தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நூலாற்றுப் படை

19 Jul 2026, 9:53 pm
நூலாற்றுப்  படை

நூலாற்றுப் படை

நுட்பமான சொற்களால் செதுக்கப்பட்ட மனித உணர்வுகளின் சிறுகதை அருங்காட்சியகம்! - கஸ்தூரி கண்ணன்

ஒரு சிறந்த எழுத்துப் பொறி யாளர் தன் சொற்களை மிக நுட்பமாகத் தேர்ந்தெடுத்துக் கட்ட மைத்த கதைகளின் அருங்காட்சி யகத்தை வாசித்த உன்னத உணர்வைத் தருகிறது எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா எழுதிய ‘கட்டங்காப்பி’ என்னும் சிறுகதைத் தொகுப்பு. இந்நூ லில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு உவமைகளும் தனித்ததொரு கவி தைத் தொகுப்பாக வெளிவரத் தகுதி யானவை. குடும்பக் கட்டமைப்புக்குள் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் வன்முறைகளையும், சமூகத்தில் மதமும் சாதியும் மனிதர்களை எவ்வாறு எதிரிகளாக மாற்றுகின்றன என்பதையும் மிக எதார்த்தமாகப் பேசுகின்றன இத்தொகுப்பின் கதைகள். “வேந்தரைத் தேடி” கதை வாசக ருக்குள் ஒரு புதிய பயணத்தை உரு வாக்குகிறது. “தடயம்” கதையோ, நேற்று வரை இணக்கமாக வாழ்ந்த மனிதர்களை ஒரே இரவில் பகைவர்களாக்கும் மதவெறியின் கொடூரத்தை நெஞ்சை உலுக்கும் வகையில் பதிவு செய்துள்ளது. “நாங்கள் இப்போது சாப்பிடுவது சாப்பாடு இல்லை; என் மகனின் மாமிசம்” என்று கபீரின் தந்தை கதறும் இடத்தில் வாசகர்கள் நிலைகுலைந்து போகிறார்கள். குடி, போதை, குடும்பச் சிதைவு ஆகியவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளின் உளவியலை “சதுரகிரி வீடு” பேச, மார்க்கத்தைத் தவ றாகப் புரிந்து கொண்டு தன் சுய லாபத்திற்காக மனைவியைச் சுரண்டும் ஆண்களை ஆக்டோப ஸோடு ஒப்பிட்டுத் தோலுரிக்கிறது “விடுவிப்பு” கதை. “கொம்பை மறந்த மாடுகள் காலமெல்லாம் பொதி சுமப்பது போலத்தான் பெண்களின் வாழ்க்கை” என்ற ஒற்றை வரியில் பெண்களின் ஒட்டுமொத்த வலியை யும் ஆசிரியர் கடத்திவிடுகிறார். இறப்பிற்குப் பிந்தைய உல கத்தைப் புனைவாக்கிய “அப்பால் ஒரு பயணம்” கதையில் வரும் புழு வடிவப் பெண் தேவதையின் சித்தரிப்பு அசாத்தியமானது. காதலின் ஊட லையும், “பாவங்களைப் போலவே புண்ணியங்களும் கழிக்கப்பட வேண் டியவை” என்ற தத்துவத்தையும் பேசும் இக்கதை, சக மனிதனைத் தோழமையோடு நடத்துவதில்தான் இறைமை இருக்கிறது என்பதை ‘அஸ்ஸலாமு அலைக்கும் தோழர்’ என்ற அசரீரியின் மூலம் நுட்பமாக உணர்த்துகிறது. மேலும், ஒரு செல்லப் பிராணியின் இழப்பை விவரிக்கும் “மோனி”, மனிதன் இயற்கையை அழிப்பதை மௌனமாகச் சாடும் “சிலிர்ப்பின் அந்திமம்”, குடும்ப அமைப்பிற்குள் ஆண்கள் எப்படி அன்னியமாகிப் போகிறார்கள் என்ப தைத் தன் தாயின் ஜாதிமல்லி கொடி யுடனான உரையாடல் வழி உணர்த்தும் “தந்தைப்பால்” என அத்தனை கதைகளும் மனித உணர்வுகளின் உச்சம். குழந்தைகளிடமும் வயதான வர்களிடமும் நாம் பேசத் தேவை யில்லை, அவர்களோடு சற்று அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டாலே நமக்கு ஒரு புதிய பொது உலகம் பிறக்கும் என்ற எளிய உண்மையை இந்நூல் நமக்குக் கற்றுத்தருகிறது. கதைகளை வரிசைப் படுத்திய விதம் முதற்கொண்டு அனைத்திலும் நேர்த்தி மிளிரும் இத்தொகுப்பு, வாழ்வின் உன்ன தங்களையும் வலிகளையும் சுவைக்க விரும்பும் ஒவ்வொரு வாசகரும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு சுவையான ‘கட்டங்காப்பி’ ஆகும். கட்டங்காப்பி (சிறுகதைத் தொகுப்பு) ஆசிரியர் : சம்சுதீன் ஹீரா வெளியீடு பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 112 விலை : ₹120/-

ஏகாதிபத்தியத்தை உலுக்கிய ஐன்ஸ்டைனின் இடதுசாரி அரசியல் பக்கம்! - எஸ்.பாலா

நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலகின் மிகச்சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, மனித குலத்தின் விடுதலைக்காகவும் சமத்துவத்திற்காகவும் களமாடிய மகத்தான இடதுசாரிச் சிந்தனை யாளர். 1933-ல் ஜெர்மனியில் நாஜி கள் ஆட்சியைக் கைப்பற்றியபோது பெர்லினில் இருந்த ஐன்ஸ்டீனின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப் பட்டன. ஹிட்லரின் அமைச்சர் கோய பல்ஸ் நடத்திய புத்தக எரிப்பு நிகழ்வில் ஐன்ஸ்டீனின் படைப்புகள் எரிக்கப்பட்ட தோடு, அவரைக் கொலை செய்ப வருக்குப் பெரும் தொகையும் வெகு மதியாக அறிவிக்கப்பட்டது. நாஜி ஜெர்மனியின் இந்தத் துரோகத்திற்கு இணையாக, அமெரிக்க ஏகாதிபத்திய உளவுத்துறையும் அவரது இடதுசாரி அரசியல் கருத்துக்களுக்காக அவரை எப்போதும் பின்தொடர்ந்து வேவு பார்த்தது. வலதுசாரி வரலாற்றாசிரியர்கள் ஐன்ஸ்டீனை ஒரு சோசலிஸ்ட்டாகக் காட்ட விரும்பாமல், வெறும் தாராள வாதியாக மட்டுமே சித்தரிக்க முயன்ற திரிக்கப்பட்ட வரலாற்றை உடைக்கிறது பாரதி புத்தகாலய வெளியீடாக வந்துள்ள ‘சோசலிசம் ஏன்?’ என்னும் நூல். உலகின் மிகச்சிறந்த மார்க்சிய இதழான ‘மன்த்லி ரெவியூ’ (Monthly Review) பத்திரிகையின் முதல் இதழில், 75 ஆண்டுகளுக்கு முன்பு ஐன்ஸ்டீன் எழுதிய புகழ்பெற்ற “சோசலிசம் ஏன்?” (Why Socialism?) என்ற கட்டுரை யையும், அதன் வரலாற்றுப் பின்னணி யையும் மையமாகக் கொண்டு இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தோழர் எஸ்.வி. ராஜதுரையின் சிறப்பான தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள இந்நூலில், ஜான் பெல்லமி ஃபோஸ்டர் எழுதிய ஆழ மான முகப்புரை மற்றும் வரலாற்று முன்னுரை, ஐன்ஸ்டீனின் மூலக் கட்டுரை, ஜான் ஜே. சைமன் எழுதிய ‘ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், புரட்சியாளர்’ என்ற கட்டுரை உள்ளிட்ட மிக முக்கிய மான ஆவணங்கள் அடங்கியுள்ளன. “புவிப்பரப்பில் தேனீக்கள் காணா மல் போனால் அடுத்த நான்கு ஆண்டு களுக்கு மேல் மனித இனம் இருக்காது” என்று சூழலியல் பேரழிவை அன்றே எச்சரித்த ஐன்ஸ்டீனின் மனிதகுலத்தின் மீதான அளப்பரிய அன்பை இந்நூல் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. முதலாளித்துவ அமைப்பில் தொழி லாளி உற்பத்தி செய்யும் பொருட்கள் எப்படி முதலாளியின் தனிச்சொத்தாக மாறுகின்றன என்பதையும், தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் ‘ஒரு சிலரின் ஆட்சி’ எங்ஙனம் உருவா கிறது என்பதையும் ஐன்ஸ்டீன் இந்நூலில் விஞ்ஞானப் பூர்வமாக விளக்கியுள்ளார். எலான் மஸ்க் போன்ற தனிநபர் கார்ப்பரேட்டுகளின் இன்றைய ஆதிக்கச் சூழலில் ஐன்ஸ்டீ னின் இந்த எச்சரிக்கை அச்சு அச லாகப் பொருந்துகிறது. மனிதகுலம் அழிவிலிருந்து தப்ப சோசலிசமே ஒரே வழி என்றும், திட்டமிட்ட பொரு ளாதாரத்தோடு கூடிய மையப் படுத்தப்பட்ட அதிகாரம் என்பது குடி மக்களின் முழுமையான கட்டுப் பாட்டிற்குள் வரும்போது மட்டுமே உண்மையான ஜனநாயகம் மலரும் என்றும் ஐன்ஸ்டீன் முழங்குகிறார். அறிவியல் மாமேதை ஐன்ஸ்டீனின் அசாத்தியமான அரசியல் சமூகக் கருத்தியல் பார்வையைத் துல்லிய மாக அறியத் தரும் இந்த நூல், சமத்துவப் பாதையில் பயணிக்கும் ஒவ்வொருவரும் கையில் ஏந்த வேண்டிய அரிய தத்துவக் கையே டாகும். சோசலிசம் ஏன்? மூலம்: ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தொகுப்பு: ஜான் பெல்லாமி ஃபோஸ்டர் தமிழில் : எஸ்.வி. ராஜதுரை வெளியீடு: பாரதி புத்தகாலயம் பக்கங்கள்: 104 விலை: ₹100 தொடர்புக்கு: 9444960935

கேட்டி வில்காக்ஸ்: மதுரை பெண் கல்வியின் விடிவெள்ளி! - எம்.ஜே.பிரபாகர்

“ஒரு அயல்நாட்டவராக இருந்தாலும், தமிழ் மண்ணோடும் இங்கிருக்கும் பெண்களின் கல்வித் தேவைகளோடும் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர் கேட்டி வில்காக்ஸ் அம்மையார்” என்ற வரலாற்றுப் பெருமிதத்தை மிக நுட்பமாக ஆவணப்படுத்துகிறது எழுத்தாளர் ‘சித்திரவீதிக்காரன்’ எழுதிய ‘கேட்டி வில்காக்ஸ் மேற்கிலிருந்து வந்த செம்பரிதி’ என்னும் நூல். அமெரிக்காவில் பிறந்து, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்று, 1915-ல் இந்தியாவிற்கு வந்த கேட்டி வில்காக்ஸ், மதுரையின் பெண் கல்வியில் நிகழ்த்திய அசாத்தியப் புரட்சியை இந்நூல் மிக எளிய தமிழில் நமக்கு அறிமுகம் செய்கிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலகட்டத்தில், பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர்கள் தயங்கிய சூழல் நிலவியது. அப்போது மதுரையின் கேப்ரன் ஹால் பெண்கள் பள்ளியில் தன் ஆசிரியர் பணியைத் தொடங்கிய வில்காக்ஸ், மாலை வேளைகளில் அருகில் உள்ள விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார். அதன் தொடர்ச்சியாக 1937-ல் நாய்ஸ் மெட்ரிக் பள்ளியையும், ஓசிபிஎம் உயர்நிலைப் பள்ளியையும் தொடங்கினார். அக்காலத்தில் சென்னை, திருச்சி, பாளையங்கோட்டை தவிர தென் தமிழகத்தின் மையமான மதுரையில் பெண்களுக்கான கல்லூரிகள் இல்லை என்பதை உணர்ந்து, அதற்காக உழைக்கத் தொடங்கினார். மதுரா கோட்ஸ் இயக்குனர் ஜேம்ஸ் டோக்கை திருமணம் செய்து கொண்ட வில்காக்ஸ், தன் கணவரின் உதவியோடும், பல்வேறு தரப்பினரின் நிதியுதவியோடும் 1948 ஆம் ஆண்டு மதுரையின் முதல் பெண்கள் கல்லூரியான புகழ்பெற்ற ‘டோக் பெருமாட்டி கல்லூரி’யைத் (Lady Doak College) தொடங்கினார். அன்று வெறும் 81 மாணவிகளுடன் தொடங்கப்பட்ட இக்கல்லூரி, இன்று 3000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் பெருவிருட்சமாக வளர்ந்து நிற்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையிலேயே தங்கி, தன் வாழ்நாளின் பெரும்பகுதியைப் பெண் கல்விக்காக அர்ப்பணித்த இந்த மேலைநாட்டுச் செம்பரிதியின் தியாக வாழ்வை, அரிய வரலாற்றுப் புகைப்படங்களுடன் மிக நேர்த்தியாகப் படம்பிடித்துள்ளார் நூலாசிரியர். மதுரையின் வரலாற்றிலும், சமூகச் சீர்திருத்தப் பயணங்களிலும் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய ஒரு மிக முக்கிய வரலாற்று ஆவணம் இந்நூல். கேட்டி வில்காக்ஸ்: மேற்கிலிருந்து வந்த செம்பரிதி ஆசிரியர்: சித்திரவீதிக்காரன் வெளியீடு: மதுரா பதிப்பகம், மதுரை. விலை: ₹35/- தொடர்புக்கு: 9047117841

கடத்தல்காரர்களால் கனவுகளை இழந்து பகடைக்காய்களாக்கப்படும் குழந்தைகளின் கதை! - எம்.ஜே.பிரபாகர்

“குழந்தைகளுக்கான உலகத்தை வெறும் கற்பனைக் கதைகளால் மட்டுமே நிரப்பாமல், அவர்களைச் சுற்றியுள்ள சமூக எதார்த்தங்களையும் அவர்களுக்குப் புரியும் மொழியில் கடத்த வேண்டும்” என்ற உன்னத நோக்கில் வெளிவந்துள்ளது சாகித்திய அகாடமி விருது பெற்ற முன்னணி எழுத்தாளர் யெஸ். பாலபாரதி அவர்களின் “பகடை - தொலைந்தவர்களைத் தேடி” என்ற சிறுவர் நாவல். மாயம், மந்திரம், ராஜா-ராணி கதைகள் மற்றும் வெற்று நீதி போதனைகளுக்குள் சுருங்கிவிட்ட இன்றைய சிறுவர் இலக்கியச் சூழலில், சமகாலச் சிக்கல்களையும் எளிய மனிதர்களின் வாழ்வியலையும் பேசும் மிக முக்கியமானதொரு படைப்பாக இது தனித்து நிற்கிறது. நம் சமூகக் கட்டமைப்பில் விளிம்புநிலை மனிதர்கள், குறிப்பாக மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் எவ்வாறு அதிகார வர்க்கத்தாலும் கடத்தல்காரர்களாலும் தங்களின் கல்வியையும் கனவுகளையும் இழந்து “பகடைக்காய்களாக” மாற்றப்படுகிறார்கள் என்பதை இந்நூல் நெஞ்சைத் தொடும் வகையில் விவரிக்கிறது. கதையில் வரும் சிறுவர் கதாபாத்திரங்கள் வறுமையிலும் தங்களின் சுயமரியாதையையும், அறிவுக் கூர்மையையும் விட்டுக் கொடுக்காதவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பேசும் வட்டார மொழி, குறும்புத்தனம் மற்றும் இக்கட்டான சூழலில் அவர்கள் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் வாசகர்களைக் கதையோடு அப்படியே ஒன்றச் செய்கின்றன. இந்நாவலில் வரும் ஆசிரியர் பாத்திரப் படைப்பு, “அடடா, இப்படியும் ஓர் ஆசிரியரா!” என வாசகர்களை வியக்க வைக்கும் அதே வேளையில், நிஜ உலகிலும் வாழும் அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்களை நம் கண்முன்னே நிறுத்துகிறது. அதிகார வர்க்கம் எளியவர்களை எப்படித் தன் சுயலாபத்திற்காகப் பயன்படுத்துகிறது என்ற சமூக ஒடுக்குமுறையைக் குழந்தைகளின் மனதில் பதியும் வண்ணம் கதையின் போக்கிலேயே கடத்தியிருப்பது எழுத்தாளரின் அசாத்திய எழுத்தாளுமையைக் காட்டுகிறது. அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பான திருப்பங்களும், எளிய தமிழ் நடையும் இந்நூலின் மிகப்பெரிய பலமாகும். ஒவ்வொரு அத்தியாயத்தின் மொத்தக் காட்சிகளையும் அழகிய சித்திரங்களாகத் தீட்டியுள்ள ஓவியரின் பங்களிப்பும் இந்நூலில் பெரிதும் குறிப்பிடத்தக்கது. “பகடை” நாவல் சிறுவர்களுக்கானது மட்டுமல்ல; பெரியவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று. குழந்தைகளிடம் மனிதாபிமானத்தையும், சக மனிதர்கள் மீதான நேயத்தையும், விழிப்புணர்வையும் வளர்க்க விரும்பும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்த நூலை நிச்சயம் குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கலாம். புக் ஃபார் சில்ட்ரன் பதிப்பகம் இத்தகைய அரிய சமூக விழிப்புணர்வுப் படைப்பை மிகத் தரமாகக் கொண்டு சேர்த்துள்ளது பாராட்டுக்குரியது. பகடை தொலைந்தவர்களைத் தேடி ஆசிரியர்: யெஸ். பாலபாரதி வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன் (பாரதி புத்தகாலயம்) விலை: ₹110/- தொடர்புக்கு: 9444567935

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.