தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி நொய்டா, மானேசர் தொழிலாளர் போராட்டங்களும் காவல்துறையின் பாசிச ஒடுக்குமுறை உத்திகளும்

11 Jun 2026, 8:48 pm
வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி நொய்டா, மானேசர் தொழிலாளர் போராட்டங்களும் காவல்துறையின் பாசிச ஒடுக்குமுறை உத்திகளும்

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி நொய்டா, மானேசர் தொழிலாளர் போராட்டங்களும் காவல்துறையின் பாசிச ஒடுக்குமுறை உத்திகளும்

​​​​​​உழைப்பவர்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் “கார்ப்பரேட்-அரசு கூட்டணி”

வேலைநிறுத்தம் 57

புதுதில்லி, ஜூன் 11- தில்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தின் (NCR) நொய்டா மற்றும் மானேசர் தொழில் மண்டலங்களில், தங்களின் வாழ்வாதார உரிமை களுக்காகவும் நியாயமான ஊதிய உயர்வுக்காக வும் தொழிலாளர்களும் இடதுசாரி ஆர்வலர் களும் நடத்திய போர்க்குணமிக்க வர்க்கப் போராட்ட ங்களை ஒடுக்க, கார்ப்பரேட் முதலாளிகளுடன் கைகோர்த்துக்கொண்டு அரசும் காவல்துறையும் நடத்தியுள்ள பாசிச ஒடுக்குமுறைகள் அதிர்ச்சிய லைகளை ஏற்படுத்தியுள்ளன. 2014-க்குப் பிந்தைய வலதுசாரி பாசிச ஆட்சிக்காலத்தில் அரசினுடைய ஒடுக்குமுறைகளும், பழிவாங்கும் நடவடிக்கைகளும் புதியவை அல்ல என்ற போதிலும், இந்த புதிய வர்க்கப் போராட்ட அலையின் மீது ஏவப்பட்டுள்ள அடக்குமுறைகளில் சில ஆபத்தான உத்திகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளன.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் (AIBOC) இருவார இதழான ‘பேங்க் பீட்ஸ்’ (Bank Beats) இதழின் 20-ஆவது பதிப்பில் விரிவாக அலசப்பட்டுள்ள இக்கோர உத்திகள், நாட்டில் சட்டத்தின் ஆட்சியும், அரசியலமைப்புச் சட்டமும் எவ்வாறு அப்பட்டமாகத் தகர்க்கப்படுகின்றன என்பதை அம்பலப்படுத்துகின்றன.

பிணை மறுப்பிற்கான ‘கொலை முயற்சி’ வழக்குகளும் தேசிய பாதுகாப்புச் சட்ட ஏவுதலும்

தொழிலாளர்களின் எழுச்சியை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிவதற்காக, காவல்துறை மற்றும் அரசுத் தரப்பு இணைந்து முதல் தகவல் அறிக்கைகளில் (FIR) மிகக் கடுமையான பிரிவுகளை திட்டமிட்டுச் சேர்த்துள்ளன. நொய்டா மற்றும் மானேசர் ஆகிய இரு இடங்களிலுமே, எவ்வித முகாந்திரமும் இன்றி, நீதிமன்ற விசாரணையில் சற்றும் நிலைத்து நிற்காத ‘கொலை முயற்சி’ (ஆயுள் அல்லது 7 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்ட னை விதிக்கக்கூடிய பிரிவு) போன்ற கொடூரமான குற்றச்சாட்டுகள் தொழிலாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

விசாரணையின் ஆரம்பக் கட்டத்தில் நீதிமன்றங்கள் காவல்துறை தரப்பு வாதங்களையே நம்பியிருக்கும் சூழலைப் பயன்படுத்தி, தொழிலாளர்களை நீண்ட காலம் சிறையில் அடைத்து வைப்பதன் மூலம் ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும் ஒரு பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்த நிர்வாகம் முயல்கிறது. மேலும், பிணை கிடைப்பதைத் தடுப்பதற்காகவே ‘தேசிய பாதுகாப்புச் சட்டம்’ மற்றும் ‘உபா’ போன்ற கொடூரமான கறுப்புச் சட்டங்கள் ஏவப்படுகின்றன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதித்யா ஆனந்த், உத்தரப் பிரதேசத்திலிருந்து ஆக்ரிதி சவுத்ரி, சத்யம் வர்மா மற்றும் தில்லியிலிருந்து யோகேஷ் மீனா ஆகியோர் கைது செய்யப்பட்ட விதம், எவ்வித சட்டப்பூர்வ நடைமுறைகளையும் பின்பற்றாமல், கடத்தலுக்கு இணையான சட்டவிரோதக் கைதுகளாகவே அரங்கேறியுள்ளன.

காவல்துறையின் அராஜகமும், மாஜிஸ்திரேட்டுகளின் கடமை தவறுதலும்

கைது நடவடிக்கைகள் மற்றும் தடுப்புக்காவல் சட்டங்களின்படி எவ்வித விதிகளும் பின்பற்றப்படவில்லை. தொழிலாளர்களைக் கைது செய்த பின், அதனை ஆவணங்களில் காட்டாமல் ரகசிய இடங்களில் வைத்துத் தடியடி நடத்துவது, கைதுக்கான காரணங்களை விளக்க மறுப்பது, குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்காமல் இருப்பது, நீதிமன்ற உத்தரவு இருந்தும் வழக்கறிஞர்களைச் சந்திக்க விடாமல் தடுப்பது எனப் பல அக்கிரமங்கள் அரங்கேறியுள்ளன.

இதனை விடக் கொடுமை என்னவெனில், ‘நீதிமன்றக் காவல்’ என்பதன் உண்மையான அர்த்தத்தை உணராமல், காவல்துறையின் சித்ரவதைக்கு உள்ளான தொழிலாளர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பைக் கண்காணிக்கத் தவறியது கீழ் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுகளின் கடமை தவறிய போக்காகும். காவல்துறையின் இத்தகைய கொடூர சித்ரவதைகளை நாட்டின் உச்சநீதிமன்றமே தலையிட்டு சுட்டிக்காட்டும் நிலைக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

வாட்ஸ்அப் சதிப் பின்னல்களும், ‘அர்பன் நக்சல்’ முத்திரைகளும்

தில்லி கலவர வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட அதே ஆபத்தான உத்தியை இங்கும் காவல்துறை கையில் எடுத்துள்ளது. தொழிலாளர்களின் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களைப் ‘பயங்கரவாத சதித் திட்டத்தின்’ சான்றுகளாகக் காட்டி பிணை மறுக்கப்படுகிறது. சில இடங்களில் காவல்துறையினரே இக்குழுக்களுக்குள் ஊடுருவி, தொழிலாளர்களைத் தூண்டி விடும் நபர்களாக செயல்பட்டுள்ளனர். முறையான புலனாய்விற்கு பதிலாக, வாட்ஸ்அப் செய்திகளை முதன்மை ஆதாரமாகக் காட்டித் தொழிலாளர்களை நீண்ட காலம் சிறையிலடைக்கும் தந்திரம் அரங்கேறி வருகிறது.

மறுபுறம், ஆலை முதலாளிகள் செய்யும் அப்பட்டமான தொழி லாளர் சட்ட மீறல்களை முழுமையாக மூடிமறைக்கும் அரசு, தொழி லாளர்களின் நியாயமான ஊதியக் கோரிக்கைகளைத் திசைதிருப்ப ‘பாகிஸ்தான் ஆதரவாளர்கள்’, ‘அர்பன் நக்சல்கள்’ மற்றும் ‘சதிகாரர்கள்’ போன்ற வலதுசாரி அவதூறு முத்திரை களைக் குத்தி வர்க்கப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறது. உத்தரப் பிரதேச முதலமைச்சர் உள்ளிட்டோரின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள், உழைக்கும் வர்க்கத்தின் வயிற்றுப் பசிக்கான போராட்டத்தைக் குற்றவியல் செயலாக மாற்றும் பாசிச-கார்ப்ப ரேட் கூட்டணியின் உத்தியை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

கார்ப்பரேட் குண்டர்களின் வன்முறையும் பாசிசக் கூட்டணியும்

கார்ப்பரேட்-அரசு கள்ளக்கூட்டணியின் மிக மோசமான வடிவம் ஆலை வாயில்களில் அரங்கேறியுள்ளது. தொழில் அதிபர்களின் தனியார் பாதுகாப்புப் படையினர் அல்லது ‘பவுன்சர்கள்’ (Bouncers) என்று அழைக்கப்படும் கார்ப்பரேட் குண்டர்கள், சீருடை அணிந்த காவல்துறையினருடன் தோளோடு தோள் நின்று தொழிலாளர்களை வளைத்துப் பிடித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

தொழிலாளர்களின் கைகால்கள் முறிக்கப்பட்டு, தலை மற்றும் மார்பகங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு இரத்தக் கறை படிந்த நிலையிலும், அந்தத் தனியார் ரௌடிகள் மீது எவ்வித சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுருக்கமாகக் கூறின், கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக, தொழிலாளர்களின் நியாயமான குரல்களை வன்முறை மற்றும் சிறைவாசம் மூலம் ஒடுக்க அரசு இயந்திரம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒட்டுமொத்த சட்டத்தின் ஆட்சியின் வீழ்ச்சியையே காட்டுகிறது.

- தி லெப்ட் வியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.