தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இயங்காத பேருந்துகளும் எட்டாக்கனியாகும் மருத்துவமும் கிருஷ்ணகிரி மலை கிராம மக்களின் கண்ணீர் போராட்டம்!

11 Mar 2026, 4:32 pm
இயங்காத பேருந்துகளும் எட்டாக்கனியாகும் மருத்துவமும் கிருஷ்ணகிரி மலை கிராம மக்களின் கண்ணீர் போராட்டம்!
<p><strong>இயங்காத பேருந்துகளும் எட்டாக்கனியாகும் மருத்துவமும் கிருஷ்ணகிரி மலை கிராம மக்களின் கண்ணீர் போராட்டம்!</strong></p> <p>கிருஷ்ணகிரி, மார்ச் 11- நவீனத் தொழில்நுட்பங்களும் அதிவேகப் போக்குவரத்துகளும் வளர்ந்துவிட்ட இந்தத் தலைமுறையிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள், ஒரு அரசு பேருந்திற்காகவும், காய்ச்சல் மருந்துக்காகவும் தினந்தோறும் உயிர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து முடக்கம்: &nbsp;ரூ.80 கட்டணச் சுமை பெட்டமுகிலாலம் மற்றும் கொடகரை உள்ளிட்ட சுமார் 55 மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மற்றும் பின்தங்கிய மக்கள், தேன்கனிக்கோட்டைக்குச் செல்ல போதிய பேருந்து வசதி இன்றித் தவிக்கின்றனர். பெட்டமுகிலாலம் வரை காலை, மாலை என இருமுறை மட்டுமே நகரப் பேருந்து இயக்கப்படுகிறது. அங்கிருந்து 16 கி.மீ தொலைவிலுள்ள கொடகரைக்குச் சாலை வசதி இருந்தும் பேருந்துகள் விடப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் வனத்துறை வாகனங்களில் தலா 80 ரூபாய் கட்டணம் செலுத்திப் பயணிக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மருத்துவ வசதி இன்றிப் பறிபோகும் உயிர்கள் இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாதது மிகப்பெரிய சாபக்கேடாக மாறியுள்ளது. தலைவலி, காய்ச்சல் போன்ற சாதாரண பாதிப்புகளுக்குக்கூட 25 கி.மீ தொலைவிலுள்ள உளிசெட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத்தான் செல்ல வேண்டும். இதற்காக வாகன வாடகையாக மட்டும் 160 ரூபாய் வரை செலவாகிறது. மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், போக்குவரத்து வசதி இல்லாததால் பல கர்ப்பிணிகளுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்படுகிறது. இதனால் தாயும் சேயும் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. பெட்டமுகிலாலம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க 3 ஆண்டுகளுக்கு முன்பே பரிந்துரை அனுப்பப்பட்டும், இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விதிமுறைகளில் பாரபட்சமா? ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க 30,000 மக்கள் தொகை இருக்க வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டாலும், ஜமுனாமரத்தூர் போன்ற மலைப்பகுதிகளில் குறைந்த மக்கள் தொகை கொண்ட இடங்களிலேயே மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. மலைப்பகுதி கிராமங்களுக்கு மக்கள் தொகை விதியில் விலக்கு உண்டு என்பது தெரிந்தும், மாவட்ட நிர்வாகம் மெத்தனம் காட்டுவது அப்பகுதி மக்களைத் தண்டிப்பதாக உள்ளது எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கோரிக்கை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பெட்டமுகிலாலம் மற்றும் கொடகரை பகுதிகளுக்குப் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைக்க வேண்டும். மேலும், மலை கிராமங்களுக்குக் கூடுதல் அரசு பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. &nbsp;-ஒய்.சந்திரன்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.