வடஇந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி - வேலைநிறுத்தம் 63 சமூக ஊடகங்களும் இந்தியாவில் வெடித்துள்ள தொழிலாளர் எழுச்சியும் - டாக்டர் டி.எம். தாமஸ் ஐசக்
24 Jun 2026, 9:32 pm

வடஇந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி - வேலைநிறுத்தம் 63 சமூக ஊடகங்களும் இந்தியாவில் வெடித்துள்ள தொழிலாளர் எழுச்சியும் - டாக்டர் டி.எம். தாமஸ் ஐசக்

பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கார்ப்ப ரேட்டுகளும் நவதாராளவாதச் சக்தி களும் பெரும் கொண்டாட்ட மன நிலையில் இருந்து வருகின்றன. அதற்குப் பலமான காரணமும் உண்டு.

கடந்த பத்தாண்டுகளில் தொழிற் சாலைத் தொழிலாளர்களின் உண்மை யான ஊதிய வளர்ச்சி (Real wage growth) வெறும் 0% முதல் 1.5% என்ற அடிமட்ட அளவிற்கே சுருங்கிப் போனது.

இதற்கு முந்தைய பத்தாண்டு களில் இது 2.5% முதல் 3.5% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர் தரவு அமைப்பின் (PLFS) புள்ளிவிவரங்களின்படி, விவசாயம் சாரா பிற துறைகளின் உண்மையான ஊதிய வளர்ச்சி முற்றிலும் பூஜ்ஜிய மாக அல்லது மைனஸ் அளவிற்கே சென்றுள்ளது.

அதாவது, உற்பத்தித் துறையின் ஒட்டுமொத்த லாபத்தில் கார்ப்பரேட்டுகளின் பங்கு அசுர வேகத்தில் உயர்ந்த போது, தொழி லாளர்களின் கூலிப் பங்கோ மிகக் கொடூரமாகக் குறைக்கப்பட்டது.

உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான இந்தத் துரோகங்களுக்கு எதிராக, ஆரம்பத்தில் பெரிய அளவிலான எதிர்வினைகள் ஏதுமின்றி மவுனம் நிலவியது. 2006-2014 காலகட்டத்தில் ஆண்டுக்குச் சராசரியாக 354 ஆக இருந்த தொழிலாளர் வர்க்கத்தின் நேரடிப் போராட்டங்கள், 2015-2023 காலகட்டத்தில் வெறும் 76 ஆகக் குறைந்தன.

அதேபோல், போராட்டங் களால் இழந்த மனித வேலை நாட்களின் எண்ணிக்கையும் 1.7 கோடி யிலிருந்து 30 லட்சமாகக் குறைந்தது. ஆனால், கார்ப்பரேட்டுகளின் இந்தச் சொகுசு வாழ்வை 2026-ன் முதல் காலாண்டு முற்றிலும் தலைகீழாக மாற்றியமைத்துள்ளது.

இந்தியாவின் முதன்மைத் தொழில் வழித்தடங்களில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள், சிமெண்ட், இரும்பு, ஜவுளி மற்றும் பொறியியல் ஆலைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நேரத்தில் 29 பிரம்மாண்ட வேலைநிறுத்தப் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, நொய்டாவில் வெடித்துள்ள தொழிலாளர்களின் ஆவேசக் கிளர்ச்சி, இந்த புதிய வர்க்கப் போராட்ட அலையை நாட்டின் முதன்மை விவாதப் பொருளாக மாற்றியுள்ளது.

ஏமாற்றப்பட்ட குறைந்தபட்ச ஊதியமும் 12 மணி நேரச் சுரண்டலும் இந்தத் தொடர் வேலைநிறுத்தப் போராட்டங்கள் அனைத்திற்கும் பின்னால் பொதுவான கோரிக்கை களும், உத்திகளும், தொழிலாளர் வர்க்கத்தின் குமுறல்களும் ஒத்த தன்மையுடன் காணப்படுகின்றன.

அவற்றுள் முதன்மையானது - ‘குறைந்தபட்ச ஊதியம்’ (Minimum Wages) மற்றும் 8 மணி நேர வேலைக் கான உரிமையாகும். ஒன்றிய அரசு கொண்டுவந்த ‘நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்’, தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பு, வேலைக்கான உத்தரவாதம் மற்றும் வேலை நேரக் கட்டுப்பாடுகளை அடியோடு பறித்துவிட்டன.

இந்தச் சட்டங்களைக் கொண்டுவரும் போது, ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரே மாதிரியான ‘தேசிய குறைந்தபட்ச ஊதியம்’ நிர்ண யிக்கப்படும் என்ற போலி வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், சட்டம் இயற்றப்பட்டு 7 ஆண்டுகள் கடந்தும் (2019 முதல் 2026 வரை), இதுவரை ஒன்றிய பாசிச அரசு அந்த குறைந்த பட்ச ஊதியத்தை முறைப்படி அறி விக்கவில்லை. இதன் விளைவாக, தற்போதும் ஒரு திறனற்ற தொழி லாளிக்கான அதிகாரப்பூர்வ தேசிய தினக்கூலி வெறும் ₹175 (மாதத்திற்கு ₹5,000) என்ற பட்டினிச் சம்பளமாகவே நீடிக்கிறது.

போராட்டங்களுக்குப் பிந்தைய அரைகுறை திருத்தங்களுக்குப் பிறகும், தற்போதைய மாதக் கூலி நிலவரம் இதோ: புதுதில்லி: ₹18,456 ஹரியானா: ₹15,220 உத்தரப் பிரதேசம்: ₹12,356 முதல் ₹13,690 வரை புதிய தொழிலாளர் சட்டங்கள் 12 முதல் 13 மணி நேரக் கொத்தடிமை வேலைமுறையைச் சட்டப்பூர்வமாக்கியுள்ளன. ஆனால், அதற்கான இரட்டிப்பு கூடுதல் கூலியை (Double overtime wages) கார்ப்பரேட்டுகள் வழங்குவதில்லை; மாறாக, அந்தப் பணம் இடைத்தரகர்களான ஒப்பந்ததாரர்களின் பைகளையே நிரப்புகிறது.

இதன் நடுவே, மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமும், சமையல் எரிவாயு விலை ஆயிரத்தைக் கடந்து விண்ணைத் தொட்டதும் தொழிலாளர்களை வீதிக்குக் கொண்டுவந்துவிட்டன. 80% ஒப்பந்தத் தொழிலாளர்களும் ‘பிஎல்எஃப்எஸ்’ அதிர்ச்சித் தகவல்களும் இந்த 2026 வேலைநிறுத்த அலையின் மிக முக்கிய அம்சமே - ஒப்பந்தத் தொழிலாளர்களின் அசாத்திய எழுச்சியாகும். புதிய சட்டங்கள் குறிப்பிட்ட கால வேலை வாய்ப்பு (Fixed-term employment) என்ற பெயரில் தற்காலிக ஒப்பந்த முறையை முழுமையாக அங்கீ கரித்துள்ளன.

இன்று இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையில் 42 சதவீதத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் நிர்வாகத்தின் நேரடி ஊழியர்கள் அல்ல; அவர்கள் ஒப்பந்ததாரர்களால் சுரண்டப்படும் தற்காலிகக் கூலிகள் மட்டுமே. உழைப்புச் சுரண்டலின் கொடூர முகம் (PLFS 2025 தரவுகள்) இந்தியாவில் 58% தொழிலாளர் களுக்கு முறையான வேலை ஒப்பந்தக் கடிதங்கள் கிடையாது. 52% தொழிலாளர்களுக்கு எவ்வித சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் கிடையாது

47% தொழிலாளர்களுக்குச் சம்ப ளத்துடன்கூடிய விடுப்பு கிடையாது. பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்களாக இருக்கும் இந்த ஒப்பந்த உழைப்பாளர்களுக்கு உள்ளூர் அளவில் எவ்வித சமூகப் பாது காப்பும் இருப்பதில்லை. தொழிற்சங் கம் அமைக்கும் உரிமை மறுக்கப்பட்டு, நிர்வாகத்தின் கைக்கூலிச் சங்கங் கள் திணிக்கப்படும் சூழலில், இந்தத் தொழிலாளர்கள் தங்களின் உரிமை களுக்காகப் புதிய வடிவிலானப் போரா ட்டக் களத்தைக் கண்டறிந்துள்ளனர்.

கோடி மீடியாக்களின் பொய்ப் பிரச்சாரமும் வாட்ஸ்அப் எழுச்சியும் தொழிற்சங்கக் கட்டமைப்புகளுக்கு வெளியே இருந்த ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் நொய்டா வில் ஒரே இரவில் திரண்டதைக் கண்டு மிரண்டுபோன கார்ப்பரேட் ‘கோடி மீடியாக்கள்’ (Godi Media) வழக்கம் போல் தங்களின் சதித் திட்டக் கதைகளை அவிழ்த்துவிடத் தொடங்கின.

‘டைம்ஸ் நவ்’ ஊடகம் வெளியிட்ட சில பரபரப்புத் தலைப்புகள் இதோ: “கியூஆர் கோடு (QR Code) மூலம் வாட்ஸ்அப் குழுக்களில் இணைக்கப் பட்ட தொழிலாளர்கள்” “ஒரே இரவில் வாட்ஸ்அப் குழுக்களில் குவிந்த போராட்டக்காரர்கள்” “போராட்டத்தைத் தூண்டிவிட அனுப்பப்பட்ட ஆவேசப் பதிவுகள்” “கைதானவர்களின் ஸ்மார்ட்போன் களில் சிக்கிய ஆதாரங்கள்” தொழிலாளர்கள் தங்களுக்குள் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கிப் பேசுவதையே ஏதோ ‘தேசத் துரோகக் குற்றம்’ போலவும், பாகிஸ்தான் சதி போலவும் சித்தரித்து இந்த ஊடகங்கள் கார்ப்பரேட்டுகளுக்குத் தங்களின் விசுவாசத்தைக் காட்டின. ஆனால், உண்மை என்ன வெனில், சமூக ஊடகங்களே இந்த வர்க்கப் போராட்டங்களை ஒருங்கி ணைக்கும் முதன்மைப் பாலமாகத் திகழ்ந்தன.

பிப்ரவரி மாதத்தில் பரவுனி, கவுஹாத்தி மற்றும் பானிபட் ஆகிய இடங்களில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) சுத்திகரிப்பு ஆலைகளில் வெடித்த வேலைநிறுத்தங்களுக்கு இந்த வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ரீல்களே அடித்தளமிட்டன. பரவுனி ஆலை வாயில் மறியல் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி, மற்ற ஆலைத் தொழிலாளர்களையும் ஆவேசக் களத்திற்கு இட்டுச் சென்றன.

முறையான தொழிற்சங்கக் கூட்டங்கள் நடத்த முடியாத நெருக்க டியிலும், வாட்ஸ்அப் செய்திகள் மூலம் திரண்ட தொழிலாளர்கள், பிப்ரவரி 12 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திய தேசிய வேலைநிறுத்தத்தைப் பிரம்மாண்ட வெற்றியாக மாற்றினர். சிஐடியு ஹரியானா மாநிலச் செயலாளர் பகவான் சிங் உள்ளிட்டோரின் முகநூல் பதிவுகள் புலம்பெயர் தொழிலாளர்களிடம் காட்டுத்தீயாகப் பரவின. பேஸ்புக் தணிக்கையும் பாசிச ஒடுக்குமுறையும் தொழிலாளர்களின் எழுச்சியைக் கண்டு அஞ்சிய கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு ஆதரவாக பேஸ்புக் நிறு வனத்தின் அல்காரிதம்கள் (Algorithms) செயல்பட்டன.

தொழி லாளர்களின் போராட்ட வீடியோக்கள் “வன்முறையானவை” எனக் கூறி தணிக்கை செய்யப்பட்டன; சிஐடியு-வின் அதிகாரப்பூர்வப் பக்கங்கள் ‘ஷாடோ பேன்’ (Shadow ban) செய்யப் பட்டு அதன் வீச்சு முடக்கப்பட்டது. கார்ப்பரேட் ஆதரவுக் கணக்குகள் மூலம் தொழிற்சங்கங்கள் மீது வன்முறைப் பழி சுமத்தப்பட்டது. ஒன்றிய அரசு தனது 2021 தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ், இணை யச் சேவைகளை முடக்கியதோடு சமூக ஊடகக் கணக்குகள் மீது அடக்குமுறையை ஏவியது.

இதே காலகட்டத்தில், ஆன்லைன் உணவு மற்றும் சேவை வழங்கும் கிக் தொழிலாளர்களும் தங்களின் உரிமைகளுக்காக மூன்று முறை செயலிகளை முடக்கிப் போராடினர். புத்தாண்டு இரவில் 10 நிமிட டெலிவரி முறைக்கு எதிராக ஒரு லட்சம் தொழிலாளர்கள் ‘லாக்-ஆஃப்’ (Log-off) செய்ததும், பிப்ரவரி 7 மற்றும் குடியரசு தினத்தில் ஓலா, உபெர், ரேபிடோ தொழிலாளர்கள் செயலிகளை முடக்கியதும் முழுக்க முழுக்க வாட்ஸ்அப் கிரிப்டோ குழுக்கள் மூலமே திட்டமிடப்பட்டன.

நொய்டா தொழிலாளர் மீதான அடக்குமுறை நொய்டாவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்கள் பாசிசக் காவல்துறையினரால் மிகக் கொடூரமாக ஒடுக்கப்பட்டன. 3,000-க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய போலீசார் குவிக்கப்பட்டு, கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப்பட்டும், லத்தி சார்ஜ் நடத்தியும் 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிறை பிடிக்கப்பட்டனர்.

தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிகள் தரைமட்ட மாக்கப்பட்டு, பயங்கரவாதக் காடாக மாற்றப்பட்டன. சிஐடியு அலுவல கங்கள் முற்றுகையிடப்பட்டு, மூத்த தலைவர் கங்கேஷ்வர் தத் சர்மா வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களைச் சந்திக்கச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, நாடாளுமன்ற உறுப்பி னர்கள் மற்றும் இடதுசாரித் தலை வர்கள் நொய்டாவிற்குள் நுழையாத வாறு பாஜக அரசின் காவல் துறை தடுத்து நிறுத்தியது. சமூக ஊட கங்களில் உண்மைச் செய்திகளைப் பகிர்ந்தவர்கள் மீதும் வழக்குகள் பாய்கின்றன. அடக்குமுறைகள் மூலம் தற்காலிக மாகப் போராட்டங்கள் ஒடுக்கப் பட்டிருக்கலாம்.

ஆனால், கார்ப்பரேட்-பாசிசக் கூட்டணிக்கு எதிரான இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் இந்த 2026 சமூக ஊடக எழுச்சி என்பது பனிப்பாறையின் ஒரு சிறு முனை மட்டுமே! வரும் நாட்களில் இந்த வர்க்கப் போராட்டத்தின் அனல் தெறிக்கும் உண்மைகளை ‘தி லெப்ட் வியூஸ்’ தொடர்ந்து உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டும். தி லெப்ட் வியூஸ்