மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
23 Nov 2025, 6:20 pm
<p><strong>மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு</strong></p>
<p>நாமக்கல், நவ.23- திருச்செங்கோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவ லாக மழை பெய்து வருவ தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி களில் ஞாயிறன்று காலை முதல் சாரலாகவும், மிதமானதாகவும், அவ்வப்போது விட்டு விட்டு பலமாகவும் மழை தொடர்ந்து பெய்தது. பட்டறை மேடு, கொல்லப்பட்டி கூட்டப்பள்ளி, தோக்கவாடி, குமாரமங்கலம், எலச்சிபாளை யம் மாணிக்கம் பாளையம் உள்ளிட்ட பகுதி களில் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழலும் தொடர் மேக மூட்டமும் காணப்படுவதால், பகலிலேயே வீட்டுக்குள் மின்விளக்குகளை எரியவிடும் அளவு இருட்டாக இருந்தது. மேலும், திங் களன்று அன்றாடப் பணிகளை கவ னிக்க வேண்டும் என்பதால் பல்வேறு பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள், திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலேய காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மழையின் காரணமாக அவர்கள் உரிய பேருந்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட் டது. தொடர்ந்து பள்ளிபாளையம், நாமக் கல், ராசிபுரம், கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழை பெய்தது.</p>
<p> </p>
