சிலட்டூரில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
8 Feb 2026, 3:55 pm
<p><strong>சிலட்டூரில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி</strong></p>
<p>அறந்தாங்கி, பிப்.8 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிலட்டூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் சந்தனகாப்பு மற்றும் தை திருநாளையொட்டி, வட மாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 13 காளைகள் பங்கேற்ற நிலையில் அதனை 13 குழுக்களைச் சேர்ந்த வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கி னர். இந்த போட்டி காளை கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரி சோதனை செய்த பின்னர் களத்திற்குள் அனுமதிக்கப் பட்டனர். இதற்காக அமைக் கப்பட்ட வட்ட வடிவிலான களத்தில் மதுரை, சிவ கங்கை, தின்டுக்கல், புதுக் கோட்டை உள்ளிட்ட பகுதி களில் இருந்து 13 காளை களும், 13 குழுக்களை சேர்ந்த 100 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண் டனர். வடமாடு மஞ்சுவிரட்டு 13 சுற்றுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு சுற்றிலும் 9 வீரர்கள் மட்டுமே அனு மதிக்கப்பட்டனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் காளையர் களிடம் பிடிபடாத காளை களின் உரிமையாளர்களுக் கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. வடமாடு மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டை அறந்தாங்கி மட்டுமின்றி பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து கண்டு களித்தனர்.</p>
