொதுச்செயலாளருக்கான வேட்பாளர் கலந்துரையாடல்

ஐ.நா பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான கலந்துரையாடல்களை ஐ.நா பொது அவை (UNGA) புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை நடத்தியது. இதில் இரண்டு வேட்பாளர்கள் பங்கேற்றுத் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். புதன்கிழமை நடைபெற்ற உரையாடலில், உகாண்டாவால் பரிந்துரைக்கப்பட்ட அந்நாட்டுத் தூதர் ஓலாரா ஒட்டுன்னு (Olara Otunnu) பங்கேற்று பேசினார். வியாழக்கிழமை, டோங்கா நாட்டினால் பரிந்துரைக்கப்பட்ட ஈக்வடார் தூதர் இவோன் ஏ-பாகி பங்கேற்று பேசினார். ஏப்ரல் மாதம் முதல் இத்தகைய கலந்துரையாடல்களில் 6 வேட்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

எபோலா பாதிப்பு 5,200 யை கடந்தது

காங்கோவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட எபோலா பாதிப்புகளின் எண்ணிக்கை 5,200-ஐத் கடந்துள்ளது. எனினும் இந்தஅதிகாரப்பூர்வ எண்ணிக்கையானது உண்மையான தொற்று எண்ணிக்கைகளில் 30 முதல் 40 சதவீதம் மட்டுமே. இந்த நோய்த்தொற்றின் தீவிரமான பரவலானது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கலாம் என்றும் ஆப்பிரிக்காவின் முன்னணி பொது சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் 18 நிலவரப்படி, அந்நாட்டின் ஆறு மாகாணங்களில் 2,476 பேர் பலியாகியுள்ள

னர். 1,115 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.உண்மையில் 10,000 -15,000 பேர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகின்றது.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு திட்டம் : ஐரோப்பிய நாடுகள் கண்டனம்

மேற்குக்கரையில் பாலஸ்தீனர்களின் சொந்த இடங்களை மேலும் ஆக்கிரமிக்கும் திட்டத்தை இஸ்ரேல்அறிவித்துள்ளது. அதாவது பாலஸ்தீனர்களின் இடங்களை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி அங்கு இஸ்ரேல் மக்களைகுடியமர்த்துவதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதற்கு டெண்டர்களையும் வெளியிட இஸ்ரேல்முடிவெடுத்துள்ளது. இம்முடிவை பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே பிரிட்டன் ஆகிய ஆறுஐரோப்பிய நாடுகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. மேலும், இந்தத் திட்டங்களை இஸ்ரேல் உடனடியாகத்திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தோனேசியாவில் பயங்கர காட்டுத் தீ

இந்தோனேசியாவின் போர்னியோ மாநிலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ‘எல்நினோ’ வானிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள வறட்சியால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 2,00,000ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இது இந்தோனேசியத்தலைநகர் ஜகார்த்தாவைப் போல மூன்று மடங்கு பெரிய பகுதியாகும். ஜூலை மாதத்தில் மட்டும்இந்தோனேசியா முழுவதும் சுமார் 95,000 ஹெக்டேர் நிலப்பரப்பு தீப்பற்றி எரிந்துள்ளது. செப்டம்பர் மற்றும்அக்டோபர் மாதங்களில் இந்த பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அழிவுகரமான பதில் : ஈரான் எச்சரிக்கை

ஈரானில் ஆட்சிக்கவிழ்ப்பு சூழலை உருவாக்கும் நோக்கில் மிகக் கடுமையான நிதித் தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா மிரட்டல் விடுத்தது. அமெரிக்காவின் எந்தவொரு புதிய அச்சுறுத்தல்களுக்கும் தங்கள்பதில் “அழிவுகரமானதாக” இருக்கும் என்று ஈரான் வெள்ளிக்கிழமை கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரானுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் நாடுகளின் மீதும் பொருளாதார தடைகளை விதிப்போம் என டிரம்ப் மிரட்டியதைத் தொடர்ந்து, அமெரிக்க நிதித்துறைத் தலைவர் ஸ்காட்பெசென்ட்டும் மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில் தான் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் முழுபடைகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது.