நூலாற்றுப் படை
27 Sept 2026, 9:34 pm

நூலாற்றுப் படை

போராட்ட வரலாற்றையே இலக்கியமாகக் கொண்ட அரிய பதிவுகள்! - ச. லெனின்

சிகரம் ச. செந்தில் நாதன் எழுதி வெளி வந்துள்ள ‘இலக்கியப் போராட்டங் கள்’ என்னும் நூல், தமிழ் நாட்டின் முற்போக்கு இலக்கிய மற்றும் அரசியல் இயக்கங்களின் வரலாற்றுப் போராட்டங்களை மிக நேர்த்தியாகப் பதிவுசெய்துள்ள ஒரு தத்துவார்த்த ஆவணமாகும். சந்தியா பதிப்பக வெளியீடாக வந்துள்ள இந்நூல், நூலாசிரியரின் 84-வது வயதில் வெளிவந்துள்ள 28-வது படைப்பாகும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் (தமுஎகச) தனக்கிருந்த செறிவான அனுபவங்களை மையமாகக் கொண்டு, இயக்கத்தின் மீதான ஆழமான பொறுப்புணர்வோடு இந்நூலை அவர் படைத்துள்ளார்.

இயக்கம் மற்றும் விமர்சன அணுகுமுறை

இயக்கத்தில் நிலவ வேண்டிய விமர்சனங்கள் பற்றிப் பேசுகையில், “விமர்சனங்கள் பூனை தன் குட்டியைப் பற்களால் கவ்வுவதுபோல் இருக்க வேண்டுமே தவிர, புலி தான் வேட்டையாடும் இரையைக் கவ்வுவதுபோல் இருக்கக்கூடாது” என்ற ஆக்கப்பூர்வமான கருத்தை ஆசிரியர் முன்வைக்கிறார். ஆக்கப்பூர்வமான கருத்து மாறுபாடுகளே அமைப்பை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்கும் என்ற தத்துவத்தை இந்நூல் நெடுகிலும் வலியுறுத்துகிறார். அதேநேரத்தில், கொள்கை ரீதியான எதிரிகளைத் தனது கூர்மையான வார்த்தைகளாலும் தர்க்கரீதியான சான்றுகளாலும் நெரித்துத் தள்ளுகிறார். இயக்கம் என்பது தனிமனிதச் சிந்தனை அல்ல; அது பல்வேறு ஆளுமைகளின் கருத்து மோதல்களாலும் கூட்டுச் செயல்பாடுகளாலும் நிமிர்ந்து நிற்கும் மாபெரும் ஆலமரம் என்பதைத் தனது நேர்மையான குறுக்கு விசாரணைகள் மூலமாக உணர்த்துகிறார்.

முகத்திரையைக் கிழிக்கும் ஆவணங்கள்

தமிழ்நாட்டின் பல அரசியல் மற்றும் இலக்கிய ஆளுமைகளின் முகத்திரைகளை இந்நூல் எவ்விதத் தயக்கமுமின்றிப் போட்டுடைக்கிறது. அதேசமயம் எழுத்திலும் வாழ்விலும் கொள்கை மாறாது வாழ்ந்த விந்தன், வ.ரா, வல்லிக்கண்ணன் போன்ற முற்போக்கு ஆளுமைகளின் உறுதியான வாழ்வியலை மெய்சிலிர்க்கப் பதிவுசெய்துள்ளார்.

குறிப்பாக, 1997-இல் திமுக ஆட்சிக் காலத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாயப் பாடமாக்கக் கோரி முற்போக்கு அமைப்புகள் வலியுறுத்திய நிகழ்வை ஆவணப்படுத்துகிறார். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராகத் தமிழ்க்குடிமகன் இருந்தபோதும், “தமிழை கட்டாயமாக்க நிதியில்லை; வேற்று மொழிக்காரர்கள் எதற்குத் தமிழ் படிக்க வேண்டும்? என் பேரன்கூட ஆங்கிலத்தில்தான் படிக்கிறான்” என்று அப்போதைய மூத்த அமைச்சர் அன்பழகன் அளித்த பதிலையும், அதற்கு ‘நக்கீரன்’ இதழ் தந்த எதிர்வினையையும் பத்திரிகைச் செய்தி ஆதாரத்தோடு வெளிப்படுத்துகிறார்.

கொள்கை உறுதியும் வரலாற்றுப் பதிவுகளும்

அதேபோல், வறுமை வாட்டிய சூழலிலும் நலிந்த எழுத்தாளருக்கான அரசு நிதியைப் பெற தன் சுயமரியாதையை இழக்க மறுத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் தீரத்தையும் இந்நூல் பேசுகிறது. ஆண்டுதோறும் வட்டாட்சியர் முன் நேரில் நின்று உயிரோடு இருப்பதை நிரூபித்து நிதி பெறும் முறையை இழுக்காகக் கருதி மறுத்த வல்லிக்கண்ணனுக்கு, தமுஎகச சார்பில் நிதி திரட்டி வழங்கப்பட்டது. “பணம் என்னை ஒருபோதும் பணிய வைக்க முடியாது; இயலாமல் போகும் இறுதி நிலையில் பொதிகை மலைக்குப் போய் மறைவேனே தவிர எழுத்தில் சமரசம் செய்ய மாட்டேன்” என்று வல்லிக்கண்ணன் முழங்கியதை 1991 ‘தீக்கதிர்’ செய்தி ஆதாரத்துடன் பதிவுசெய்துள்ளார்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அரசைக் கண்டிக்கும் திரைப்படங்களைத் தடை செய்யக் கொண்டுவரப்பட்ட எதேச்சதிகாரச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற ‘திரைப்பட கலை பாதுகாப்பு மாநாட்டை’யும், அதில் “ஆடி மாதக் காற்றில் கோபுரத்தில் ஒட்டிக்கொண்ட எச்சில் இலைகள் இவர்கள்” என நா. பார்த்தசாரதி முழங்கியதையும் விவரிக்கிறார். மேலும் கண்ணகி சிலை அகற்றம், பாரதி, பாரதிதாசன், தமிழ்ஒளி, பட்டுக்கோட்டை ஆகியோரின் கருத்தியல் பங்களிப்புகள், மதவெறி தாக்குதல்களுக்கு எதிரான எதிர்வினைகள் எனப் பல வரலாற்றுச் சம்பவங்களை இளம்தலைமுறைக்கு வழிகாட்டும் வகையில் ஆவணப்படுத்தியுள்ளார்.

காலத்தின் அத்தியாவசியத் தேவைநூலின் தொடக்க த்திலேயே “நான் கிழவனாகிவிட்டேன்” என்று செந்தில் நாதன் குறிப்பிட்டி ருந்தாலும், அவரது கூர்மையானபேனா முனைக்கும் தளராத போராட்டக் குணத்தி ற்கும் இன்னும் வயதாக வில்லை என்பதையே ஒவ்வொரு பக்கமும் பறைசாற்றுகிறது. உடல் தளர்ந்த நிலை யிலும் வர லாற்று உண்மை களை உரக்கப் பேசும் துணிச்சல் இவரிடம் குறையவில்லை. தமிழ் இலக்கிய மற்றும்அரசியல் வரலாற்றின் எதார்த்தப் பக்கங்களையும், அதிகார வர்க்கத்தின் முகமூடிகளையும், இயக்கங்களின் தியாகவரலாற்றையும் தெரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொரு முற்போக்கு வாசகரும் தவறாமல் வாசித்து விவாதிக்க வேண்டியவரலாற்றுப் பொக்கிஷம் இதுவாகும்.இலக்கியப் போராட்டங்கள்சிகரம் ச. செந்தில்நாதன்சந்தியா பதிப்பகம்பக்கங்கள்: 166 | விலை: ₹220/-

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான தத்துவக் கையேடு! - எஸ்.பாலா

மனித வரலாற்றில் நிகழ்த்த ப்பட்ட மிக மோசமான பெரிய குற்றம் என்று ஒன்றைச் சொல்ல வேண்டுமெனில், “அது

கறுப்பர்களைக் கடத்தி வந்து வெள்ளையர்கள் செய்த வியாபாரமாகத்தான் இருக்க முடியும்” என்கிறார் மால்கம் எக்ஸ். கறுப்பின மக்களின் விடுதலை க்கான குரலில் மால்கம் எக்சின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவர் கற்பித்தபேச்சாற்றல் மற்றும்விவாதக் கலை நுட்பங்களை மைய மாகக் கொண்டு வெளிவந்துள்ள அருமையான நூல் “நேர்படப் பேசு”.கறுப்பின மக்களின் வாழ்வியல் வலிகளையும் வேதனைகளையும் பேசும் பல நூல்கள் தற்காப்பு நிலையையே வலியுறுத்தி வந்த சூழலில்,மால்கம் எக்ஸ் ஒடுக்கப்பட்ட மக்களைத் தாக்குதல் நிலைக்கு உயர்த்த வேண்டும் என்று முழங்கினார். இதனால் அவரது சிந்தனைகள் மக்கள்மத்தியில் நெருப்பாகப் பரவின. சிறைக்கூடத்தில் தன் வாழ்வின் இலக்கை நிர்ணயித்த மால்கம் எக்ஸ், விவாதக்கலையில் 8 முக்கிய நுட்பங்களைக் கையாண்டு எதிராளிகளை முறியடித்தார்.

வாதத் தயாரிப்பு, இரு பக்கவாதங்களை ஆராய்தல், எதிராளியாக மாறப் பழகுதல், சோர்விலா ஒத்திகை, வாதத்தைத் திருப்புதல், அபத்தத்தை நிரூபித்தல், தர்க்க ஒப்புமைகள் மற்றும் விவாதத்தின் மைய நோக்கத்தைக் கட்டுப்படுத்துதல்என அவர் கையாண்ட வழிகள் அசாதாரணமானவை. அடித்தட்டு மக்களின் மொழியில் அதிகாரத்தின் மீது உளவியல்தாக்குதல் நடத்திய அவரது பேச்சாற்றல், ஜாஸ் இசைக்கலைஞர்களின் சாக்ஸ்ஃபோன் இசையைப் போலக் கொண்டாடப்பட்டது.கறுப்பின மக்களின் அடிமைப்போக்கை விடுவிக்க அவர் மேற்கொண்ட நுட்பமான வழிகாட்டுதல் களைப் பேசும் இந்நூல், விடுதலையை நேசிக்கும் அனைவரும் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான நுட்பக் கையேடாகும்.

நேர்படப் பேசு (மால்கம் எக்ஸ் கற்பித்த பேச்சாற்றல் மற்றும் விவாதக் கலை ஒரு நுட்பக் கையேடு)ஆசிரியர்: மால்கம்வெளியீடு: எதிர் வெளியீடுபக்கங்கள்: 158 | விலை: ₹220/-தொடர்புக்கு: 9942511202

கரிசல் பூமியின் கிராமிய வாழ்க்கையைத் துல்லியமாகப் பதிவுசெய்த நாவல்! - எம்.ஜே.பிரபாகர்

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் எழுத்தாளருமான சி. முருகன் அவர்களின் மிக முக்கியமான படைப்பாக வெளிவந்துள்ள ‘தே’ நாவல், தமிழ் நவீன இலக்கியப் பரப்பில்பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் தனது வேர்களைத் தேடிச் சென்று எழுதியுள்ள இப்புதினம், கரிசல்மண்ணின் அச்சு அசலான பண்பாட்டு ஆவணமாகத் திகழ்கிறது.

மழையை மட்டுமே நம்பி வாழும் வெக்கரித்த கந்தக பூமியான கரிசல் பிரதேச மக்களின் வாழ்வியலை இந்நாவல் மிகத் துல்லியமாகக் கண்முன்னே நிறுத்துகிறது. கிராமங்களின் தனித்துவமான அடையாளங்கள், உடைகள்,உணவுகள், பண்டிகைகள் மற்றும் பேச்சுவழக்குகள் உயிர்ப்போடு பதிவு செய்யப்பட்டுள்ளன. சாதிய ஏற்றத்தாழ்வு கள், சிறுதெய்வ வழிபாடு, விவசாயச் சிக்கல்கள் மற்றும் மீன்பிடி முறைகள்என கரிசல் மக்களின் வாழ்வியல் இன்னல்களையும் அழகியலையும் சமூகப் பார்வையோடு இந்நாவல் பேசுகிறது.உயர் பதவியில் இருந்தாலும், தான் சார்ந்த மண்ணின் பற்றால் ஒரு எளிய கிராமத்து மனிதனாகக் களமிறங்கிஇந்நாவலைப் படைத்துள்ளார் நூலாசிரியர். இது குறித்து சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன், “தான் ஒரு பொறுப்புமிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதை வெளிக்காட்டாமல் தலைப்பா, தார்ப்பாச்சல்,மண்வெட்டி கூடையுடன் நாவல் முழுவதும் நம்முடன் நிற்கிறார்” எனப் பாராட்டியுள்ளார்.கரிசல் வட்டார வழக்கின் செழுமையும், ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாடு மற்றும் கூட்டுவலியைப் பிரதிபலிக்கும்கதாபாத்திரமைப்பும் இந்நாவலின் பெரும் பலமாகும். எளிய மக்களுக்கும் அதிகார மையங்களுக்கும்இடையிலான முரண்பாடுகளை வெளிச்சமிட்டுக் காட்டும் ‘தே’ நாவல், கரிசல் இலக்கியத்தில் அனைவரும் தவறாமல் வாசிக்க வேண்டிய வீரியமிக்க படைப்பாகும்.தேஆசிரியர்: சி. முருகன் (IAS)வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-600078விலை: ₹490/-தொடர்புக்கு: 9940446650

54 ஆண்டுகால தியாகமிக்க அரசியல் பயணத்தின் வரலாற்று ஆவணம்! - இரா. விஜயராஜன்

கன்னியாகுமரி மாவட்ட த்தைச் சேர்ந்த மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவரும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான எஸ். நூர்முகமதுவின் 54 ஆண்டுகால அரசியல் மற்றும் பொதுவாழ்க்கை அனுபவங்களைப் பதிவு செய்யும் தன் வரலாற்று ஆவணமாக வெளிவந்துள்ள நூல்

‘திரும்பிப் பார்க்கிறேன்’. பாரதி புத்தகாலய வெளியீடாக வந்துள்ள இந்நூல், 15 பாகங்களில் 290 பக்கங்களில் அனுபவச் செறிவுடன் தொகுக்கப்பட்டுள்ளது.

தன் 18 வயது மாணவர் பருவத்தில் தொடங்கி 72 வயது வரையிலான நீண்ட நெடிய அரசியல் பயணத்தை நூலாசிரியர் இதில் நேர்மையுடன் பதிவு செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட த்தின் அரசியல் வரலாற்றை ஆண்டுகளின் வரிசையில் தொகுத்துவழங்கியிருப்பதோடு, எம்.எம். அலி, கே. சந்திரன், டி.மணி உள்ளிட்ட நூற்றுக்கணக் கான கட்சித் தோழர்களின் தியாகப்பூர்வமான பணிகளையும்நினைவுகூர்ந்துள்ளார்.

மாணவர் இயக்கம், தாலுகா குழு, மாவட்டச் செயலாளர், மாநிலச் செயற்குழு உறுப்பினர், நகராட்சித் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவங்கள் இதில்விவரிக்கப்பட்டுள்ளன. பத்மநாபபுரம் தொகுதி மக்களின் குடிநீர்ப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டது மற்றும்சட்டமன்றத்தில் மக்களின் குரலாக ஒலித்த பணிகளும் நூலில் இடம் பெற்றுள்ளன.அவசரநிலைக் காலத்தில் 24 வயதில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நினைவு கள், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாசிசப் போக்குகளுக்கு எதிராக நடத்திய வீரியமிக்க போராட்டங்கள் என ஒரு தனிநபரின் வாழ்வியலைத்தாண்டி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றுப் பதிவாக இந்நூல் மிளிர்கிறது.திரும்பிப் பார்க்கிறேன்ஆசிரியர்: எஸ். நூர்முகமதுவெளியீடு: பாரதி புத்தகாலயம்பக்கங்கள்: 290 | விலை: ₹310/-