நூலாற்றுப் படை
5 Jul 2026, 9:20 pm

நூலாற்றுப் படை

முதலாளித்துவத்தின் முகமூடியைக் கிழிக்கும் தத்துவாயுதம்! - எஸ். பாலா

2008 உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்கள் முதலாளித்துவத்தின் சுரண்டலைப் புரிந்து கொள்ள மீண்டும் காரல் மார்க்ஸின் ‘மூலதனம்’ நூலை நோக்கித் திரும்பி யுள்ளனர். இந்தச் சூழலில், மூலதனம் நூலின் தேவையை 21ஆம் நூற்றாண்டின் நவீன மொழியியல் மற்றும் பொருளாதாரப் பின்புலத்தில் ஆராய்கிறது சு. அருண் பிரசாத் தொகுப்பில் வெளிவந்துள்ள ‘மார்க்ஸ் மூலதனம் 21ஆம் நூற்றாண்டு தொகுப்பு’ என்னும் நூல். பேராசிரியர்கள் பால் ரைட்டர் மற்றும் பால் நார்த் ஆகிய இருவர் இணைந்து, காலத்திற்கேற்ப அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சியால் மொழியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில், மூலதனத்தின் நான்காவது புதிய ஆங்கில மொழிபெயர்ப்பைத் தந்துள்ளனர். அந்தப் புதிய மொழிபெயர்ப்பின் சவால்கள், அதன் அவசியம் குறித்த அவர்களின் விரிவான நேர்காணல் மற்றும் சு. அருண் பிரசாத், பால் ரைட்டர் ஆகியோரின் காத்திரமான கட்டுரைகள் இந்நூலின் உள்ளடக்கமாக அமைந்துள்ளன. மார்க்சின் சிந்தனை வீச்சையும், மூல நூலின் நேர்த்தியையும், அதில் அவர் வெளிப்படுத்தும் நகைச்சுவை உணர்வையும் இப்பதிப்பு துல்லியமாக மீட்டெடுத்துள்ளது. 1991 உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரத்தில் ஏற் பட்டுள்ள மாற்றங்கள், மூலதனத் திரட்சி, இயந்திரங்களின் ஆதிக்கம் மற்றும் அரசுகளின் ஆதரவோடு கார்ப்பரேட்டுகள் நடத்தும் உழைப்புச் சுரண்டல் ஆகியவற்றை ஆழமாகப் புரிந்துகொள்ள மூலதனம் நூல் இன்றைக்கும் நமக்கு ஒளிபாய்ச்சுகிறது. இயற்கையைச் சுரண்டிப் பூவுலகின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் முதலாளித்துவச் சூழலில், உலகின் ஆகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க் போன்றவர்கள் உருவாவதன் பின்னணியில் இருக்கும் வர்க்கச் சுரண்டலை இந்நூல் அம்பலப்படுத்துகிறது. முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த நெருக்கடிகளையும் அதன் உறிஞ்சும் தன்மையையும் தற்காலப் பின்னணியில் விளக்கும் இந்நூல், உழைக்கும் வர்க்க மும் இன்றைய இளைஞர்களும் அவசி யம் கையில் ஏந்த வேண்டிய 21ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய தத்துவாயுத மாகும்.

விடாமுயற்சியின் மூலம் வெற்றியைப் போதிக்கும் புதிய தலைமுறைக்கான நூல்!

“கடவுளை அழைப்ப தால் கிடைக்காத வெற்றி விடாமுயற்சியின் மூலம் கிடைக்கும்” என்ற ஆழமான வாழ்வியல் விழு மியங்களை உலகப் பொது மறையான திருக்குறளின் கருத்துக்கள் வழியே குழந்தைகளுக்குக் கடத்து கிறது எழுத்தாளர் கோ கிலா எழுதிய ‘திருக்குறள் கதைகள்’ என்னும் நூல். குறள்க ளையும் அதன் ஆழமான பொரு ளையும் நேரடியாகப் படிப்பது குழந்தைகளுக்குச் சவாலாக இருக்க லாம். ஆனால், அவற்றை எளிய கதைகள் மூலம் சொல்லும்போது, அறநெறிக் கருத்துக்கள் அவர்க ளின் பிஞ்சு மனங்களில் எளிதில் பதியும் என்ற நோக்கில் இந்நூல் மிக அருமையாக வடிவமைக் கப்பட்டுள்ளது. நூலாசிரியர் கோகிலா அவர்கள், 10 முக்கியத் திருக்குறள்களைத் தேர்வு செய்து, அக்குறள்களுக்கான கதைகளைக் குழந்தைகளுக்கான எளிய மொழியில் படைத்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதாகும். புத்த கத்தின் அட்டைப்படம் மிகவும் நவீன மாகவும், குழந்தைகளைக் கவரும் வகையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது. திருவள்ளுவரை ஒரு நவீன காலத் தாத்தா போன்ற தோற்றத்தில், சிறுமியுடன் நடந்து செல்வது போலச் சித்தரித்திருப்பது, திருக்குறள் இன்றைய காலத்தி ற்கும் பொருந்தக்கூடியது என்பதை நுணுக்கமாக உணர்த்துகிறது. அட்டைப் படத்திலும் நூலின் அனைத்துக் கதைகளிலும் பயன் படுத்தப்பட்டுள்ள ‘Geom etric art’ (கோண வடிவ ஓவியம்) பாணி, இது ஒரு வழக்கமான பழைய பாணி புத்தகமல்ல, மாறாகப் புதிய தலைமுறைக்கான நவீனப் புத்தகம் என்ற உணர்வைத் தருகிறது. குழந்தைகளுக்குத் தமிழ் மொழியின் மீதும், ஒழுக்க நெறி களின் மீதும் ஈடுபாட்டை வளர்க்க விரும்பும் பெற்றோர் மற்றும் ஆசிரி யர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு சிறந்த தேர்வாகும். 7 வயதுக்கு மேற் பட்ட குழந்தைகள் தாங்களாகவே வாசித்துப் பழகவும், கதைகளின் வழியே ஒழுக்க நெறிகளைக் கற்றுக் கொள்ளவும் இந்த நூல் பெரிதும் உதவும். நூல்: திருக்குறள் கதைகள் ஆசிரியர்: எழுத்தாளர் கோகிலா வெளியீடு: ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம், சென்னை. விலை: ரூ.120/- தொடர்புக்கு: 9600398660, 7550098666

சாவித்திரிபாய் புலே: நம் நாட்டின் கல்வி வரலாற்றை மாற்றியவர்!

இந்தியாவின் சமூகச் சீர்திருத்த வரலாற்றில் மிக முக்கியமான ஒரு ஆளுமையைப் பற்றிய விரிவான ஆவணமாகத் திகழ்கிறது எழுத்தாளர் சஹானா எழுதிய ‘சாவித் திரிபாய் புலே (முதல் பெண் ஆசிரியரின் அசாதாரண பயணம்)’ என்னும் நூல். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர், நவீனக் கல்வி யின் தாய் என்று போற்றப்படும் சாவித்திரிபாய் புலேவின் வாழ்க்கையை எளிய நடையில் அதே சமயம் ஆழ மான வரலாற்றுத் தரவுகளுடன் இந்த நூல் முன்வைக்கிறது. 19-ஆம் நூற்றாண்டில் ஒரு பெண் கல்வி கற்பதே பாவம் என்று கருதப்பட்ட காலத்தில், சாவித்திரிபாய் சந்தித்த சவால்களையும், அவர் மேற்கொண்ட போராட்டங்களையும் இந்நூல் அழகா கப் பதிவு செய்துள்ளது. அவர் பள்ளி க்குச் செல்லும்போது, அவர் மீது சாணம் மற்றும் கற்கள் வீசப்பட்ட வலியை ஒரு பெண்ணின் கோணத்தில் இருந்து நூலாசிரியர் சஹானா விவரிக்கும் விதம் வாசகர்களின் மனதைத் தொடு கிறது. வெறும் தகவலாக மட்டும் இல்லா மல், அனைவருக்கும் கல்விக்கான போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் உணர்ச்சிப்பூர்வமான சித்திரமாக இந்நூல் அமைந்துள்ளது. சாவித்திரிபாய் புலே வெறும் ஆசிரியராக மட்டுமல்லாமல், விதவை களின் மறுவாழ்வுக்காகவும், பெண் சிசுக்கொலைக்கு எதிராகவும் போரா டியவர். சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்த பெண்களுக்காக அவர் தொடங்கிய ‘பால்தியா பிரதிபந்தக் கிரிஹா’ போன்ற அமைப்புகளைப் பற்றி இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. மேலும், ஜோதிராவ் புலே மற்றும் சாவித்திரிபாய் இருவருக்கும்இடையிலான புரிந்துணர்வையும், ஒரு பெண் முன்னேற வீட்டிலுள்ள ஆண்களின் ஒத்துழைப்பு எவ்வளவு அவசியம் என் பதையும் நூல் மிகச் சிறப்பாகச் சுட்டிக்காட்டுகிறது. ஒரு வரலாற்றுப் புத்தகத்தைப் படிப்பது போன்ற அலுப்பு தட்டாமல், ஒரு நாவலைப் படிக்கும் வேகத்தில் வாசகர்களைக் கொண்டு செல்லும் வகையில் எழுத்தாளர் சஹானாவின் எழுத்து நடை மிகவும் சரளமாக அமைந்துள்ளது. இன்று நாம் அனு பவிக்கும் கல்வி உரிமைக்கு பின்னால் எவ்வளவு பெரிய தியாகம் இருக்கிறது என்பதை நமக்கு உணர்த்தும் இப் புத்தகம், இளம் தலைமுறையினர் குறிப்பாக மாணவ-மாணவிகள் கட்டா யம் வாசிக்க வேண்டிய ஒரு சமூக மாற்றத்திற்கான விதையாகும். நூல்: சாவித்திரிபாய் புலே (முதல் பெண் ஆசிரியரின் அசாதாரண பயணம்) ஆசிரியர்: சஹானா வெளியீடு: ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகம், சென்னை. விலை: ரூ.125/- தொடர்புக்கு: 9600398660, 7550098666

மருத்துவத்தில் நோபல் பரிசு பெற்ற பெண் அறிவியலாளர்களின் போராட்ட வரலாறு! - எம்.ஜே.பிரபாகர்

அறிவியல் உலகி னைத் தமிழ்ச் சூழ லில் எளிமையாகவும் சுவா ரசியமாகவும் அறிமுகப் படுத்தும் ஒரு மிகச்சிறந்த படைப்பாக வெளிவந்துள் ளது எழுத்தாளர் வெண்பா எழுதிய ‘வாகை சூடிய விஞ்ஞானிகள்’ என்னும் நூல். இன்று நமக்கு மிக எளிதாகக் கிடைக்கும் மருந்துகளுக்கும் நவீன சிகிச்சை முறைகளுக்கும் பின்னால் இருக்கும் அறிவியல் சமூகத்தின் உழைப்பையும், அளப்பரிய அர்ப்ப ணிப்பையும் இந்நூல் அற்புதமாக விவரிக்கிறது. இயற்பியல், வேதியியல், மருத்து வம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி எனப் பல்வேறு துறைகளில் தடம் பதித்து நோபல் பரிசு வென்ற பெண் ஆளுமைக ளின் எண்ணிக்கை 65 ஆகும். இதில், மருத்துவம் சார்ந்த நோபல் பரிசினை வென்ற 13 பெண் அறிவியலா ளர்களின் போராட்ட வாழ்க்கையை யும், மனித இனத்திற்காக அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பையும் இந்நூல் மிக விரிவாகப் பேசுகிறது. ஆண் ஆதிக்கமிக்க அறிவியல் உலகில், அடுக்கடுக்கான சமூகச் சவால்களை யும், தோல்விகளையும், வறுமையை யும் கடந்து அவர்கள் எப்படிச் சாதனை படைத்தார்கள் என்பதைப் பெயருக்கேற்றார் போல ‘வாகை சூடிய’ வரலாறாக ஆசிரியர் வடித்திருக்கிறார். சிக்கலான அறிவியல் கோட்பாடுகளைக் கூட சாதா ரண வாசகர்களும் மாண வர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் வெண்பா விளக்கி யுள்ளார். அறிவியலா ளர்களை வெறும் அறிவுஜீவி களாகக் காட்டாமல், நம்மைப் போன்ற எளிய மனிதர்களாகச் சித்த ரித்திருப்பது வாசகர்களுக்கு நெருக்கமான உணர்வைத் தருகிறது. ஒவ்வொரு சாதனையாளரின் கதை யும் ஒரு விறுவிறுப்பான சிறுகதை யைப் போலத் தொடங்குவது வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டுகிறது. பள்ளி நூலகங்களிலும், ஒவ்வொரு இல்லத் திலும் இருக்க வேண்டிய இப்புத்தகம், இளைய தலைமுறைக்கு அறிவிய லின் மீது காதலை உண்டாக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாகும். நூல்: வாகை சூடிய விஞ்ஞானிகள் ஆசிரியர்: வெண்பா வெளியீடு: ஹெர் ஸ்டோரிஸ், சென்னை. விலை: ரூ.240/- தொடர்புக்கு: 9600398660