தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நூலாற்றுப் படை

11 Oct 2026, 9:59 pm
நூலாற்றுப்  படை

நூலாற்றுப் படை

சுதந்திரப் போரில் கம்யூனிஸ்டுகளின் தியாகம் : வரலாற்றின் பொன்னெழுத்துகள்! - எஸ்.பாலா

நாட்டின் விடுதலைக் காகத் தங்களின் சுக போக வாழ்க்கையையும் வசதி யான குடும்பப் பின்னணியை யும் துறந்து, தியாக வாழ்வை மேற்கொண்ட தோழர்களின் வரலாற்றுப் பதிவாக வெளிவந்துள் ளது ‘விடுதலைப் போராட்டம்: 25 கம்யூனிஸ்டுகளின் நினைவுகள்’ என்னும் நூல். மறைந்த மகத் தான தலைவர், மார்க்சிய அறிஞர் சீத்தாராம் யெச்சூரி எழுதிய இந்நூலைப் பேராசிரியர் ஹேமா மிகச் சிறப்பாகத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். ஏ.கே. கோபாலன் தொடங்கி சமர் முகர்ஜிவரை, விடுதலைச் சுடரை ஏந்திய25 மகத்தான போராளிகளின் நினைவுகளை பாரதி புத்தகாலயம் வாயிலாக இந்நூல் வரலாற்றுஆவணமாக நமக்குவழங்குகிறது.பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் போராடியபோது, போராட்டத் தீவிரத்தைக் கண்டு அஞ்சிய வெள்ளையர் அரசு பெசாவர், கான்பூர், மீரட் சதி வழக்குகளைப் புனைந்தது. 1921 அகமதாபாத் காங்கிரஸ் மாநாட்டிலேயே ‘பூரணசுதந்திரம்’ என்ற கோரிக்கையைமௌலானா ஹஸ்ரத் மொஹானிசுவாமி குமாரானந்தா ஆகிய இரு கம்யூனிஸ்டுகளே முதலில் முன்வைத்தனர். பகத்சிங்கின் தோழர்களான பண்டிட் கிசோரிலால், சிவ வர்மா மற்றும் நேதாஜியின் படைத்தளபதியாக இருந்த கேப்டன் லட்சுமி ஆகியோர் இறுதிவரை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வழியிலேயே மக்கள் பணியாற்றினர்.

பெசாவர், கான்பூர், மீரட் சதி வழக்குகளைச் சந்தித்த முசாபர் அகமது, சைமன் கமிஷனுக்கு எதிராகப் படகுகளில் போராட்டம் நடத்திய பி. ராமமூர்த்தி, ‘நாடு என்னை அழைத்தது’ என்று களம் கண்ட மேஜர் ஜெயபால் சிங், வெள்ளையரை எதிர்த்து முழங்கிய கே.பி. ஜானகி அம்மாள், அடக்குமுறைகளைச் சந்தித்த பி. கிருஷ்ணபிள்ளை, பழங்குடி மக்களின் உரிமைக்காக வாழ்வை அர்ப்பணித்த ஷாம்ராவ் - கோதாவரி பருலேகர் தம்பதி என ஒவ்வொரு வரின் தியாக வாழ்வும்இதில் நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்டக் களத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் சிந்திய ரத்தத்தையும் புரிந்த தியாகங்களையும் பொன்னெழுத்துகளால் பதிவு செய்யும் இந்நூல், இன்றைய தலைமுறையும் கம்யூனிஸ்ட் தோழர்களும் தவறாமல் வாசிக்க வேண்டிய வரலாற்றுப் பெட்டகமாகும்.

விடுதலைப் போராட்டம்: 25 கம்யூனிஸ்டுகளின் நினைவுகள்ஆசிரியர்: சீத்தாராம் யெச்சூரிதமிழில்: பேரா. ஹேமாவெளியீடு: பாரதி புத்தகாலயம்பக்கங்கள்: 224 | விலை: ₹140தொடர்புக்கு: 9444960935

விமர்சனங்களை எதிர்கொள்ளும் துணிச்சல்! - எம்.ஜே.பிரபாகர்

மகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி வரிகளில் ஒன்றான “ஐம்பொறி ஆட்சிகொள்” என்பதைத் தலைப்பாகக் கொண்டு முனைவர் என். மாதவன் எழுதியுள்ள இந்நூல், இன்றைய இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டக் கூடிய ஒரு மிகச்சிறந்த சுயமுன்னேற்ற மற்றும் வாழ்க்கை நெறிமுறை நூலாகும். நவீன டிஜிட்டல் யுகத்தில்

சமூக வலைதளங்களாலும் துரித ஆசைகளாலும் எளிதில் திசைதிருப்பப்படும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் உணர்ச்சிப் பரிமாணங்களைஇந்நூல் ஆழமாக ஆராய்கிறது.

கேட்டதெல்லாம் கிடைக்கும் சூழலில் வளரும் இன்றைய தலைமுறையினர் சிறிய பின்னடைவைக் கூடத் தாங்க முடியாத மனநிலையில் உள்ளனர். அவர்களுக்குத் தோல்வியைக் கண்டு அஞ்சாத மனப்பக்குவம், விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, விமர்சனங்களை எதிர்கொள்ளும் துணிச்சல், பகுத்தறியும் திறன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகிய நற்பண்புகளை வளர்த்தெடுக்க இந்நூல் பெரிதும் துணைநிற்கிறது. குறிப்பாக, உலகளவில் தடம் பதித்த மகாத்மா காந்தி, தந்தை பெரியார், காமராஜர், வ.உ.சி., ஜீவானந்தம், புத்தர், காரல் மார்க்ஸ், லெனின், சர் சி.வி. ராமன், மேரி கியூரி, ஐன்ஸ்டீன், ஹெலன் கெல்லர், அன்னை தெரசா உள்ளிட்ட 28 மாபெரும் ஆளுமைகளின் வாழ்க்கைச் சவால்களையும் அவர்கள் பெற்ற வெற்றிகளையும் இளையோரின் மொழிக்கேற்ப அருமையான வடிவில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

ஐம்பொறிகளும் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே மனிதனின் உண்மையான ஆளுமை மலர்ச்சி சாத்தியமாகும் என்பதை நடைமுறை உதாரணங்களுடன் இந்நூல் கற்றுத் தருகிறது. போட்டி நிறைந்த உலகில் தோல்விகளைச் சந்திக்கும் இளைஞர்களுக்கு மன உறுதியை மீட்டுக்கொடுக்கும் இந்நூல், ஒவ்வொரு இளைஞரும் தங்களது வாழ்வின் திசையைச் சரியான பாதையில் அமைத்துகொள்ள உதவும் தவிர்க்க முடியாத பொக்கிஷமாகும்.

ஐம்பொறி ஆட்சிகொள் (இளையோருக்கான சிறந்த வாழ்க்கைப் பாடம்)ஆசிரியர்:முனைவர் என். மாதவன்வெளியீடு: இந்து தமிழ் திசை, சென்னை-600002/ விலை: ₹120 . தொடர்புக்கு: 7401296562

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.