தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி

7 May 2026, 10:14 pm
வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி

வட இந்தியாவின் தொழிற்துறை மையங்களில் நிலவும் நவீன அடிமைத்தனத்திற்கு எதிராக, உழைக்கும் வர்க்கம் தனது போர்க்குணமிக்க எழுச்சியைத் தொடங்கியுள்ளது. ஹரியானாவின் பானிபட் முதல் பீகாரின் பெகுசராய் வரை, பொதுத்துறை நிறுவனங்களின் நிழலில் மறைந்துள்ள ஒப்பந்தத் தொழிலாளர் சுரண்டலைத் தவிடு பொடியாக்கும் வகையில் இப்போராட்டங்கள் புதிய வரலாற்றைப் படைத்து வருகின்றன.

பீகார் பரவுனி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைத் தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டம்

வேலைநிறுத்தம் 2

பெகுசராய், மே 7- பீகார் மாநிலம் பெகுசராய் மாவட் டத்தில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) நிறு வனத்திற்குச் சொந்தமான பரவுனி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பிப்ரவரி 2026-இல் ஒரு மாபெரும் வர்க்கப் போராட்டத்திற்குச் சாட்சி யாக நின்றது.

பல ஆண்டுகளாகத் தொடரும் 12 மணி நேர வேலை, ஊதியத் திருட்டு, பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் ஒப்பந்த தாரர்களின் தன்னிச்சையான போக் கிற்கு எதிராகத் தொழிலாளர்கள் வீதியில் இறங்கினர்.

போராட்டத்தின் தீப்பொறி விமலேஷ் குமார் போன்ற பல்லா யிரக்கணக்கான ஒப்பந்தத் தொழி லாளர்கள் இந்த ஆலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வாரத்தின் ஏழு நாட்களும், நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் உழைத்து வந்தனர்.

சட்ட ப்பூர்வமான குறைந்தபட்ச ஊதியம் மறுக்கப்பட்டதுடன், கூடுதல் நேர வேலைக்கான (Overtime) இரட்டிப்பு ஊதியம் ஒருமுறை கூட வழங்கப்பட வில்லை.

இவ்வாறு ஒவ்வொரு தொழி லாளியும் சுமார் 2 லட்சம் ரூபாய் வரையிலான நிலுவைத் தொகையை இழந்து தவித்தனர். 2025 டிசம்பரில் நிகழ்ந்த ஒரு விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததும், அதனைத் தொடர்ந்து நிர்வாகம் காட்டிய அலட்சியமும் தொழிலாளர்களின் கொந்தளிப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்தக் குமுறல்களின் வெளிப் பாடாக, பிப்ரவரி 2 அன்று காலை ஆலையின் நுழைவாயிலில் லால் பாபு ராய் தலைமையில் நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் தன் னெழுச்சியாக திரண்டனர். முறை யான தொழிற்சங்க அறிவிப்பு ஏது மின்றி, தங்களின் வாழ்வாதாரத் திற்காகத் திரண்ட அந்த மக்கள் கூட்டம், நிர்வாகத்திற்கு எதிராக விண்ணதிர முழக்கமிட்டது.

இந்த எழுச்சிக்கு அடிபணிந்த நிர்வாகம், அன்றே தொழிலாளர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தி 13 அம்ச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரச்ச னைகளை நிர்வாகம் முறையாக அங்கீகரித்த முதல் ஆவணமாக இது அமைந்தது. சமரச ஒப்பந்தமும் நிர்வாகத்தின் துரோகமும் அந்த 13 அம்ச ஒப்பந்தத்தில், பயோ-மெட்ரிக் முறை மூலம் கூடுதல் நேர வேலையைக் கணக்கிடுதல், சட்டப்பூர்வமான 8 மணி நேர வேலை மற்றும் வாராந்திர விடுமுறையை உறுதி செய்தல், பி.எப் மற்றும் இ.எஸ்.ஐ போன்ற சமூகப் பாதுகாப்பு நலன்களை முறையாக வழங்குதல், குடிநீர் மற்றும் கழி வறை போன்ற அடிப்படை வசதி களை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கி யக் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.

இருப்பினும், இந்த வெற்றியைச் சகித்துக்கொள்ள முடியாத நிர்வாகம், பிப்ரவரி 8 அன்று போராட்டத் தின் அடையாளமாகத் திகழ்ந்த லால் பாபு ராயைப் பணியிடை நீக்கம் செய்ததுடன், நள்ளிரவில் காவல்துறையை ஏவி அவரைக் கைது செய்தது. கண்கள் கட்டப்பட்ட நிலையில் அவர் ரகசிய இடத்தில் வைக்கப்பட்ட செய்தி காட்டுத்தீயாகப் பரவியது.

இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 9 அன்று தொழிலாளர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் வேலையைப் புறக்கணித்துப் போராட்டத்தில் குதித்தனர்.

தொழிலாளர்களின் இடைவிடாத அழுத்தத்தால், லால் பாபு ராய் அன்றே விடுவிக்கப்பட்டார். இது தொழிலாளர் வர்க்கத்தின் கூட்டுப் பேரம் பேசும் வலிமைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.

வடஇந்தியா முழுவதும் பரவும் கனல் பரவுனியில் தொடங்கிய இந்தப் போராட்டத்தின் காட்சிகள் சமூக வலைதளங்கள் மூலம் காட்டுத்தீயாகப் பரவி, ஹரியானா வின் பானிபட் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைத் தொழிலாளர்களையும் எழுச்சியடையச் செய்தது.

பிப்ரவரி 23 முதல் அங்கும் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் இதே போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தைத் தொடங்கினர்.

வடஇந்தியாவின் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் நிலவும் ஒப்பந்தத் தொழிலாளர் முறை யிலான சுரண்டலுக்கு எதிராக பரவுனி போராட்டம் ஒரு தொடக்கப் புள்ளியாக மாறியது.

தொடரும் சட்டப் போராட்டம் நிர்வாகம் பல வாக்குறுதிகளை அளித்த போதிலும், நடைமுறையில் 12 மணி நேர வேலை இன்றும் தொடர்வதாகத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நிலுவைத் தொகையைப் பெறுவதற்காக விமலேஷ் குமார் உள்ளிட்ட 11 தொழிலாளர்கள் தற்போது சட்டப்பூர்வமான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கான விசாரணை மே 4 அன்று பாட்னாவில் நடைபெற்றுள்ளது. சோவியத் உதவியுடன் 1965-இல் தொடங்கப்பட்ட இந்தப் பழம்பெரும் பொதுத்துறை நிறுவனம், இன்று பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அந்த வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்னும் வறுமையிலும் பாதுகாப்பற்ற சூழலிலும் தள்ளப்பட்டுள்ளனர்.

சிஐடியு, ஏஐடியுசி போன்ற மத்திய தொழிற்சங்கங்கள் இப்போராட்டங்களுக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்து, பிப்ரவரி 12 பொது வேலைநிறுத்தத்தின் மூலம் இதனைத் தேசியப் பிரச்சனையாக மாற்றியுள்ளன.

பரவுனி தொழிலாளர்களின் இந்தப் போராட்டம், வெறும் ஊதிய உயர்வுக்கானது மட்டுமல்ல; அது பொதுத்துறை நிறுவனங்களில் நிலவும் நவீன அடிமைத்தனத்திற்கு எதிரான ஒரு பெரும் போர்.

தொழிலாளர் ஒற்றுமை மட்டுமே சுரண்டலைத் தோற்கடிக்கும் என்பதை இந்தப் போராட்டம் மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துள்ளது. (லெப்ட் வியூஸ்)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.