தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வடசென்னை மாவட்ட மூத்த தோழர் வி. முருகையன் காலமானார்

14 Dec 2025, 3:45 pm
வடசென்னை மாவட்ட மூத்த தோழர்  வி. முருகையன் காலமானார்
<p><strong>வடசென்னை மாவட்ட மூத்த தோழர் &nbsp;வி. முருகையன் காலமானார்</strong></p> <p>சென்னை, டிசம்பர் 14: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த தோழர் வி. முருகையன் (89), வயது மூப்பின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (டிச.14) காலை காலமானார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை மன்னங்காடு பகுதியில் பிறந்த திரு. வி. முருகையன், சிறு வயதிலேயே வேலை தேடிச் சென்னை வந்தார். ஆரம்பத்தில் ஒரு &nbsp;மருத்துவரிடம் பணியாற்றிய இவர், 1962 ஆம் ஆண்டு புகழ்பெற்ற பின்னி ஆலையில் தொழிலாளியாகப் பணிக்குச் சேர்ந்தார். அங்கு தொழிற்சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாகச் செயல்பட்டார். அவர் ஐக்கிய தொழிலாளர் யூனியன் பொதுச் செயலாளராகவும், தலை வராகவும், மெட்ராஸ் லேபர் யூனியனின் &nbsp;பொருளாளராகவும், பொதுச் செயலாளராக வும் திறம்படப் பணியாற்றினார். பின்னர் தன்னை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்ட அவர், மாவட்டக்குழு, மாவட்ட செயற்குழு &nbsp;எனத் தான் ஏற்றுக்கொண்ட அனைத்துப் பொறுப்புகளிலும் சிறப்பாகச் செயல் பட்டார். பின்னி ஆலை மூடல் போராட்டம்: பின்னி ஆலை நிர்வாகம் தொழிலா ளர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்காமல் ஆலையை மூடியபோது, இவர் தொழிலாளர் களைத் திரட்டி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு &nbsp;தொடுத்து, தொழிலாளர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தந்ததில் முக்கியப் பங்காற்றினார். சட்டமன்ற வேட்பாளர் 1980 அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு 42000 வாக்கு கள் பெற்றார். &nbsp;சிபிஎம் &nbsp;தலைவர்கள் &nbsp;உ.ரா.வரத ராசன், வே.மீனாட்சிசுந்தரம், அ.சவுந்தர ராசன் போன்ற தலைவர்களோடு இணைந்து தொழிலாளர்கள் உரிமைக்காக களம் கண்டவர் தோழர் முருகையன். இன்று உடல் தகனம் &nbsp;தோழர் வி. முருகையன் அவர்களின் உடல், திங்கட்கிழமை (டிச. 15) காலை 11 மணி யளவில், அயனாவரம் திருவள்ளூர் நகர், மாதா கோவில் தெருவில் (ஈ.எஸ்.ஐ. மருத்து வமனை பின்புறம்) உள்ள அவரது இல்லத் திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, நியூ ஆவடி சாலையில் உள்ள மயானத்தில் எரியூட் டப்படும்.முன்னதாக காலை 9.30 மணிக்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பங் கேற்கும் இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.