நூலாற்றுப் படை
14 Jun 2026, 10:48 pm

நூலாற்றுப் படை

பொது சிவில் சட்டம் - பன்முகத் தன்மையை நசுக்கும் சியோனிசத் தந்திரம்

ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கூட்டணி உருவான காலத்திலிருந்தே ராமர் கோயில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், பொதுச் சிவில் சட்டம் ஆகிய மூன்று அம்சங்களை முதன்மை நோக்கங்களாகக் கொண்டிருந்தது. இதில் முதல் இரண்டை நிறைவேற்றியுள்ள பாசிசச் சக்திகள், இறுதியாகக் கையில் எடுத்துள்ள ‘பொதுச் சிவில் சட்டம்’ என்னும் ஆயுதத்தின் பின்னால் இருக்கும் கார்ப்பரேட்-இந்துத்துவச் சூழ்ச்சிகளைத் தோலுரிக்கிறது பேராசிரியர் அ. மார்க்ஸ் எழுதிய ‘பொதுச் சிவில் சட்டம் - பாஜக அரசின் இன்னொரு தாக்குதல்’ என்னும் நூல். இந்தியா என்பது கோடானு கோடி மக்களின் வெவ்வேறு நம்பிக்கைகளையும் பன்முகத்தன்மை கொண்ட வாழ்வியல் நெறிகளையும் உள்ளடக்கிய ஒரு பெரும் துணைக்கண்டமாகும். இங்கு எல்லோருக்குமான கிரிமினல் சட்டங்களும், தனிநபர் சட்டங்கள் தவிர்த்த பிற சிவில் சட்டங்களும் ஏற்கனவே பொதுவாகவே உள்ளன. அப்படியிருக்க, பா.ஜ.க முன்வைக்கும் பொதுச் சிவில் சட்டம் என்பது முழுக்க முழுக்க இஸ்லாமியர்களை இலக்காகக் கொண்டதும், மக்களை மதரீதியாகப் பிளவுபடுத் தும் வஞ்சகத் தந்திரமுமே ஆகும். பொதுச் சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று நீதிமன்றங்க ள் அரசுக்கு உத்தரவிட முடியாது எனப் பல தீர்ப்புகள் சுட்டிக்காட்டி யுள்ளதை நூல் ஆதாரங்களுடன் விளக்குகிறது. மேலும், பா.ஜ.க-வினர் அம்பேத்கரை முன்னிறுத்தித் தங்களின் சதியை மறைக்க முயல்வதையும், அன்று அம்பேத்கர் இந்து திருமணச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது அதனைத் தீவிரமாக எதிர்த்து அவரைப் பதவி விலக வைத்ததே இந்த இந்து மகாசபையினர்தான் என்ற வரலாற்று உண்மையையும் ஆசிரியர் நினைவூட்டுகிறார். இரண்டாம் திருமணம் செய்வதற்காக முஸ்லிமாக மாறுகிறார்கள் என்ற பொய்ப் பிரச்சாரங்களை உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் இந்நூல் உடைத்தெறிகிறது. அனைத்து குடிமக்களும் ஒரே கருத்தியலைக் கொண்டிருந்தால்தான் தேசிய ஒருமைப்பாடு சாத்தியம் என்ற பாசிசக் கோட்பாடு முற்றிலும் ஜனநாயக விரோதமானது. நூறு பூக்கள் பூத்துக் குலுங்கும் இந்திய நந்தவனத்தில் ஒரேயொரு பூவைத் திணிக்கும் இத்தாக்குதலை முறியடிக்க, எளிய மொழியில் எழுதப்பட்டுள்ள இந்நூல் ஒரு காத்திரமான தத்துவாயுதமாகும். பொதுச் சிவில் சட்டம் - பாஜக அரசின் இன்னொரு தாக்குதல் ஆசிரியர்: அ. மார்க்ஸ் வெளியீடு: பாரதி புத்தகாலயம் பக்கங்கள்: 86 | விலை: ₹85 தொடர்புக்கு: 9444960935

பாசிசக் கோட்பாடுகளை வீழ்த்தும் 100 கேள்வி-பதில்கள்

சமூகத்தில் பேராபத்தாக உருவெடுத்துள்ள ஒரு கருத்தியலை ஆழமாக எதிர்கொள்ள, அதன் தத்துவப் பின்னணியை முதலில் துல்லிய மாகப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில், மதங்களின் தோற்றுவாய் எது என்ற கேள்வியில் தொடங்கி, வகுப்புவாதத்தை முறி யடிப்பது எப்படி என்பது வரை 100 சுருக்கமான வினா-விடைகள் மூலம் ஆர்.எஸ்.எஸ்-இன் சதித்திட்டங்களை அம்பலப்படுத்துகிறது மார்க்சிய ஆய்வாளர் இரா. சிசுபாலன் எழுதிய ‘இந்துத்துவா என்றால் என்ன?’ என்னும் நூல். தொன்மைக்காலத்தில் இயற்கைச் சக்திகளைக் கண்டு அஞ்சிய மனிதன், தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தொடங்கிய வழிபாடே பிற்காலத்தில் அமைப்பு ரீதியான மதமாக மாறியது. அப்படி உருவான மதத்தைத் தங்களின் அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தும் அமைப்பே ஆர்.எஸ்.எஸ் ஆகும். இந்துத்துவா என்பது ஒரு மதமல்ல, அதுவொரு பாசிச அரசியல் திட்டம் என்பதை ‘ஜென்டி ல்மேன்’ வாஜ்பா ய் துவங்கி ‘விஸ்வ குரு’ மோடி வரையி லான அவர்க ளின் பல்லா யிர முக மூடி களைத் தோலு ரித்துக் காட்டு வதன் மூலம் நூல் விளக்குகிறது. பாசிசத்திற்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் உள்ள பொதுத்தன்மைகள், இருதேசக் கோட்பாட்டின் உண்மை வரலாறு, மனுவாதம், வேத கால நாகரிகமும் ஹரப்பா நாகரிகமும் ஒன்றா போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்கு இந்நூலில் அழுத்தமான பதில்கள் உள்ளன. ஆர்.எஸ்.எஸ்-இன் சித்பவன் பார்ப்பனத் தலைமை, சர்சங்கசாலக் கட்டமைப்பு மற்றும் அதன் வஞ்சகமான பொய்ப் பிரச்சாரங்களை நூல் ஆதாரங்களுடன் முறியடிக்கிறது. “பாசிசம் என்பது நிதி மூல தனத்தின் படு பிற்போக்கான, இனவெறி கொண்ட ஏகாதி பத்தியவாதிகளின் பயங்கரவாதச் சர்வாதிகாரம்” என்ற ஜார்ஜ் டிமிட்ரோவின் புகழ்பெற்ற வரையறைப்படி, அன்றைய நாஜி ஜெர்மனிக்கும் இன்றைய இந்தியாவுக்கும் உள்ள ஒற்றுமை-வேற்றுமைகளை விவாதிக்கும் இப்புத்தகம், இதனை முறியடிப்பதற்கான மாற்று வழிகளையும் முன்வைக்கிறது. ஒரு மணி நேரத்தில் வாசித்து முடிக்கக்கூடிய 32 பக்கங்கள் கொண்ட இந்நூல், இந்துத்துவா பாசிசத்திற்கு எதிராகக் களம் காண்பவர்கள் கையில் ஏந்த வேண்டிய கூர்மையான தத்துவ ஆயுதமாகும். இந்துத்துவா என்றால் என்ன? ஆசிரியர்: இரா. சிசுபாலன் வெளியீடு: பாரதி புத்தகாலயம் பக்கங்கள்: 32 | விலை: ₹30 தொடர்புக்கு: 9444960935

மறைக்கப்பட்ட வரலாற்றின் மகத்தான பதிவு!

1948-ல் சேலம் மண்ணில் நடந்த வீரம் செறிந்த நிலமீட்புப் போராட்டத்தையும், அதில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த தியாகி சோரகை பெருமாளின் வாழ்வையும் மீட்டெடுக்கும் ஒரு முக்கிய வரலாற்று ஆவணமாக வெளிவந்துள்ளது ஜி.சம்சுதீன் (எ) சுல்தான் எழுதிய ‘சேலம் நிலமீட்பு போராட்ட தியாகி சோரகை பெருமாள்’ என்னும் நூல். இங்கு நாம் இன்று அனுபவிக்கும் பல உரிமைகளுக்குப் பின்னால் எத்தனையோ ரத்த சாட்சியங்கள் உள்ளன. அப்படியிருக்க, பா.ஜ.க அரசு தன் கார்ப்பரேட்-இந்துத்துவச் சூழ்ச்சிகள் மூலம் உழைக்கும் மக்களின் நில உரிமைகளைப் பறித்து வரும் வேளையில், மண்ணுரிமைக்கான போராட்டத்தின் அவசியத்தை இந்நூல் உணர்த்துகிறது. 1948 ஜூலை 16 அன்று சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள சோரகை கிராமத்தில், கொடூரமான ஜமீன்தாரி முறைக்கு எதிராகவும், உழுபவருக்கே நிலம் என்ற உரிமைக்காகவும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் நடைபெற்றது. இதில் நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக நின்ற காவல்துறை நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டில், தோழர் சோரகை பெருமாள் நெஞ்சில் குண்டு பாய்ந்து களப்பலியானார். சுதந்திர இந்தியாவில் நில உரிமைப் போராட்டத்திற்காக உயிர்த்தியாகம் செய்த முதல் தியாகி இவர்தான் என்ற வரலாற்று உண்மையை இந்நூல் ஆதாரங்களுடன் விளக்குகிறது. வெறும் தரவுகளாக மட்டுமில்லாமல், சோரகை பெருமாளுடன் இணைந்து உழைத்த மாபெரும் ஆளுமைகளான தோழர் பி. சீனிவாச ராவ், தியாகி கே. செல்வராஜ், தோழர் பி. அர்த்தனாரி வாத்தியார் போன்றோரின் போராட்டப் பங்களிப்பையும், அக்காலப் பத்திரிகைச் செய்திகளையும் கொண்டு இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. உழைக்கும் மக்களின் வரலாற்றை எளிய மொழியில் கொண்டு சேர்க்கும் இப்புத்தகம், இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு காத்திரமான தத்துவாயுதமாகும். சேலம் நிலமீட்பு போராட்ட தியாகி சோரகை பெருமாள் ஆசிரியர்: தமிழறிஞர் தோழர் ஜி.சம்சுதீன் (எ) சுல்தான் வெளியீடு: ஜீ.சுரையாபேகம் பதிப்பகம், சேலம் / பக்கங்கள்: 150 விலை:₹75/- தொடர்புக்கு: 94439 12804

கட்டை விரலின் கதை: ஏகலைவன் காலத்து நீதிக்கான குரல்

கவிஞர் மு. முருகேஷ் எழுதிய ‘கட்டை விரலின் கதை’ என்ற நூல், வாசிக்கும் ஒவ்வொருவரையும் தங்களின் கட்டை விரலைத் தொட்டுப் பார்க்க வைக்கும் அளவிற்குச் சமூகக் கட்டமைப்பின் கொடூரத்தை உறைக்கச் சொல்கிறது. மகாபாரதக் காலத்தில் ஏகலைவனின் கட்டை விரல் தட்சணையாகக் கேட்கப்பட்டு வெட்டப்பட்ட போதே, யாராவது ஒருவராவது அதற்கு எதிராகக் குரல் எழுப்பியிருந்தால் அன்றே இந்தச் சமூகத்தில் ஒரு மாபெரும் மாற்றம் விளைந்திருக்கும். ஆனால், அன்று மறுக்கப்பட்ட நீதியைச் சமகாலச் சூழலோடு பொருத்தி, இன்று ஒடுக்கப்பட்ட ஓர் எளியவனின் வெட்டப்பட்ட கட்டை விரலே தனக்கான நீதியைக் கேட்டு அதிகார வர்க்கத்தை நோக்கிக் குரல் எழுப்புவதாக ஆசிரியர் இக்கதையை மிகச் சிறப்பாகச் சித்தரித்துள்ளார். மனிதர்களிடையே நாம் வகுத்து வைத்துள்ள வர்க்க, சாதிய வித்தியாசங்களே இத்தகைய உழைப்புச் சுரண்டல்களுக்கும் அநீதிகளுக்கும் முதன்மைக் காரணம் என்பதைத் தோலுரித்துக் காட்டும் மிக முக்கியமான சிறார்-இளையோர் இலக்கியம் இது. கட்டை விரலின் கதை ஆசிரியர்: தோழர் மு. முருகேஷ் வெளியீடு: சீர் வாசக வட்டம் (இளையோர் நூலக வரிசை) பக்கம் -16, விலை ரூ.1

அணில் குஞ்சு: வன்மத்தை உடைக்கும் மனிதநேயப் பாடம்

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் ‘அணில் குஞ்சு’ என்ற நூல், வாசிப்பவர் மனதில் ஒருவித பதற்றத்தையும் ஆழமான சிந்தனையையும் விதைக்கிறது. உலகப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் கெவின் கார்ட்டர், சூடான் நாட்டுப் பஞ்சத்தில் சாகக் கிடந்த குழந்தையைப் படம் பிடித்து ‘புலிட்சர்’ விருது பெற்றாலும், அக்குழந்தை யைக் காப்பாற்ற வில்லையே என்ற குற்றவுண ர்வால்தான் தற்கொலை செய்துகொண்டார். அந்த மனிதநேயச் சரிவை இந்நூலை வாசிக்கும்போது நினைவுகூர வேண்டியுள்ளது. “நீ பிறக்கும் முன்பே நான் உன் விரோதி” என்ற ரப்பர் பந்து பட வசனத்தைப் போல, இன்றைய சமூகம் சிறுவர்களுக்கு மனிதநேயத்திற்கு மாறான வன்மத்தையே கற்றுத் தருகிறது. இக்கதையில் வரும் அணில் குஞ்சு என்பது நிஜத்தில் எளிய மனிதர்களின் குறியீடாகும். கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தத்துவத்தின்படி, இன-மதச் சண்டைகள் இல்லாமல் அன்போடு வாழ்ந்தால் வன்மங்கள் மண்ணோடு மண்ணாகும் என்பதை உணர்த்தும் உன்னதப் படைப்பு இது. அணில் குஞ்சு ஆசிரியர்: கலைஞர் மு. கருணாநிதி வெளியீடு: நன்செய் பதிப்பகம், திருத்துறைப்பூண்டி, பக்கம் -16, விலை - ரூ.1 தொடர்புக்கு : 9566331195

சாந்தி சரவணன் கயிறு: பன்முகத் தன்மையை இணைக்கும் பாசம்

எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய ‘கயிறு’ என்னும் நூல் மனித உறவுகளின் பிணைப்பைப் பேசும் உன்னதப் படைப்பாகும். கயிறு என்பது பொதுவாகப் பொருட்களை ஒன்றாக இணைப்பதற்கும் பிணைப்பதற்கும் உரியது; ஆனால், மனிதன் மட்டுமே அதைப் பிரிப்பதற்கும் பயன்படுத்துகிறான் என்ற எதார்த்தத்தை நூல் விவாதிக்கிறது. இக்கதையில் தந்தை தன் மக னுக்கு நேரடியாக எந்தவொரு அறிவு ரையையோ அதன் விளைவுகளையோ போதிக்காமல், மக னையே சுய சிந்த னை மூலம் அதை உணர்ந்து கொள்ளச் செய்யும் விதம் மிக அற்புதம். மீனைப் பிடித்துக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுக்கும் உத்தியை ஆசிரியர் கையாண்டுள் ளார். மனிதர்களுக்குள் பசி, தாகம், அன்பு, கோபம் போன்ற உணர்வுகளும் பிறப்பு, இறப்பும் பொதுவானதே. இருக்கும் குறுகிய வாழ்க்கையை ‘அன்பு’ என்ற கயிற்றால் பிணைத்து, ஒற்றை மரமாக அல்லாமல் இனத்தோடு இன்பமாக வாழ வேண்டும் என்ற உன்னதச் செய்தியை இக்கதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. கயிறு ஆசிரியர்: தோழர் விஷ்ணுபுரம் சரவணன் வெளியீடு: சீர் வாசக வட்டம், தஞ்சாவூர் பக்கம் -16, விலை - ரூ.6 தொடர்புக்கு :9566331194