தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வடசென்னை பாலர் பூங்கா சார்பில் சிறுவர்களின் “இரண்டாம் கூடுகை கொண்டாட்டம்”

3 hours before
வடசென்னை பாலர் பூங்கா சார்பில்  சிறுவர்களின் “இரண்டாம் கூடுகை கொண்டாட்டம்”
<p><strong>வடசென்னை பாலர் பூங்கா சார்பில் சிறுவர்களின் “இரண்டாம் கூடுகை கொண்டாட்டம்”</strong></p><p>சென்னை, ஜூலை 21- வடசென்னை மாவட்ட பாலர் பூங்கா சார்பில் 2 ஆவது மாநாடு மற்றும் சிறுவர் சிறுமிகளின் திற மைகளை ஊக்குவிக்கும் வகையில் “இரண்டாம் கூடுகை கொண்டாட்டம்” நிகழ்ச்சி காவியா தலைமை யில் சென்னை மூலக்கடை யில் நடைபெற்றது. மனித தோற்றம் வளர்ச்சி குறும்படம், மலர் கம்பம் - யோகா, திருக் குறள், கவிதை, பாடல் என சிறுவர், சிறுமிகளின் நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை சேர்ந்த ராஜ சிம்மன் தலைமையில் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி யும் நடைபெற்றது. முன்ன தாக தருண் வரவேற்றார். மதுவந்தி நன்றி கூறினார். நிகழ்ச்சியின் இறுதியில் போர் வேண்டாம் அமைதி வேண்டும் என்றும் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியும் எடுக்கப் பட்டது. இதில் ஒருங்கிணைப் பாளர்கள் பகத்சிங், தர்ஷன், பொறுப்பாளர்கள் எம்.கோடீஸ்வரி, கோபால், நித்திஷ், சாரதி, சுரேஷ் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பாலர்களும், 40க் கும் மேற்பட்ட பெற்றோர் களும் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகள் தேர்வு தலைவராக சோனாச்சி, செயலாளராக பகத்சிங், பொருளாளராக தருண், துணைச் செயலாளர்களாக குஷி. திரிதேவ் , துணைத் தலைவர்களாக தருண் விஜய், தென்றல் உள்ளிட்டு 15 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்ய ப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.