தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வடசென்னைக்கு தனி நலவாரிய அலுவலகம் அமைத்திடுக தையல் சங்க மாநாடு வலியுறுத்தல்

yesterday
வடசென்னைக்கு தனி நலவாரிய அலுவலகம் அமைத்திடுக தையல் சங்க மாநாடு வலியுறுத்தல்

வடசென்னைக்கு தனி நலவாரிய அலுவலகம் அமைத்திடுக தையல் சங்க மாநாடு வலியுறுத்தல்

சென்னை, நவ. 15-வடசென்னை மாவட்டத்திற்கு தனி நலவாரிய அலுவலகம் அமைக்க வேண்டும் என தையல்சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது.

சென்னை பெருநகர தையல் தொழிலாளர் சங்கத்தின் அம்பத்தூர் பகுதி12ஆவது மாநாடு தோழர் வி.பி.சிந்தன் நினைவகத்தில் சனிக்கிழமை (நவ. 14) நடைபெற்றது. தலைவர் டி.கே.சம்பத்ராவ் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் ஜி.தேவிகலா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.

மாவட்டச் செயலாளர் ஜி.குணசேகரன் மாநாட்டை துவக்கி வைத்தார். செயலாளர் எஸ்.மைதிலி வேலை அறிக்கையையும், பொருளாளர் டி.பாலசுப்பிரமணியன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். க.உதயா (தமுஎகச) வாழ்த்திப் பேசினார். சிஐடியுவடசென்னை மாவட்டக்குழு உறுப்பினர் எல்.பி.சரவணத்தமிழன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.முன்னதாக துணைத்தலைவர் எஸ்.வேலு வரவேற்றார். இணைச்செயலாளர் பி.மணி நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

தையல் தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு தனிநிதியம் உருவாக்க வேண்டும், தையல் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்றார்போல் தையல் நலவாரிய பணப்பயன்களை அதிகரிக்க வேண்டும், வடசென்னை மாவட்டத்திற்கு தனி நலவாரிய அலுவலகம் அமைக்க வேண்டும், தமிழக அரசால் நடத்தப்படும் இலவச பள்ளி சீருடை தைக்கும் பெண் தையல் தொழிலாளர்களுக்கு பாரபட்சமின்றி அனைவருக்கும் துணிகள் வழங்க வேண்டும்உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் தேர்வுதலைவராக இ.பாக்கியம் செயலாளராக எஸ்.வேலு, பொருளாளராக எஸ்.மைதிலி உள்ளிட்ட 11பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.