தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பண்டிகைக்கு புறப்பட்ட வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் அதிகரித்த கூட்டம்

6 Nov 2026, 12:58 am
பண்டிகைக்கு புறப்பட்ட வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் அதிகரித்த கூட்டம்
<p><strong>பண்டிகைக்கு புறப்பட்ட வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் அதிகரித்த கூட்டம்</strong></p><p>திருப்பூர், நவ.5 -தீபாவளி மற்றும் சட் பூஜா கொண்டாட்டத்திற்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்காக புறப்பட்டதால் திருப்பூர் ரயில் நிலையத்தில் தொழிலாளர் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.பின்னலாடை நகரமான திருப்பூர் மாநகரில் வெளி மாவட்டங்கள் மற்றும் புலம் பெயர்ந்து வந்த வட மாநில தொழிலாளர்கள் லட்சக்ககணக்கில் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி மற்றும் சட் பூஜா உள்ளிட்ட பண்டிகைகளுக்கு தங்களது சொந்த ஊருக்கு செல்வது வாடிக்கை. இந்த ஆண்டு பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பண்டிகை கொண்டாடுவதற்கு சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல முனைப்பு காட்டி வருகின்றனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வேலை செய்யும் நிறுவனங்களில் தற்போது போனஸ் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இரண்டு, மூன்று நாட்கள் ஆகும் என்பதால் தற்போது போனஸ் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.இதனால் திருப்பூர் ரயில் நிலையத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக பீகார், ஒரிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. </p><p>கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து இருந்து தன்பாத் வரை செல்லும் ரயிலில் செல்வதற்காக திருப்பூர் ரயில் நிலையத்தில் அதிக அளவில் வட மாநில தொழிலாளர்கள் குவிந்தனர். திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் 50க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ரயில் நிலையத்துக்கு வந்த அனைத்து பயணிகளையும் முறையான சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். ரயிலில் செல்பவர்கள் ஆபத்தான பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்கின்றார்களா என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டனர். பின்னர் வட மாநில தொழிலாளர்களிடம் ரயிலில் முண்டி அடித்து கொண்டு ஏறாமல் எப்படி செல்ல வேண்டும் தங்களது பொருட்களை பாதுகாப்பாக எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து போலீசார் அறிவுறுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.